குதிகால் வெடிப்பு காரணம் (Cracked Heels) ..!
இன்றைய அவசர வாழ்க்கையில் பலர் குதிகால் வெடிப்பு (cracked heels) பிரச்சனையை சந்தித்து வருகின்றனர். சிலருக்கு இந்த குதிகால் வெடிப்பு எப்படி ஏற்படுகிறது என்று கூட தெரியாமல் தினமும் அவஸ்த்தை படுகின்றனர். குதிகால் வெடிப்பு (cracked heels) என்பது குறிப்பாக கால்களை ஒழுங்காக பராமரிக்காமல் இருப்பதினால் தான், இந்த குதிகால் வெடிப்பு ஏற்படுகிறது.
நம் கால்களின் அழகை கெடுக்கும் வகையில் தோன்றுவது தான், இந்த குதிகால் வெடிப்பு (cracked heels). ஒருவருக்கு குதிகால் வெடிப்பு ஏற்பட்டு, அவற்றை அலட்சியமாக விட்டுவிட்டால். அதன் விளைவால் கால்களில் அதிக வலிகளை ஏற்ப்படுத்தும் இந்த குதிகால் வெடிப்பு.
சில நேரங்களில் இந்த குதிகால் வெடிப்பு முற்றிவிட்டால் கால்களில் இரத்த கசிவுகள் ஏற்படகூட வாய்ப்புள்ளது. காரணம் என்ன என்று தெரிந்து கொண்டால் பிற்காலத்தில் நமக்கு குதிகால் வெடிப்பு ஏற்படாமல் பார்த்துக்கொள்ள முடியும்.
சரி இப்போது நாம் பொதுநலம் பகுதியில் கால்களில் ஏற்படும் குதிகால் வெடிப்பு காரணம் பற்றி படித்தறிவோம் வாருங்கள்.
கால் விரல் சொத்தை விழுவதன் காரணம், சொத்தை நகத்தை குணப்படுத்தும் முறை !!!
வறட்சியின் காரணமாக:
குதிகால் வெடிப்பு காரணம்: பாதங்கள் அதிகம் வெளியில் தெரிவதால், பாதத்தில் இருக்கும் ஈரப்பசை உறிஞ்சப்படுகிறது, இதன் காரணமாக கால்களில் குதிகால் வெடிப்புகள் (cracked heels) தோன்றுகிறது.
அதிக உடல் எடை:
குதிகால் வெடிப்பு காரணம்: சிலருக்கு உடல் எடை அதிகமாக இருக்கும், இதன் காரணமாக கூட கால்களில் குதிகால் வெடிப்பு (cracked heels) தோன்றும்.
இதற்கு என்ன காரணம் என்றால், அளவுக்கு அதிகமான அழுத்தத்தை பாதங்களுக்கு கொடுப்பதினால், பாதங்களில் வெடிப்புகள் ஏற்படுகின்றது.
எனவே குதிகால் வெடிப்புகள் ஏற்படாமல் இருக்க உடல் எடையை குறைக்க வேண்டியது மிகவும் அவசியம்.
குதிகால் வலிக்கு எருக்கன் செடி வைத்தியமா?
தண்ணீரில் அதிக நேரம் நிற்பதினால்:
குதிகால் வெடிப்பு காரணம்: நீரில் அதிக நேரம் கால்களை ஊறவைத்தால், சருமத்தில் உள்ள எண்ணெய் பசைகள் அனைத்தும் வெளியேறிவிடும். இதன் காரணமாக கூட, கால்களில் வெடிப்புகள் ஏற்படும். இதனால் தான் துணிதுவைக்கும் பெண்களுக்கு கால்களில் அதிகளவு குதிகால் வெடிப்புகள் ஏற்படுகிறது.
வெறும் காலில் செல்வதானாலும்:
குதிகால் வெடிப்பு காரணம்: காலணிகள் அணியாமல் எப்போதும் வெறும் காலில் சுற்றினால், வறட்சியை அதிகரிப்பதுடன், கிருமிகளின் தாக்கங்களினால் கால்களில் அதிகளவு வெடிப்புகள் ஏற்படுத்துவதுடன், அதிக வலிகளையும் ஏற்படுத்தும்.
எனவே எங்கு சென்றாலும் கால்களில் செருப்பு அணிந்து கொண்டு தான், செல்ல வேண்டும். அதேபோல் வெளியே சென்று விட்டு வீட்டிற்கு, திருப்ப வரும்போது, கால்களை சுத்தமாக கழிவிட்டுத்தான் வீட்டிற்குள் செல்ல வேண்டும்.
உடலில் அதிகளவு வறட்சி ஏற்படாமல் இருக்க அதிகளவு தண்ணீர் அருந்துங்கள், இதனால் உங்கள் பாதத்தில் குதிகால் வெடிப்பு (cracked heels) ஏற்படாமல் இருக்கும். தினமும் இரவு தூங்குவதற்கு முன் கால்களில் தேங்காய் எண்ணெயை தடவி கொண்ட பின் தூங்குங்கள். இவ்வாறு செய்வதினால் கால்களில் குதிகால் வெடிப்புகள் ஏற்படாமல் பாதுகாக்கலாம்.
குதிகால் வெடிப்பு நீங்க சில இயற்கை வைத்தியம்..!
மேலும் வேலைவாய்ப்பு, வியாபாரம், அழகுகுறிப்புகள், ஆரோக்கியம், தொழில்நுட்பம், குழந்தை நலன், விவசாயம், சமையல் குறிப்பு, மெஹந்தி டிசைன், ஆன்மிகம், பயனுள்ள தகவல் மற்றும் ரங்கோலி டிசைன் போன்ற தகவலை Whatsapp – ல் பெற இங்கே கிளிக் செய்யவும் –> Whatsapp Group Link.