வேலைவாய்ப்பு ஆன்மிகம் தமிழ் வியாபாரம் ஆரோக்கியம் விவசாயம் அழகு குறிப்புகள் சமையல் குறிப்பு Facts GK Tamil
---Advertisement---

குதிகால் வெடிப்பு நீங்க சில இயற்கை வைத்தியம்..!

Updated On: October 3, 2024 1:29 PM
Follow Us:
குதிகால் வெடிப்பு நீங்க
---Advertisement---
Advertisement

குதிகால்(பாத) வெடிப்பு நீங்க | கால் வெடிப்பு குணமாக பாட்டி வைத்தியம்

வாசகர்கள் அனைவருக்கும் வணக்கம். இபபதிவில் கால் வெடிப்பு குணமாக பாட்டி வைத்தியம் பற்றி பார்க்கலாம் வாங்க. பொதுவாக, ஆண்கள் மற்றும் பெண்கள் என இருவருக்கும் இருக்கும் பிரச்சனைகளில் ஓன்று தான் இந்த குதிகால் வெடிப்பு பிரச்சனை. பாத வெடிப்பு வந்தால் வலி ஏற்பட்டு நடக்க முடியாமல் போகும். எனவே, உங்களுக்கு பயனுள்ள வகையில் இப்பதிவில் Kal Vedippu Sari Seivathu Eppadi என்பதை கொடுத்துள்ளோம்.

Kuthikal Vedippu Marunthu Tamil:

குதிகால் வெடிப்பு நீங்க டிப்ஸ் :1

பாதங்களில் ஏற்படும் சிறிய பிளவுகளுக்கு, பித்த வெடிப்பு என்று பெயர். ஊட்டச்சத்து குறைபாடு காரணமாகவும், அசுத்தம் காரணமாகவும், இந்த வெடிப்புகள் ஏற்படுகின்றன. பாத சருமத்தை மென்மையாக்க, பாதங்களை வெது வெதுப்பான தண்ணீரில், 20 நிமிடங்கள் ஊற வைக்கவும்.

அரம் அல்லது சொரிக்கல்லை பயன்படுத்தி பாதத்தில் உள்ள செத்த அணுக்களை, மெதுவாக தேய்த்து எடுக்கவும். பாதங்களுக்கான நல்ல மாய்ஸ்சுரைசிங் க்ரீமை தடவி, 20 நிமிடங்கள் வரை, அவை பாதங்களில் நன்றாக ஊறும் படி செய்யவும்.

கால் விரல் நகம் சொத்தை காரணம் மற்றும் குணப்படுத்தும் முறை !!!…

குதிகால் வெடிப்பு நீங்கடிப்ஸ் :2

குதிகால் வெடிப்பு நீங்க – பப்பாளி பழத்தை நன்கு அரைத்து அதை பாதங்களில், வெடிப்பு உள்ள பகுதியில் தேய்க்க வேண்டும். அவை உலர்ந்ததும் பாதத்தை தண்ணீரில் நனைத்து மறுபடியும் தேய்க்க வேண்டும்.

இவ்வாறு தொடர்ந்து செய்து வந்தால் குதிகால் வெடிப்பு குணமாகும். மருதாணி இலைகளை நன்றாக அரைத்து பித்த வெடிப்பு உள்ள இடங்களில் தேய்த்து உலர விடவேண்டும். பின்னர் தண்ணீரில் கழுவி வர நாளடைவில் குதிகால் வெடிப்பு நீங்கும்.

குதிகால் வெடிப்பு மறைய டிப்ஸ் :3

குதிகால் வெடிப்பு மறைய (kuthikal vedippu neenga) கால் தாங்கும் அளவுக்கு தண்ணீரை சூடாக்கி அதில் சிறிது உப்பு மற்றும் எலுமிச்சை சாற்றை சேர்க்க வேண்டும்.

அந்த தண்ணீரில் பாதத்தை சிறிது நேரம் வைத்திருந்து பின் பாதத்தை சொரசொரப்பான பிரஸ்சை கொண்டு தேய்த்து கழுவினால் பாதத்தில் காணப்படும் கெட்ட செல்கள் உதிர்ந்து விடும்.

இதனால் வெடிப்பு ஏற்படுவது நிற்பதோடு பாதம் மென்மையாகவும் இருக்கும்.

குதிகால் வெடிப்பு மறைய டிப்ஸ் :4

பாத வெடிப்பு சரியாக – பாதங்களின் ஈரப்பதத்தை நீட்டிக்க, இரவு மற்றும் பகல் முழுவதும் பாதங்களுக்கு காலுறைகள் அணிந்து கொள்வது நல்லது.

குதிகால் வெடிப்பு மறைய பெரிய வாளியில் சுடு தண்ணீரை நிரப்பி, அதில் பாதங்களை முக்கிக் கொள்ளுங்கள்.

அதில், உப்பு, எலுமிச்சை சாறு, கிளிசரின் மற்றும் ரோஸ் வாட்டர் இட்டு, 20 நிமிடங்கள் வரை பாதங்களை ஊற வைக்கலாம். பின், உரைக்கல் அல்லது பாத ஸ்க்ரப்பரை கொண்டு, பாதங்கள் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளை தேய்க்கவும்.

ஒரு வாரம் தொடர்ந்து, தினமும் ஒரு முறை செய்தால் நல்ல மாற்றத்தை காணலாம்.

குதிகால் வெடிப்பு நீங்க டிப்ஸ் :5

பாத வெடிப்பு சரியாக – வேப்பிலை, மஞ்சள் ஆகியவற்றுடன் சிறிதளவு சுண்ணாம்புச் சேர்த்து அரைக்க வேண்டும். இந்த கலவையில் விளக்கெண்ணெய் சேர்த்து வெடிப்பு உள்ள இடங்களில் பூசினால் பாத வெடிப்பு நீங்கும்.

குதிகால் வெடிப்பு ஏற்பட காரணம் என்ன ?

தரம் குறைவான காலணிகளை பயன்படுத்தினாலும் சிலருக்கு குதிகால் வெடிப்பு ஏற்படும். எனவே காலணிகள் வாங்கும் போது தரமானதாக பார்த்து வாங்க வேண்டும்.

குதிகால் வெடிப்பு நீங்க டிப்ஸ் :6

குதிகால் வெடிப்பு மறைய  (kuthikal vedippu neenga) விளக்கெண்ணெய், தேங்காய் எண்ணெய் சமஅளவில் எடுத்து கொண்டு அதில் சிறிது மஞ்சள் தூளை கலந்து பேஸ்ட் போல குழைத்து பாதத்தில் வெடிப்பு உள்ள இடத்தில் தடவி சிறிது நேரம் கழித்து கழுவினால் வெடிப்பு சரியாகி விடும்.

வேப்ப எண்ணெயில் சிறிதளவு மஞ்சள் பொடியை கலந்து பேஸ்ட் போல குழைத்து பாத வெடிப்பு உள்ள இடத்தில் தடவலாம்.

குதிகால் வெடிப்பு நீங்க டிப்ஸ் :7

பாத வெடிப்பு சரியாக – இரவு நேரத்தில் உறங்க செல்லும் முன் கால நன்றாக கழுவி சிறிது தேங்காய் எண்ணெய் தடவினால் நல்லது.

தினமும் குளித்து முடித்ததும் பாதங்களை ஈரமில்லாதவாறு துணியால் துடைக்க வேண்டும்.

பின் பாதத்தில் சிறிது விளக்கெண்ணெய் தேய்த்தால் பாத வெடிப்பு வராமல் தடுக்கலாம்.

குதிகால் வெடிப்பு நீங்க டிப்ஸ் :8

குதிகால் வெடிப்பு மறைய (kuthikal vedippu neenga) ஒரு டீஸ்பூன் நீர்க்காத கிளிசரின், 1 டீஸ்பூன் ரோஸ் வாட்டர் மற்றும் 1 டீஸ்பூன் எலுமிச்சை சாற்றை கலந்து, கால் பித்த வெடிப்பின் மீது தடவுங்கள்.

இரவு முழுவதும் அதை அப்படியே விட்டு, காலை எழுந்தவுடன் வெது வெதுப்பான நீரில் காலை கழுவி விடுங்கள்.

குதிகால் வெடிப்பு நீங்க டிப்ஸ் :9

பாத வெடிப்பு சரியாக – பாதங்கள் ஈரப்பதத்துடன் இருக்க, தேன் பெரிதும் பயன் தரும். தேனில் சிறந்த ஆன்டிபாக்டீரியல் குணங்கள் அடங்கியுள்ளன. 2 டீஸ்பூன் அரிசி மாவுடன் கொஞ்சம் தேன் மற்றும் ஆப்பிள் சீடர் வினீகரை சேர்த்து, அடர்த்தியான பேஸ்ட் தயார் செய்யுங்கள்.

குதிகால் வெடிப்பு நீங்க டிப்ஸ் :10

பாத வெடிப்பு சரியாக – பாதங்கள் பித்த வெடிப்புடன், வறண்டு காணப்பட்டால், ஒரு ஸ்பூன் ஆலிவ் எண்ணெய் அல்லது இனிப்பு பாதாம் எண்ணெயை சேர்த்து, வெது வெதுப்பான நீரில் பாதங்களை, 10 நிமிடம் வரை ஊற வைத்து கழுவிய பின், அந்த பேஸ்ட்டை பாதத்தில் தேய்க்கவும். அப்படி செய்யும் போது, பாதங்களில் உள்ள இறந்த அணுக்கள் நீங்கிவிடும்.

 

இதுபோன்ற உடல் நலம் மற்றும் ஆரோக்கியம் பற்றிய தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> ஆரோக்கியமும் நல்வாழ்வும்
Advertisement

Sathya Priya

வணக்கம்.. நான் சத்திய பிரியா.. நமது பொதுநலம்.காம் இணையதளத்தில் உள்ளடக்க எழுத்தாளராக பல்வேறு பயனுள்ள பதிவுகளை எழுதுகிறேன். பயனர்கள் அதனை படித்து பயன் பெறுவதில் மிக்க மகிழ்ச்சி.. நன்றி..

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now