நீங்கள் பயன்படுத்துவது கடுகு தானா என்று எப்படி தெரிந்துகொள்வது.?

kadugu benefits in tamil

சமையலுக்கு உதவும் கடுகு எப்படி இருக்கும் தெரியுமா.?

வணக்கம் நண்பர்களே இன்று நம் பொதுநலம்.காம் பதிவில் சமையலுக்கு பயன்படுத்தும் Orginal  கடுகை பற்றித்தான் தெரிந்து கொள்ளப்போகிறோம். கடுகு எந்தளவிற்கு சிறிதாக இருந்தாலும் அதன் நன்மைகள் மட்டும் குறைந்து போவதில்லை. ஆனால் இப்போது பாலில் இருந்து மருந்து பொருட்கள் வரைக்கும் கலப்படத்தில் தான் இருக்கிறது. அதாவது நம் சமைக்கும் உணவுகளான  குழம்பு, வறுவல் போன்றவற்றில் தாளிப்பதற்கு கடுகு சேர்க்கிறோம். ஆனால் அது கடுகுதானா என்று யாருக்கும் தெரிவதில்லை. கடுகுகளில் கூட கலப்படம் செய்யப்படுகிறது. இதனால் உடல்நலமும் பாதிக்கப்படுகிறது.  நம் வீட்டில் உபயோகிக்கும் பொருட்களில் கலப்படம் இருப்பதை நாமே கண்டுபிடிக்கலாம் வாங்க.

கடுகு எண்ணெய் மருத்துவ பயன்கள்

அசல் கடுகு | Orginal Mustard:

சமையலில் உபயோகிக்கும் கடுகு கலப்படம் இல்லாத கடுகா  என்பதை பற்றியும், இதனால்  உடலிற்கு ஏற்படும் பாதிப்பு பற்றியும் பார்க்கலாம். முதலில் கலப்படம் இல்லாத கடுகின் நன்மைகள் பற்றி சுருக்கமாக பார்க்கலாம்.

கடுகை நம் உணவில் தவிர்க்கவே முடியாத ஒன்று. அதுவும் தென்னிந்திய சமையலில் இந்த கடுகிற்கு முக்கியமான ஒரு இடமுண்டு. கடுகு சேர்ப்பதன் மூலம் செரிமானம் சம்மந்தப்பட்ட பிரச்னைகள் இருக்காது என்றும் சொல்லப்படுகிறது.

கடுகை உணவில் சேர்ப்பதன் மூலம் உடல் எடையை குறைப்பதற்கும், வாதநோய்களை குணமாக்கும். கொழுப்பை கட்டுப்படுத்தவும் உதவுகிறது.

கலப்படம் செய்யப்பட்ட கடுகு:

கடுகில் இரண்டு விதமான பொருட்களை சேர்த்து கலப்படம் செய்யப்படுகிறது. அவை  தரம் குறைந்த கேழ்வரகு  மற்றும் ஆர்ஜிமோன் விதைகள்  இவை இரண்டையும் சேர்த்து கலப்படம் செய்யப்படுகிறது.

கலப்படம் செய்யப்பட்ட கடுகை கண்டுபிடிக்க கடுகை ஒன்றை எடுத்து கையில் நசுக்கி பார்த்தால் அதன் உள்பகுதி மஞ்சள் நிறத்தில் இருக்கும். இதன் மூலம் orginal   கடுகா என்பதை அறியலாம்.

ஆர்ஜிமோன் விதைகளை கடுகோடு கலப்படம் செய்திருப்பதை சுலபமாக கண்டுபிடிக்கலாம். அதாவது ஆர்ஜிமோன் விதைகள் கையில் வைத்து பார்த்தால் சொரசொரப்பாக இருக்கும். அப்படி கண்டுபிடிக்க தெரியவில்லை என்றால் ஒரு டம்ளரில் தண்ணீர் ஊற்றி அதில் அந்த கடுகை தண்ணீரில் சேர்க்கும் பொழுது கடுகு நீரில் மூழ்கிவிடும். ஆர்ஜிமோன் விதைகள்  கலப்படம் செய்த  கடுகு  தண்ணீருக்கு மேல் மிதக்கும்.

கேழ்வரகு:  

கடுகில் கேழ்வரகு  சேர்ப்பதனால் எந்தவித பக்கவிளைவுகளும் ஏற்படாது. ஆனால் கடுகு செய்யும் வேலையை இந்த கேழ்வரகால் செய்யமுடியாது.  கடுகில் கிடைக்க கூடிய நன்மைகள் நமக்கு கிடைக்காது என்றும் சொல்லப்படுகிறது.

ஆர்ஜிமோன் விதைகள்: 

அடுத்ததாக கடுகில்  கலப்படத்திற்கு ஆர்ஜிமோன் விதைகளை பயன்படுத்தப்படுகிறது. சிலர் இதனை உச்சி விதைகள் என்றும் சொல்வார்கள். இந்த ஆர்ஜிமோன் விதைகள் மோசமான பக்கவிளைவுகளை ஏற்படுத்தும் விதையாகும். ஆர்ஜிமோன் என்பது கடுகு செடியில் இருந்து  கிளையாக வரும் செடியாகும். கலப்படம் செய்ய விரும்புவர்கள் இந்த செடியை நீக்காமல் அதிக  இலாபத்திற்க்காக கடுகில் கலப்படம் செய்யப்பட்டு வருகிறது.

இதுபோன்ற உடல் நலம் மற்றும் ஆரோக்கியம் பற்றிய தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> Health Tips in Tamil