கர்ப்பிணி பெண்கள் தூங்கும் முறை | Karpini Pengal Thoongum Murai

தூங்கும் போது கர்ப்பிணி பெண்கள் கவனிக்க வேண்டியவை? | Pregnancy Tips Best Sleeping Positions in Tamil

கர்ப்பிணி பெண்கள் தூங்கும் முறை – கர்ப்பம் தரித்தவுடன் பெண்கள் உடலளவிலும் மனதளவிலும் தைரியமாகவும் விழிப்புடன் இருக்க அனைவரும் வலியுறுத்துவார்கள். கர்ப்ப காலத்தில் தூங்கும் போது பின்வரும் நிலைகளை பின்பற்றுவது மிகவும் அவசியம். கர்ப்பிணி பெண்கள் கர்ப்ப காலத்தில் தூக்க பிரச்சனைகளை சந்திக்கின்றனர். எனவே அதை சமாளிக்க அவர்கள் என்ன செய்யலாம் என்ற வழிமுறைகள் நாங்கள் இந்த பதிவில் பகிர்ந்துள்ளோம். அவற்றை படித்து தெரிந்துகொள்ளுங்கள்.

கர்ப்பிணி பெண்கள் தூங்கும் முறை – Karpini Pengal Thoongum Murai:

Pregnancy Tips Best Sleeping Positions

கர்ப்ப காலத்தில் எப்படி தூங்க வேண்டும் – முதல் மூன்று மாதம்:

முதல் மூன்று மாதங்கள் ஒரு கர்ப்பிணி பெண் தனக்கு வசதியாக இருக்கும் வகையில் தூங்கலாம். இருப்பினும், இரண்டாவது மற்றும் மூன்றாவது மாதங்களை எட்டும்போது தூங்கும் நிலைகளில் கவனமாக இருக்க வேண்டும். மருத்துவர்களின் கூற்றுப்படி, கர்ப்ப காலத்தில் பக்கவாட்டில் தூங்குவது சிறந்த தூக்க நிலை, ஏனெனில் இது கர்ப்பிணி பெண்களுக்கும், அவர்கள் வயிற்றில் வளரும் குழந்தைக்கும் இரத்த ஓட்டத்தை சீராக்குகிறது.

கர்ப்பிணிகள் தூங்கும் முறை – நான்காவது மாதம்:

நான்கு மாதங்கள் தொடங்கிய பின்னர் கருவின் வளர்ச்சி நாளுக்கு நாள் அதிகமாகிக் கொண்டிருக்கும் என்பதால் முன்புபோல் இயல்பாக படுக்க முடியாது. குறிப்பாக குப்புறப்படுத்து உறங்குவதை தவிர்க்க வேண்டும்.

கர்ப்பிணி பெண்கள் தூங்கும் முறை – ஆறாவது மாதம்:

நான்கு முதல் ஆறு மாதம் இரண்டாம் ட்ரைமெஸ்டர் எனப்படுகிறது. நான்காவது மாதத்தில் இருந்து தான் தாய்க்கும் குழந்தைக்கும் இடையில் தொப்புள் கொடி கொஞ்சம் கொஞ்சமாக வலிமை பெற்றிருக்கும். இதனால் மல்லாந்து படுப்பது கூடாது. மூன்றாம் ட்ரைமெஸ்டர் எனப்படும் ஏழு முதல் ஒன்பது மாதம் ஆகும். இந்த மாதத்தில் நாம் அலட்சியமாக படுத்தால் கருவில் உள்ள குழந்தைக்கு மூச்சுத்திணறல் ஏற்பட வாய்ப்புகள் அதிகம். எனவே கர்ப்பிணிகள் தூங்கும் போது மிகுந்த கவனத்தோடு இருக்க வேண்டும். வலது கை பக்கம் உறங்குவது கல்லீரலில் அழுத்தத்தை ஏற்படுத்தும் என்பதால் அப்படி படுப்பதை தவிர்த்து விடுங்கள்.

குழந்தை வளரும்போது கருப்பை விரிவடைகிறது. இது வயிறு மற்றும் முதுகு வலி ஏற்பட காரணமாக இருக்கிறது. எனவே நீங்கள் சரியான நிலையில் தூங்கினால் தான் இந்த அசவுகரியத்தை தவிர்க்க முடியும். மேலும் நரம்புகள் மற்றும் உடல் உள் உறுப்புகளின் அழுத்தத்தைக் குறைக்க உதவுகிறது. பெரும்பாலான மருத்துவர்கள் இடது பக்கம் திரும்பி தூங்குவது சிறந்தது என தெரிவிக்கின்றனர், அப்போதுதான் நஞ்சுக்கொடி மற்றும் உங்கள் குழந்தையை அடையும் இரத்தம் மற்றும் ஊட்டச்சத்துக்கள் இயக்கம் சீராக இயங்கும்.

 கர்ப்ப கால குறிப்புகள்:

1. உங்கள் முதுகில் உள்ள அழுத்தத்தைக் குறைக்க கால்களுக்கு இடையில் தலையணையை வைத்து கால்கள் மற்றும் முழங்கால்களை சரியாக வைத்து கொள்ளுங்கள்.

2. முதுகு வலியால் அவதிப்படுபவர்கள் நிவாரணம் பெற வயிற்றின் கீழ் தலையணையை வைத்து கொள்ளவும்.

3. தூங்கும் போது நெஞ்செரிச்சல் ஏற்பட்டால், தலையணையின் மேல் உடலை வைத்து கொள்ளலாம்.

4. கர்ப்பமாக இருக்கும் போது மூச்சு பிரச்சனைகளை அனுபவிக்கலாம். பக்கவாட்டில் படுத்து அல்லது தலையணை மீது முதுகை வைத்து தூங்கலாம்.

கர்ப்பிணி பெண்கள் சாப்பிடக்கூடாத பழங்கள்..!
கர்ப்ப கால உயர் இரத்த அழுத்தம் குறைய டிப்ஸ்..!
சுகப்பிரசவத்தின் அறிகுறிகள்
கர்ப்பகால சர்க்கரை நோய் வர காரணங்கள் மற்றும் தடுக்கும் வழிகள்..!
பிறக்கும் குழந்தை ஆணா பெண்ணா எளிதில் கண்டுபிடிக்க சில டிப்ஸ்..!
சூரிய கிரகணம் அன்று கர்ப்பிணி பெண்கள் வெளியே வரலாமா?

 

இதுபோன்ற உடல் நலம் மற்றும் ஆரோக்கியம் பற்றிய தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—>Health Tips in Tamil