உடலுக்கு பலமடங்கு ஆரோக்கியம் தரும் கருப்பட்டி பயன்கள்

Karupatti Benefits in Tamil

கருப்பட்டி பயன்கள் – Karupatti Benefits in Tamil

Karupatti Benefits in Tamil:- உணவே மருந்து என வாழ்ந்த கலாச்சாரங்களை மறந்து இப்பொழுது பல்வேறு ஆரோக்கிய பிரச்சனைகளை சந்தித்து வருகின்றோம். இதற்கு முக்கிய காரணமே நமது முறையற்ற உணவு பழக்கங்கள் தான். ஆகவே நமது உணவு முறைகளில் அதிக கவனம் செலுத்த வேண்டியது நமது கடமைகளில் ஒன்றாகும். இதற்கு நாம் என்ன செய்ய வேண்டும் என்றால்? நம் உடலுக்கு கேடு விளைவிக்கக்கூடிய உணவு பொருட்களை முற்றிலும் தவிர்த்து கொண்டு. உடலுக்கு என்றும் ஆரோக்கியம் அளிக்கக்கூடிய உணவுகளை பின்பற்றினாலே போதும். அந்த வகையில் இயற்கை நமக்கு அளித்த மிக பெரிய வரப்பிரசாதம் என்று கருப்பட்டியை சொல்லலாம். ஆம் கருப்பட்டியை நம் அன்றாட உணவு முறைகளில் சேர்த்து கொள்வதன் மூலம் ஏராளமான ஆரோக்கிய நன்மைகளை பெறமுடியும். சரி இந்த பதிவில் உடலுக்கு பலமடங்கு ஆரோக்கியம் வழங்கக்கூடிய கருப்பட்டி பயன்கள் பற்றி படித்தறியலாம் வாங்க.

வெள்ளை சக்கரை நல்லதா அல்லது நாட்டு சக்கரை நல்லதா?

கருப்பட்டி என்றால் என்ன?

Karupatti Benefits

பனை மரத்திலிருந்து கிடைக்கும் பனை நீரில் இருந்து கருப்பட்டி என்கிற வெல்லம் தயாரிக்கப்படுகிறது. இதனைப் பனைவெல்லம் என்றும் சொல்வார்கள். அதாவது பனைநீரை எடுத்து அவற்றை நன்றாகக் காய்ச்சினால் கருப்பட்டி கிடைக்கும்.

பல சுவாரசியமான செய்திகளுக்கு எங்கள் Telegram" சேனல Join" பண்ணுங்க: Pothunalam Telegram

கருப்பட்டி பயன்கள் – Palm Jaggery Benefits in Tamil

கல்லீரல் பிரச்சனை குணமாக:-

கல்லீரல் சார்ந்த பிரச்சனைகளுக்கு கருப்பட்டி மிகவும் சிறந்த மருத்துவ பலன்களை அளிக்கின்றது. அதாவது கல்லீரலில் சேரும் நச்சுக்களை வெளியேற்றி கல்லீரலின் செயல்பாட்டை அதிகரிக்க உதவுகிறது. எனவே கல்லீரல் சார்ந்த பிரச்சனை உள்ளவர்கள் கருப்பட்டியை தங்களது உணவுகளில் அதிகளவு சேர்த்து கொள்ளவும்.

இடுப்பு எலும்பு வலுப்பெற:-

ஒரே இடத்தில் அமர்ந்து வேலை பார்ப்பவர்களுக்கு இடுப்பு எலும்புகளில் அதிகளவு வலி ஏற்படும் அப்படிப்பட்டவர்கள் கருப்பட்டியில் செய்யக்கூடிய உணவுகளை அதிகளவு சாப்பிடுவதன் மூலம் இடுப்பு எலும்பு வலிமை பெரும். அதேபோல் பருவம் அடைந்த பெண்களுக்கு கருப்பட்டி மற்றும் உளுந்து சேர்த்து களி செய்து கொடுப்பதன் மூலம் இடுப்பு எலும்பு பலம் பெறுவதுடன் கருப்பை வலுப்பெறும்.

வறட்டு இருமல் குணமாக:-

குப்பைமேனி இலையுடன் கருப்பட்டியைச் சேர்த்து வதக்கிச் சாப்பிடுவதன் மூலம் தொடர்ச்சியாக ஏற்படும் வறட்டு இருமல், நாள்பட்ட சளித்தொல்லை போன்ற பிரச்சனைகள் சரியாகும். சர்க்கரைக்குப் பதில் கருப்பட்டியைப் பயன்படுத்துவதன் மூலம் பற்களும், எலும்புகளும் உறுதியாகும்.

இதய பாதுகாப்பிற்கு:-

கருப்பட்டியில் உள்ள பொட்டாசியம் சத்து இதய ஆரோக்கியத்தை பாதுகாக்கின்றது. அதாவது ரத்த அழுத்தத்தை குறைத்து அதன் மூலம் இதய பாதிப்பு ஏற்படாமல் தடுக்கிறது. மேலும் பொட்டாசியம் சத்து மூலம் நரம்பு மண்டலமும் ஆரோக்கியம் அடைகின்றது.

நீரிழிவு நோய்க்கு:-

நீரிழிவு நோய்

நீரிழிவு நோயாளிகள் கைக்குத்தல் அரிசி சாதத்துடன் கருப்பட்டி சேர்த்து சாப்பிடுவதன் மூலம் சர்க்கரையின் அளவு கட்டுபாட்டில் இருப்பதுடன் அடிக்கடி சிறுநீர் போவதும் குறையும்.

 

இதுபோன்ற உடல் நலம் மற்றும் ஆரோக்கியம் பற்றிய தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—>Natural health tips in tamil