சிறுநீரக பாதிப்பு அறிகுறி..! Symptoms of Kidney Failure in Tamil
Kidney Failure Symptoms in Tamil / சிறுநீரக செயலிழப்பு அறிகுறிகள்: வணக்கம் நண்பர்களே..! இன்றைய பதிவில் சிறுநீரக பாதிப்பின் அறிகுறிகள் பற்றி நாம் தெரிந்துக்கொள்ளுவோம். நமது உடலில் உள்ள தேவையில்லாத நச்சுக்களை வெளியேற்றி உடலினை பாதுகாப்பாக வைத்திருக்க மிகவும் உதவியாக இருப்பது சிறுநீரக பகுதிதான். உடலில் சிறுநீரக பிரச்சனை உள்ளதா என்றே பலர் தெரியாமல் இன்றும் இருக்கிறார்கள். சிறுநீரக பாதிப்பினை நாம் ஆரம்பத்திலே கண்டறிந்து அதற்கான தகுந்த சிகிச்சையை மேற்கொள்ள வேண்டும். இல்லையென்றால் நாள்பட்ட சிறுநீரக பாதிப்பு டயாலிசிஸ், சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை போன்ற பெரிய அளவிலான பாதிப்பில் கொண்டுபோய் விட்டுவிடும். சிறுநீரக பாதிப்பு காட்டும் ஆரம்பகால அறிகுறிகள் சிலவற்றை இப்போது நீங்களும் படித்து தெரிந்துக்கொள்ளுங்கள்..!
மூலம் நோய் அறிகுறிகள் |
கால் மற்றும் பாதங்களில் வீக்கம் அடைதல்:
உடலில் தங்கியுள்ள தேவையில்லாத நீரை சிறுநீரகத்தால் வெளியேற்ற முடியாமல் போகும் போது கணுக்கால், கால், பாதம், கைகளில் வீக்கம் அடையும். குறிப்பாக முகத்தில் வீக்கம் அல்லது அடைப்பு உண்டாகும். கணுக்காலில் வீக்கம் இருந்துகொண்டே இருக்கும். இதனால் காலில் காலணிகளை அணிய முடியாத அளவுக்கு வீக்கம் இருக்கும். இதனால் நடக்கும் போது சிரமத்திற்கு ஆளாகுவீர்கள்.
உடல் சோர்வு / இரத்த சோகை:
உடலில் சிறுநீரகத்தின் செயல்திறன் குறையும் போது இரத்தத்தில் நச்சுக்கள் அதிகமாகிறது. சிறுநீரகமானது நமது உடலில் வைட்டமின் டி எனும் சத்தினை எரித்ரோபயோடினாக (Erythropoietin) ஹார்மோனாக மாற்றம் செய்கிறது. இவை ரத்த சிவப்பு அணுக்களுக்கு பெரிதும் உதவக்கூடியதாக உள்ளது.
இதன் உற்பத்தி குறையும் போது ரத்த சிவப்பணுக்கள் குறைந்து ஆக்ஜிஜன் பற்றாக்குறை உண்டாகிறது. இதனால் மூளை பகுதிக்கு செல்ல வேண்டிய இரத்த ஓட்டம் சீராக இல்லாமல் தடைப்படுவதால் அடிக்கடி மயக்கம், நாள் முழுவதும் உடல் சோர்வு பிரச்சனை உண்டாகிறது.
தடிப்புகள் ஏற்படும்:
சிறுநீரக பகுதியில் அதனுடைய செயல்பாடு குறையும் போது உடலில் தேவையில்லாத கழிவுகள் அதிகமாகச் சேரும். இதனால் உடலில் தோல் பகுதிகளில் அதிகமாக தடிப்புகள் ஏற்படும்.
பித்தம் அறிகுறிகள் |
வெப்பத்திலும் குளிர்ச்சியான நிலை ஏற்படும்:
நாள்பட்ட சிறுநீரக தொந்தரவு இருக்கும் பட்சத்தில் ரத்த சோகை ஏற்பட அதிகமாக வாய்ப்புள்ளது. வெப்பம் அதிகமாக இருக்கும் நேரத்தில் கூட தாங்க முடியாத அளவுக்கு குளிர் எடுக்கும்.
கிட்னி கல் வராமல் தடுக்க சாப்பிட வேண்டிய உணவுகள் |
முதுகு வலி ஏற்படும்:
பாலிசிஸ்டிக் ஓவரி பிரச்சனை உள்ளவர்களுக்கு முதுகு வலி அடிக்கடி உண்டாகும். சிலருக்கு சிறுநீரகத்துக்கு அருகிலேயே அதிகமாக வலி தோன்றும். இந்த அறிகுறியானது ஒரு சிலருக்கு மட்டுமே தெரியும்.
இதுபோன்ற உடல் நலம் மற்றும் ஆரோக்கியம் பற்றிய தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> | உடல் ஆரோக்கிய குறிப்புகள் |