Thalampoo (Kewra) Essence Benefits in Tamil | Kewra Water in Tamil
வணக்கம் நண்பர்களே.. இன்றைய பதிவில் தாழம்பூ ஆங்கிலத்தில் கீவ்ரா வாட்டர் என்று சொல்லக்கூடிய தாழம்பூ எசன்ஸ் பற்றிய பயன்களை தான் பார்க்கப்போகிறோம்.. தாழம்பூவில் நாம் நினைக்க முடியாத அளவிற்கு எண்ணற்ற மருத்துவ குணங்கள் அடங்கியுள்ளது. கீவ்ரா வாட்டர் என்று சொல்லக்கூடிய தாழம்பூ எசன்ஸ் பயன்கள் பற்றி படித்து தெரிந்துக்கொள்ளலாம் வாங்க..
தாழம்பூவில் ஏராளனமான ஆரோக்கிய நன்மைகள் அடங்கி இருக்கிறது. முக்கியமாக உடல் உஷ்னத்தை குறைக்கக்கூடியது. உடல் சூட்டினால் உடலில் பல்வேறு பிரச்சனைகள் ஏற்படக்கூடும். இதுபோன்ற தருணங்களில் தாழம்பூ எசன்ஸ் மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.
குங்குமப் பூ நன்மைகள் |
தாழம்பூ எசன்ஸ் எதற்கெல்லாம் பயன்படுகிறது? | Thalampoo Essence Uses in Tamil
சிலருக்கு உடல் எப்போதும் அதிக சூட்டுடன் இருக்கும். இதனால் அடிக்கடி எண்ணெய் குளியல் செய்வதை வழக்கமாக வைத்திருப்பார்கள். அப்படி இருந்தும் அவர்களுக்கு உடல் சூடு குறையாது. அப்படி இருப்பவர்கள் அதிக உடல் சூட்டினை குறைப்பதற்கு இந்த தாழம்பூ எசன்ஸை பயன்படுத்தலாம்.
உடல் சூட்டிற்கு பயன்படுத்தும் முறை:
- தாழம்பூ எசன்ஸ் – 1 ஸ்பூன்
- தண்ணீர் – 1 டம்ளர் அளவு
அதிக உடல் சூடு இருப்பவர்கள் 1 டம்ளர் அளவு தண்ணீரில் தாழம்பூ எசன்ஸை 1 ஸ்பூன் அளவு சேர்த்து கலந்து குடிக்கலாம். தண்ணீர் மட்டுமல்லாமல் ஜுஸில் கலந்தும் குடிக்கலாம்.
குழந்தைகளுக்கு உகந்ததா?
- இந்த தாழம்பூ எசன்ஸ் குழந்தைகளுக்கு கொடுக்கலாமா என்று கேட்டால் தாராளமாக கொடுக்கலாம். இரண்டு வயது குழந்தைகளிலிருந்து 1 சொட்டு, 2 சொட்டு முதல் தண்ணீரில் கலந்து கொடுத்து வரலாம்.
- உடலில் நீர்ச்சத்தினை அதிகரிக்கக்கூடியது இந்த தாழம்பூ எசன்ஸ். தாழம்பூ எசன்ஸ் சிக்கன்பாக்ஸ் நோயிலிருந்து முற்றிலும் நம்மை பாதுகாக்கக்கூடியது.
- அனைத்து நாட்டு மருந்து கடைகளிலும் எளிமையாக கிடைக்கக்கூடியது இந்த தாழம்பூ எசன்ஸ்..
தாழம்பூ எசன்ஸ் பயன்கள்/ Kewra Water Uses in Tamil:
- பன்னீரை எப்படி நாம் சரும அழகிற்கு பயன்படுத்துகிறோமா அது போன்று அதிக நறுமணம் கொண்ட தாழம்பூ எசன்ஸையும் நாம் பயன்படுத்தலாம்.
- எப்போதும் உடல் சூட்டை தனித்து உடலை குளிர்ச்சியாக வைத்திருக்க உதவுகிறது.
- அனைவருக்கும் நமது வீடானது நறுமணத்துடன் இருக்க வேண்டும் என்று நினைப்போம்.. வீடு நறுமணத்துடன் இருக்க வீட்டை நாம் துடைக்கும் போது நீரில் இந்த தாழம்பூ எசன்ஸை 2 சொட்டு சேர்த்து வீட்டை துடைத்தால் வீடு மிகவும் நறுமணத்துடன் இருக்கும். வீடுகளில் எறும்பு பூச்சிகள் வராமல் இருக்கும்.
- பண்டிகை காலங்களில், வரலட்சுமி விரதங்களில் இந்த தாழம்பூ எசன்ஸ் அதிகமாக பயன்படுத்துவார்கள்.
- உணவுகளில் பாயசம் என்றாலே சிறிய குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை விரும்பி சாப்பிடக்கூடிய ஒன்று. பாயசம் நன்கு வாசனையாக இருப்பதற்கு இந்த தாழம்பூ எசன்ஸை 2 சொட்டு சேர்த்து செய்தால் பாயசம் சாப்பிடுவதற்கு வித்தியாசமாகவும், டேஸ்டாகவும் இருக்கும்.
இதுபோன்ற உடல் நலம் மற்றும் ஆரோக்கியம் பற்றிய தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> | ஆரோக்கியமும் நல்வாழ்வும் |