பயனுள்ள இயற்கை மருத்துவ குறிப்புகள்..!

Arokiya Kurippugal In Tamil

உடலை பாதுகாக்க பல இயற்கை மருத்துவ டிப்ஸ்..! Iyarkai Maruthuva Kurippugal In Tamil..! 

Arokiya Kurippugal In Tamil: வணக்கம் நண்பர்களே..! இன்றைய பதிவில் உடலை பாதுகாப்போடு வைத்து கொள்வதற்கு பல இயற்கை மருத்துவ டிப்ஸ்களை பார்க்கலாம். நம் உடல் ஆரோக்கியமானது நாம் எடுத்துக்கொள்ளும் உணவில் தான் இருக்கிறது என்று பலருக்கும் தெரிகிறது இல்லை. நமது உடலை செயற்கையான வழிகளில் இல்லாமல் இயற்கையான வழி முறைகளில் எப்படி பாதுகாக்கலாம் என்று விரிவாக படித்து அறியலாம் வாங்க..!

newநம் உடலில் ஏற்படும் நோய்களும் அதன் அறிகுறிகளும்..!

வயிற்றில் உள்ள அமில சுரப்பி குறைய:

Arokiya Kurippugal In Tamilவயிற்று பகுதிகளில் அமில சுரப்பி குறைவதற்கு உணவருந்திய பிறகு தினமும் தண்ணீரில் சிறிதளவு கருப்பட்டியினை கரைத்து குடித்து வரவும். இதனால் அமில சுரப்பி வருவதை தடுக்கலாம்.

தொண்டை புண் முற்றிலும் குணமாக:

தொண்டை புண்' தாங்க முடியாத வலியா.? குணமாக மூலிகை மருத்துவம்.. - Tamil Express News | DailyHuntசிலருக்கு கார உணவுகளை அதிகம் சாப்பிடுவதால் தொண்டையில் புண் ஏற்படும். அந்த தொண்டை புண் விரைவில் குணமாக துளசி இலைகள் போடப்பட்ட நீரை தினமும் குடித்து வந்தால் தொண்டையில் ஏற்பட்ட புண்கள் முற்றுலுமாக நீங்கிவிடும்.

உடல் பருமன் குறைய:

Arokiya Kurippugal In Tamilசிலர் உடல் எடை அதிகமாக இருப்பதால் உடலை நினைத்து மிகவும் வருந்துவார்கள். இந்த நிலையை போக்குவதற்கு கருமிளகு தூள் 1/4 தேக்கரண்டி, எலுமிச்சை சாறு 3 தேக்கரண்டி, தேன் 1 தேக்கரண்டி மூன்றையும் நீரில் நன்றாக கலந்து உடல் எடை அதிகம் உள்ளவர்கள் 3-4 மாதம் வரை தொடர்ச்சியாக குடித்து வர விரைவில் உடல் எடை மாற்றம் அடையும்.

இதுமட்டும் இல்லாமல் 3-4 மாதங்கள் வரை காலை உணவிற்கு முன்பு தினமும் 1 தக்காளி சாப்பிட்டுவர உடல் எடையானது குறைவதை நீங்களே அறியலாம்.

அடுத்து உடல் எடையினை குறைப்பதற்கு முழுமையாக வளர்ந்த கருவேப்பிலை இலையினை 10 முதல் 12 இலைகளை சாப்பிட்டு வர 3 அல்லது நான்கே மாதங்களில் உடல் எடை முற்றிலுமாக மெலிவடைந்து விடும்.

newமலர்களும் அதன் மருத்துவ பயன்கள்..!

உடல் ஆரோக்கியமாக இருக்க:

Arokiya Kurippugal In Tamilஉடலை எப்போதும் ஆரோக்கியத்துடன் வைத்து கொள்வதற்கு அரிசி வகையான உணவுகள், உருளை கிழங்கு போன்றவைகளை தவிர்த்துக்கொள்வது நல்லது.

இதனால் உடலில் சிலருக்கு வாய்வு தொந்தரவுகள் கூட ஏற்பட வாய்ப்புள்ளது. இதற்கு மாறாக தினமும் கோதுமை சார்ந்த உணவுகளை எடுத்துக்கொள்ளலாம்.

இருமல் தொல்லையிலிருந்து விடுபட:

arokiya kurippugal in tamilகுளிர் நேரங்களில் மற்றும் சாதாரண நிலையில் சிலருக்கு வறட்டு இருமல் பிரச்சனை விடாது இருந்துகொண்டே இருக்கும். அதுபோன்று உள்ளவர்கள் 3 கப் அளவு நீரில் வெற்றிலையும், மிளகையும் நன்றாக கொதிக்கவைத்து குடித்துவர விடாமல் இருந்த இருமல் நோய் குணமாகும்.

பல் வலியை போக்கும் இயற்கை மருத்துவம்:

arokiya kurippugal in tamilபல் வலியால் அவதிப்படாதவர்கள் யாரும் இருக்கமாட்டார்கள். அப்படிப்பட்ட பல் வலி நீங்க துளசி இலை 2, உப்பு மற்றும் மிளகுத்தூள் சிறிதளவு எடுத்து மூன்றையும் சேர்த்து பல் வலி இருக்கும் இடத்தில் இதனை வைத்து அழு‌‌த்‌தி வரவேண்டும். இந்த முறையினை செய்து வந்தால் முற்றிலுமாக பல் வலி குறைந்து விடும்.

சருமத்தில் பரு, தழும்புகள் மறைய:

arokiya kurippugal in tamilசில பெண்களுக்கு முக அழகு கெடுவதே இந்த முக பருக்கள் மற்றும் தழும்புகள். இதற்காக பல கிரீம்களை பயன்படுத்தி மேலும் மேலும் முக அழகினை வீணடித்து கொள்கிறார்கள்.

முக பருவை இயற்கையான வழியில் மாற்ற குளிக்கின்ற நீரில் துளசி இலைகளை போட்டு குளித்துவர விரைவில் முக தழும்புகள், பரு மாற்றம் அடைந்துவிடும்.

குழந்தைக்கு ஏற்படும் காய்ச்சல் / இருமல் நீங்க:

arokiya kurippugal in tamilகுழந்தைகளுக்கு ஏற்படும் காய்ச்சல் மற்றும் இருமல் நீங்க நீருடன் சிறிதளவு தேன் கலந்து கொடுத்துவர விரைவில் காய்ச்சல் மற்றும் இருமல் நீங்கும்.

அதோடு குழந்தை உடல் நன்கு வலிமையோடு இருக்க கேரட் மற்றும் தக்காளி சாற்றுடன் சிறிதளவு தேன் சேர்த்து கொடுத்து வந்தால் குழந்தை உடல் வலிமையோடு இருக்கும்.

வயிற்று போக்கை குணப்படுத்தும் கொய்யா இலை:

arokiya kurippugal in tamilவயிற்று போக்கு பிரச்சனையை குணப்படுத்த கொய்யா இலைகளை சாப்பிட்டு வர வயிற்று போக்கு தொந்தரவு விரைவில் குணமாகும்.

உடலை பாதுகாக்க பல இயற்கை மருத்துவ குறிப்பு தங்களுக்கு பயனுள்ள வகையில் இருந்தால் மற்றவர்களுக்கும் ஷேர் செய்யவும்.

newநோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் உணவுகள்..! Immunity boosting foods..!

 

இதுபோன்ற உடல் நலம் மற்றும் ஆரோக்கியம் பற்றிய தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—>ஆரோக்கியமும் நல்வாழ்வும்