ஜாதிபத்திரி பயன்கள் மற்றும் ஜாதிபத்திரி சாப்பிடும் முறை | Jathipathri Uses in Tamil

Advertisement

ஜாதிபத்திரி மருத்துவம் | Jathipathri Benefits in Tamil | ஜாதிபத்திரி நன்மைகள்

Jathipathri Uses in Tamil:- இந்த உலகில் ஏராளமான மூலிகை பொருட்கள் இருக்கின்றன. அதிலும் நமது நாட்டில் தான் வியக்கவைக்கும் ஏராளமான மூலிகை செடிகள் வளர்கின்றன. அவற்றில் ஒன்று தான் ஜாதிபத்திரி. இது மிகவும் நல்ல வாசனையாக இருக்கும். இதன் காரணமாகவே உணவின் சுவை மற்றும் மனத்தை அதிகரிக்க ஜாதிபத்திரையை சிறிதளவு பயன்படுத்துவார்கள். மேலும் ஜாதிபத்திரியில் ஏராளமான ஊட்டச்சத்துக்கள் நிறைந்துள்ளது என்பதால் பலவகையான ஆரோக்கிய பிரச்சனைகளுக்கு சிறந்த நிவாரணத்தை வழங்குகிறது. சரி இந்த பதிவில் ஜாதிபத்திரி பயன்கள் பற்றி படித்து தெரிந்து கொள்வோம் வாங்க.

100 கிராம் ஜாதிபத்திரில் உள்ள ஊட்டச்சத்துக்கள்:

100 கிராம் ஜாதிபத்திரி ஊட்டச்சத்துக்கள் 
கலோரிகள் 475
பைரிடாக்சின் 0.160 மில்லி கிராம்
ரிபோப்ளவின் 0.448 மில்லி கிராம்
தைமின் 0.312 மில்லி கிராம்
கார்போஹைட்ரேட் 50.50 கிராம்
புரோட்டீன் 6.71 கிராம்
கொழுப்பு 32.38 கிராம்
நார்ச்சத்து 20.2 கிராம்
போலேட் 76 மைக்ரோ கிராம்
நியசின் 1.350 மில்லி கிராம்
விட்டமின் சி 21 மில்லி கிராம்
சோடியம் 80 மில்லி கிராம்
பொட்டாசியம் 463 மில்லி கிராம்
கால்சியம் 252 மில்லி கிராம்
காப்பர் 2.467 மில்லி கிராம்
இரும்பு சத்து 13.90 மில்லி கிராம்
மக்னீசியம் 163 மில்லி கிராம்
மாங்கனீஸ் 1,500 மில்லி கிராம்
பாஸ்பரஸ் 110 மில்லி கிராம்
ஜிங்க் 2.15 மில்லிகிராம்

ஜாதிபத்திரி சாப்பிடும் முறை:

  • ஜாதிபத்திரியை தேங்காய் எண்ணெய் அல்லது வெண்ணெய் அல்லது எண்ணெய் போன்றவற்றில் சுட்டு சாப்பிடலாம்.
  • ஜாதிபத்திரியை தூள் செய்து, பால், தயிர் அல்லது தண்ணீரில் கலந்து குடித்து வரலாம்.
  • ஜாதிபத்திரியை சிறிதளவு எண்ணெயில் வறுத்து, சிறிது உப்பு சேர்த்து சாப்பிடலாம்

ஜாதிபத்திரி மருத்துவம் | Jathipathri Uses in Tamil 

உடலில் இரத்த ஓட்டத்தை அதிகரிக்க:-

Jathipathri Uses in Tamil:- ஜாதிபத்திரியில் உள்ள மாங்கனீஸ் உடலில் உள்ள கெட்ட நச்சுக்களை அலசி ஆராய்ந்து முழுமையாக வெளியேற்றுகிறது, இதனால் நமது இரத்த ஓட்ட மண்டலங்கள் மிகவும் சுறுசுறுப்பாக செயல்படுகிறது. மேலும் ஜாதிபத்திரியில் உள்ள இரும்பு சத்து உடலில் இரத்த ஓட்டத்தை அதிகளவு உற்பத்தி செய்ய பயன்படுகிறது. ஆகவே உடலில் இரத்த ஓட்டத்தை அதிகரிக்க நினைப்பவர்கள் ஜாதிபத்திரியை உணவில் சேர்த்த கொல்வதன் மூலம் இரத்த ஓட்டத்தை அதிகரிக்கலாம்.

பசியை தூண்டும் மருந்து:

 pasi edukka tips i

Jathipathri benefits in tamil:- ஜாதிபத்திரி பயன்கள்: உடல் எடையை அதிகரிக்க நினைப்பவர்கள், பசி என்கிற உணர்வே இல்லாதவர்கள், சரியாக சாப்பிடாத குழந்தைகள் ஆகியவர்களுக்கு ஜாதிபத்திரி சிறந்த மருந்தாகும். அதாவது ஜாதிபத்திரியில் உள்ள ஜிங்க் பசியை தூண்டும் பொருளாக செயல்படுகிறது. எனவே ஜாதிபத்திரியை உணவில் சேர்த்து வந்தால் பசி ஏற்பட்டு நேர நேரத்துக்கு சரியாக சாப்பிடுவார்கள்.

மன அழுத்தம் குறைய:

இப்போது உள்ள காலகட்டத்தில் பலவிதமான காரணங்களினால் மன அழுத்த பிரச்சனை ஏற்படுகிறது. இந்த மன அழுத்தம் நீங்க ஜாதிபத்திரியில் உள்ள விட்டமின் பி உதவுகிறது. மேலும் இவற்றில் உள்ள  நியசின், தைமின் மற்றும் ரிபோப்ளவின் போன்றவை மன அழுத்தத்தை குறைத்து நம் மனதில் உள்ள பயத்தை போக்குகிறது.

தூக்கமின்மை நீங்க:

ஜாதிபத்திரி தூக்கமின்மை பிரச்சனைக்கு சிறந்த சிகிச்சையினை அளிக்கின்றது. அதாவது இவற்றில் உள்ள மக்னீசியம் நரம்புகளை அமைதிப்படுத்தி செரோடோனின் ஹார்மோனை (Serotonin Hormone) சுரக்க செய்கின்றது. இதன் காரணமாக தங்களுக்கு நிம்மதியான தூக்கத்தை வழங்கும்.

இருமல் சரியாக:

இப்போதெல்லாம் அனைத்து காலங்களிலும் திடீர் திடீர் என்று காய்ச்சல், இருமல், தும்மல், சளி இது போன்ற பிரச்சனைகள் ஏற்படுகின்றது இவற்றை குணப்படுத்த ஜாதிபத்திரியை பயன்படுத்தி கஷாயம் செய்து சாப்பிட்டு வந்தால் பிரச்சனை சீக்கிரம் குணமாகும்.

ஜாதிக்காய் பயன்கள் | Jathikai Uses in Tamil

 

ஜீரண சக்தி அதிகரிக்க:

jeranamsakthi athikarika

ஜாதிபத்திரியில் உள்ள அதிகப்படியான நார்ச்சத்துக்கள் உடலில் ஜீரணம் சக்தியை அதிகரிக்க பயன்படுகிறது. வயிறு வீக்கம், வாய்வுத் தொல்லை போன்ற பிரச்சனைகளை சரி செய்கின்றது. மலம் கழித்தலை இலகுவாக்குகிறது. வாந்தி, வயிற்று போக்கு போன்றவற்றை குணப்படுத்துகிறது.

சிறுநீரகம் ஆரோக்கியமாக இருக்க:

சிறுநீரகம்

சிறுநீரகம் சார்ந்த பிரச்சனை உள்ளவர்கள் இந்த ஜாதிபத்திரையை உணவில் சேர்த்து கொள்வதன் மூலம் சிறுநீரகத்தில் ஏற்படும் அனைத்து பிரச்சனைகளும் குணமாகும். சிறுநீரில் ஏற்படும் சிறுநீரக கற்களை கரைக்கிறது. இதனால் சிறுநீர் எளிதாக வெளியேற்றப்படுகிறது. இதற்கு காரணம் என்ன என்றால் ஜாதிபத்திரியில் உள்ள  மக்னீசியம், கால்சியம் சத்துக்கள் தான். மேலும் சிறுநீரக தொற்றையும் தடுக்கிறது.

உடல் வலிக்கு நிவாரணம்:

body pain

குறிப்பாக ஜாதிபத்திரி சிறந்த வலி நிவாரணமாக பயன்படுத்தப்படுகிறது. அதாவது  காயங்களில் ஏற்படும் வலி, தசைகள் பிடிப்பு, அழற்சி போன்ற வலிக்கு நல்ல நிவாரணம் அளிக்கிறது.

இதுபோன்ற உடல் நலம் மற்றும் ஆரோக்கியம் பற்றிய தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> ஆரோக்கியமும் நல்வாழ்வும்
Advertisement