கொத்தமல்லி நன்மைகள் | Kothamalli Benefits in Tamil

Advertisement

கொத்தமல்லி இலை நன்மைகள் | Kothamalli Leaf Benefits in Tamil

வணக்கம் நண்பர்களே இன்றைய ஆரோக்கிய பதிவில் கொத்தமல்லி இலையின் நன்மைகளை பற்றி தெரிந்துக்கொள்ளலாம்.. சமையலில் பெரிதும் முக்கியத்துவம் கொடுப்பது இந்த கொத்தமல்லி இலை. உடலுக்கு பல நன்மைகளை தரக்கூடிய சத்துக்கள் இந்த கொத்தமல்லியில் அடங்கியுள்ளது. ஆனால் சிறிய குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை சாப்பாட்டில் இந்த கொத்தமல்லி இலையை ஒதுக்கிவைத்து தான் சாப்பிடுவார்கள். இதனுடைய நன்மை பலருக்கும் தெரிவது இல்லை. கொத்தமல்லி இலையில் கால்சியம், சோடியம், பொட்டாசியம், வைட்டமின் சி போன்ற ஏராளமான சத்துக்கள் நிறைந்துள்ளது. சரி வாங்க இந்த பதிவில் கொத்தமல்லி இலையின் பல மருத்துவ நன்மைகளை பற்றி விரிவாக படித்தறியலாம்..

கொத்தமல்லி விதை நன்மைகள்

வயிறு பிரச்சனை நீங்க:

 kothamalli benefits in tamil

அனைவருக்குமே கார சாரமான உணவுகளை சாப்பிட்ட பிறகு செரிமான கோளாறுகள், வயிறு வலி போன்ற பிரச்சனை வருவது இயல்பு. கொத்தமல்லியானது நாம் சாப்பிடும் உணவுகளை ஜீரணித்து வயிறு மற்றும் குடல் உறுப்புகளை சீராக இயங்க வைக்கிறது. கொத்தமல்லி இலையில் நறுமண திரவியம் அதிகமாக இருப்பதால் பசியை தூண்டி வயிற்றில் செரிமானத்திற்குப் பயன்படும் சுரப்பிகளை அதிகமாக சுரக்க உதவுகிறது. வயிறு மற்றும் செரிமான சம்மந்தமான அனைத்து பிரச்சனைக்கும் கொத்தமல்லி நல்ல தீர்வினை அளிக்கிறது.

மூக்கில் இரத்தம் வடிதல்:

 kothamalli health benefits in tamil

ஒரு சிலருக்கு அடிக்கடி மூக்கு பகுதியில் இரத்தம் வழிந்துகொண்டே இருக்கும். அப்படிப்பட்டவர்கள் சிறிது கொத்தமல்லி இலையை எடுத்து அதனுடன் சிறிது கற்பூரத்தை சேர்த்து நன்றாக கசக்கி பிழிந்து அதன் சாறினை இரத்தம் வழியும் இடத்தில் சொட்டு சொட்டாக விட்டால் இரத்தம் வடிதல் குணமாகும். மேலும் கொத்தமல்லி இலை மற்றும் கற்பூரத்தை அரைத்து நெற்றியில் பற்றுப்போட்டால் மூக்கிலிருந்து இரத்தம் வடிதல் உடனே நின்றுவிடும்.

சரும பிரச்சனைக்கு:

 kothamalli leaf benefits in tamil

கொத்தமல்லி இலைக்கு பூஞ்சைகள், நச்சுக்கள் போன்றவைகளை அழிக்கும் ஆற்றல் அதிகமாக உள்ளது. இது மட்டுமல்லாமல் சரும நோய்களை பாதுகாப்பதிலும் கொத்தமல்லி முதலிடத்தை பெற்றுள்ளது. சிலருக்கு அலர்ஜி சம்மந்தமான நோய்களான தடிப்பு, சருமத்தில் அரிப்பு போன்றவை ஏற்பட்டு சருமத்தையே பாழாக்கிவிடும். இது மாதிரியான அலர்ஜி பிரச்சனைக்கு கொத்தமல்லி இலையை அரைத்து அதனுடன் தேன் சேர்த்து தடவி 15 நிமிடம் கழித்து குளிர்ந்த நீரால் கழுவி வர அலர்ஜி பிரச்சனை குணமாகும்.

ஆடாதோடை இலையின் மருத்துவ குணம்

கர்ப்பிணி பெண்கள் வாந்தி குறைய:

 கொத்தமல்லி இலை நன்மைகள்

கர்ப்பமாக இருக்கும் காலத்தில் பெரும்பாலான பெண்களுக்கு அடிக்கடி வாந்தி பிரச்சனை, மயக்கம் போன்றவை வந்துக்கொண்டே இருக்கும். அடிக்கடி இது மாதிரி வரும் சமயத்தில் கர்ப்பிணி பெண்கள் ஒரு கப் அளவிற்கு கொத்தமல்லி இலை மற்றும் ஒரு கப் சர்க்கரை சேர்த்து நன்றாக கொதிக்க வைக்க வேண்டும். கொதித்த பிறகு அதனை ஆற வைத்து குடித்து வந்தால் கர்ப்பிணிகளுக்கு ஏற்படக்கூடிய வாந்தி, தலைசுற்றல் குறையும்.

வாய்ப்புண் குணமாக:

 கொத்தமல்லி இலை பயன்கள்

அதிக காரம் நிறைந்துள்ள உணவுகள் சாப்பிடுவதாலும், பற்களை சுத்தமாக பராமரிக்காமல் இருப்பதாலும் வாய்ப்புண் பிரச்சனை ஏற்படுகிறது. கொத்தமல்லி இலையில் வாசனை எண்ணையான சிட்ரோநெல்லா என்று சொல்லக்கூடிய வேதிப்பொருள் அதிகமாக நிறைந்துள்ளது. கொத்தமல்லியை அதிகமாக சாப்பிடுவதால் வாய்களில் ஏற்படும் புண்கள் விரைவில் ஆறவும், சுவாச புத்துணர்ச்சி கிடைக்கவும் உதவுகிறது.

இதுபோன்ற உடல் நலம் மற்றும் ஆரோக்கியம் பற்றிய தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> Natural health tips in tamil
Advertisement