முடி உதிர்வதை தடுக்கும் உணவுகள்
வணக்கம் நண்பர்களே.! முடி உதிர்வதை தடுப்பதற்கு குறிப்புகளை பயன்படுத்துவீர்கள். ஆனால் அந்த குறிப்புகள் எல்லாம் பயன்படுத்தும் போது முடி உதிராமல் இருக்கும். நாளடைவில் மறுபடியும் முடி உதிர ஆரம்பிக்கும். முடி உதிராமல் இருப்பது, முடி வளர்ச்சி போன்றவை உங்களின் ஆரோக்கியத்தை பொறுத்து தான் அதில் முன்னேற்றம் இருக்கும். ஆரோக்கியம் என்று சொன்னவுடன் என் உடம்பில் எந்த பிரச்சனையும் இல்லையே.! அப்படி என்று நினைக்க கூடாது. உங்களுது உடலில் எல்லா வகையான சத்துக்களும் நிறைந்திருக்க வேண்டும். அப்போது தான் உங்களது முடி உதிராமலும், வளர்ச்சியும் ஏற்படும். வாங்க இப்போது முடி உதிராமல் இருப்பதற்கு சாப்பிட வேண்டிய உணவு பொருட்களை தெரிந்து கொள்வோம்.
இதையும் படியுங்கள் ⇒ முடி உதிர்வை தடுத்து முடி ஆரோக்கியமாக வளர இந்த உணவுகளை சாப்பிடுங்கள்.!
பசலைக்கீரை பயன்கள்:
பசலைக்கீரையில் இரும்பு சத்து அதிகமாக இருப்பதால் முடி உதிர்வு பிரச்சனையை சரி செய்ய உதவுகிறது. மேலும் தலையில் உள்ள எண்ணெய் சுரப்பியை தூண்டி முடிக்கு இயற்கையான கண்டிஷனராக செயல்படுகிறது.
முட்டை முடி வளர:
முட்டையில் புரோட்டீன், வைட்டமின் பி12, இரும்பு சத்து, துத்த நாகம், ஒமேகா கொழுப்பு அமிலங்கள் போன்ற ஊட்டச்சத்துக்கள் அதிகமாக உள்ளது. இந்த சத்துக்கள் முடி உதிர்வதை நிறுத்தி முடியில் வளர்ச்சியை தூண்டுகிறது.
வால்நட் பருப்பு:
இவற்றில் அதிகளவு பயோட்டீன், வைட்டமின் ஈ, வைட்டமின் பி, மெக்னீசியம் போன்ற சத்துக்கள் உள்ளது. இந்த சத்துக்கள் முடி உதிர்வதை தடுக்கும். மேலும் பாதாம், முந்திரி போன்ற உணவுகளை தினமும் உணவில் சேர்த்து கொள்ளுங்கள்.
கொய்யா பழம் நன்மைகள்:
இந்த பழத்தில் வைட்டமின் சி அதிகம் உள்ளது. இந்த சத்துக்கள் முடி உதிர்வதை தடுக்கிறது.
கேரட் பயன்கள்:
கேரட்டில் பீட்டாகரோட்டின் என்ற சத்து உள்ளது. மேலும் கால்சியம், வைட்டமின் ஏ, டி, இ சத்துக்கள் அதிகம் நிறைந்துள்ள காரணத்தால் முடி வளர்ச்சிக்கு உதவுகின்றது.
புரத சத்து அதிகம் உள்ள உணவுகள்:
முடி வளர்ச்சிக்கு புரத சத்துக்கள் நிறைந்துள்ள உணவுகளை சாப்பிடுவது அவசியமானதாகும். புரத சத்து நிறைந்துள்ள உணவுகளான மீன், கோழி இறைச்சி போன்ற உணவுகளை எடுத்து கொள்ள வேண்டும்.
இதையும் படியுங்கள் ⇒ முடி உதிர்வை தடுக்க தேங்காய் எண்ணெயை இப்படி பயன்படுத்துங்கள்
இதுபோன்ற உடல் நலம் மற்றும் ஆரோக்கியம் பற்றிய தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> | Health tips tamil |