7 நாளில் மூட்டு வலி நீங்க பாட்டி வைத்தியம்..!

Advertisement

Joint pain treatment in tamil

முழங்கால் மூட்டுவலி (Mootu Vali Maruthuvam) பிரச்சனைக்கு செலவே இல்லாத ஒரு சிறந்த வீட்டு வைத்தியம் குறிப்புகளை பற்றித்தான் இந்த பகுதியில் தெரிந்து கொள்ள போகிறோம். இந்த மூட்டு வலியால் இப்போது அதிகபேர் தினமும் அவதிப்படுகின்றனர்.

இந்த மூட்டு வலி (Mootu Vali Maruthuvam) வருவதற்கு அதிக காரணம் என்வென்றால் மூட்டு பகுதியில் எலும்பை சுற்றியுள்ள ஜவ்வுகளுடைய தேய்மானம் என்றே சொல்ல வேண்டும்.

இந்த பிரச்சனையை  குணமடைய செய்ய வீட்டு வைத்திய குறிப்புகள் என்ன உள்ளது என்பதை பற்றி இப்போது நாம் தெரிந்து கொள்வோம் வாங்க..!

குதிகால் வலி குணமாக பாட்டி வைத்தியம்..!

7 நாளில் மூட்டு வலி நீங்க பாட்டி வைத்தியம்..! / மூட்டு வலி நீங்க இயற்கை மருத்துவம்..!

7 நாளில் மூட்டு வலி நீங்க பாட்டி வைத்தியம் – சாதம் வடித்த கஞ்சி:-

முழங்கால் மூட்டு வலி பிரச்சனையை (Mootu Vali Maruthuvam) சரி செய்ய சாதம் வடித்த கஞ்சி மிகவும் சிறந்த இயற்கை மருத்துவமாக விளங்குகிறது.

அதாவது தினமும் சாதம் வடிக்கும் கஞ்சியினை எடுத்து மிதமான சூட்டில், தங்கள் முழங்காலில் ஊற்ற வேண்டும். இவ்வாறு தினமும் செய்து வாருங்கள் நல்ல பலனை நீங்களே உணர முடியும்.

7 நாளில் மூட்டு வலி நீங்க பாட்டி வைத்தியம்: வெந்தயம் பேஸ்ட் & தைலம்:-

7 நாளில் மூட்டு வலி நீங்க பாட்டி வைத்தியம் – தைலம்:-

முதலில் தைலம் தயார் செய்யும் முறையை பற்றி பார்ப்போம் 15 பூண்டு பற்களை சிறுசிறு துண்டுகளாக நறுக்கிக்கொள்ளவும், பின்பு அடுப்பில் ஒரு கடாயை வைத்து 5 அல்லது ஆறு ஸ்பூன் கடுகு எண்ணெய் ஊற்றி சூடேற்ற வேண்டும்.

பின்பு எண்ணெய் சூடேறியதும் அடுப்பை மிதமான சூட்டில் வைத்து நறுக்கி வைத்துள்ள பூண்டு பற்களை சேர்த்து நன்றாக கிளறி விட வேண்டும். பூண்டு கருகும் வரை நன்றாக கிளறிவிட்டு, பின்பு அடுப்பில் இருந்து இறக்கிவிடவும். எண்ணெய் சூடாறியதும் வடிகட்டி தனியாக எடுத்து வைத்துக்கொள்ளவும்.

இந்த எண்ணெயை எப்படி பயன்படுத்த வேண்டும் என்பதை பற்றி தெரிந்துகொள்வதற்கு முன் வெந்தயம் பேஸ்ட் எப்படி தயார் செய்ய வேண்டும் என்பதை பற்றி தெரிந்து கொள்வோம்.

குதிகால் வெடிப்பு நீங்க சில இயற்கை வைத்தியம்..!

7 நாளில் மூட்டு வலி நீங்க பாட்டி வைத்தியம் – வெந்தயம் பேஸ்ட் தயாரிக்கும் முறை:-

வெந்தயம் ஒரு ஸ்பூன் எடுத்து தண்ணீரில் நன்கு ஊறவைத்து கொள்ளவும். வெந்தயம் நன்கு ஊறியதும் சிறிதளவு தண்ணீர் சேர்த்து மிக்சியில் நன்கு மை போல் அரைத்து கொள்ளவும்.

பின்பு அடுப்பில் ஒரு கடாய் வைத்து, அரைத்து வைத்துள்ள வெந்தயம் பேஸ்ட்டை சேர்த்து சிறிதளவு தண்ணீர் ஊற்றி நன்றாக கிளறிவிடுங்கள், கலவையானது நன்கு பேஸ்ட்டு போல் வரும் அந்த சமயம் இரண்டு ஸ்பூன் கடுகு எண்ணெயை ஊற்றி, திரும்பவும் ஒருமுறை நன்றாக கிளறி விடுங்கள். அவ்வளவு தான் வெந்தயம் பேஸ்ட் தயார்… இப்பொழுது எப்படி பயன்படுத்த வேண்டும் என்பதை பற்றி தெரிந்து கொள்வோம்.

முதலில் வெந்தயம் பேஸ்ட்டினை மிதமான சூட்டில் மூட்டு வலி (mootu vali) ஏற்படும் இடத்தில் அப்ளை செய்ய வேண்டும். பின்பு 15 நிமிடம் கழித்து கழுவவேண்டும்.

அதன் பிறகு தயார் செய்து வைத்துள்ள பூண்டு தைலத்தை மூட்டு பகுதியில் தடவ வேண்டும். இந்த முறையை தினமும் அல்லது வாரத்தில் இரண்டு அல்லது மூன்று முறை செய்து வர மூட்டு வலி பிரச்சனையில் இருந்து விடுபடலாம்.

மூட்டு வலி தைலம் தயாரிப்பு:-

மூட்டு வலி குணமாக மூட்டு வலி தைலம் தயாரிக்கும் முறை பற்றி இப்பொழுது நாம் தெரிந்து கொள்வோம் வாங்க.

மூட்டு வலியை போக்கும் மூட்டு வலி தைலம் தயாரிக்கும் முறை..!

தேவையான பொருட்கள்:-

  1. நல்லெண்ணெய்
  2. கடுகு எண்ணெய்
  3. வேப்ப  எண்ணெய்
  4. விளக்கெண்ணெய்
  5. தேங்காய் எண்ணெய்
  6. சுக்கு
  7. மிளகு
  8. நொச்சி இலை
  9. இலுப்பை எண்ணெய்
  10. அருகம்புல்

மூட்டு வலி தைலம் செய்முறை:-

மூட்டு வலி தைலம் தயாரிப்பு ஸ்டேப்: 1

அடுப்பில் ஒரு பானையை வைத்து 200 மில்லி நல்லெண்ணெய் ஊற்றி சூடேற்ற வேண்டும், பின் 200 மி.லி வேப்பெண்ணெயை ஊற்றி சிறிது நேரம் சூடேற்றவும்.

மூட்டு வலி தைலம் தயாரிப்பு ஸ்டேப்: 2

பிறகு 200 மி.லி கடுகு எண்ணெயை ஊற்றி 1 நிமிடம் சூடேற்றி அதனுடன் 200 மி.லி நீரடி  முத்துக்கொட்டை எண்ணெய் ஊற்றி 2 நிமிடம் சூடேற்றி பின்பு 200 மி.லி தேங்காய் எண்ணெய் ஊற்றி 3 நிமிடங்கள் சூடேற்றி இறக்கி விடவும்.

மூட்டு வலி தைலம் தயாரிப்பு ஸ்டேப்: 3

50 கிராம் சுக்கையும், 50 கிராம் மிளகையும் நன்றாக இடித்து கொள்ளவும். 100 கிராம் இலுப்பை கொட்டையை பச்சையாக கொண்டு வந்து இடித்து கொள்ளவும்.

100 கிராம் அருகம்புல்லையும், 100 கிராம் நொச்சி இலைகளையும் பச்சையாக கொண்டு வந்து சிறு துண்டுகளாக வெட்டி கொள்ளவும்.

மூட்டு வலி தைலம் தயாரிப்பு ஸ்டேப்: 4

பிற‌கு இவை அனைத்தையும் தைல பானையில் போட்டு மீண்டும் சிறிது நேரம் தீயில் வைத்து சூடேற்றவும். தைல பதத்தில் வரும் போது இறக்கி வடிகட்டி தைலத்தை கண்ணாடி பாத்திரத்தில் பத்திரப்படுத்தவும்.

உபயோகிக்கும் முறை:

உடம்பில் வலியுள்ள இடத்தில் இந்த தைலத்தை பலமுறை நன்றாக தடவி அரப்பு தேய்த்து வெந்நீரில் கழுவவும். ஒரு நாளைக்கு 2 முறை பயன்படுத்தலாம்.

மேலும் மூட்டு வலி நீங்க இயற்கை வைத்தியம் (joint pain treatment in tamil) பற்றி தெரிந்து கொள்ள கீழ் கொடுக்கப்பட்டுள்ள லிங்கை கிளிக் செய்யவும்…

முழங்கால் மூட்டு வலி நீங்க பாட்டி வைத்தியம்..! பகுதி – 1

 

இதுபோன்ற உடல் நலம் மற்றும் ஆரோக்கியம் பற்றிய தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> patti vaithiyam tamil tips
Advertisement