மைதா பரோட்டா தீமைகள்
வணக்கம் நண்பர்களே இன்று நம் பதிவில் மைதா பரோட்டா அதிகம் சாப்பிடுவதால் ஏற்படும் தீமைகளை பற்றித்தான் தெரிந்துகொள்ளபோகிறோம். பொதுவாகவே குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை பரோட்டாவை அதிகம் விரும்புவார்கள். ஆனால் அதிக அளவு சாப்பிட முடியாது, ஆனால் நாம் சுவையாக சாப்பிடும் எந்த ஒரு பொருளும் கடைசியில் ஆபத்தை தரக்கூடியதாகவே இருக்கிறது.
மைதாவில் குளுடேன், ப்ரோடீன் அதிகமாக உள்ளதால் இது உடலுக்கு பல பக்கவிளைவுகளை தருகிறது. ஆனால் , இதனை எதையும் அறியாமல் நாம் மைதாவில் செய்யப்பட்ட உணவுகளை தான் அதிகம் விரும்பி சாப்பிடுகிறோம். இதனை தொடர்ந்து சாப்பிட்டால் உடலுக்கு என்ன தீங்கு விளைவிக்கும் என்பதை நம் பதிவில் தெரிந்துகொள்ளலாம் வாங்க.
மைதா மாவின் தீமைகள்:
இன்றைய காலத்தில்கணவன், மனைவி இருவருமே வேலைக்கு செல்வதால் வீட்டில் சமைப்பதற்கு நேரமில்லை. அதனால் கடையில் விற்கக்கூடிய உணவுகளை வாங்கி தான் சாப்பிடுகிறாரார்கள். அதிலும் பரோட்டா முதலிடத்தில் உள்ளது என்றே சொல்லலாம். கடையில் இரவு நேரத்தில் வாங்கி வந்து பலரும் சாப்பிடுகிறர்கள். இதனால் பசி வேண்டுமானால் அடங்கிவிடும். ஆனால் இதில் பல தீமைகள்அடங்கியுள்ளது. மைதா மாவில் செய்யப்பட்ட உணவுகளை சாப்பிடுவது உடலிற்கு தீமைகளை ஏற்படுத்தும். அதனை பற்றி இந்த பதிவின் வாயிலாக அறிந்து கொள்வோம் வாங்க..
இந்த மைதா மாவனது கோதுமையில் தயாரிக்கப்படுகிறது. அதோடு Bran, Germ போன்ற பொருட்களை கொண்டு மைதா தரிக்கப்படுகிறது. Bran யில் அதிகப்படியான நார்ப்பொருள், வைட்டமின் பி உள்ளது. Germ யில் கார்போ ஹைட்ரேட் மாவு சத்து இதில் உள்ளது. இவை அதிகப்படியான கொழுப்பு சத்துக்களை கொண்டுள்ளது. மைதாவில் குளுடேன் அதிகமாக உள்ளதால் செரிமானம் ஆவதற்கு அதிக நேரங்களை எடுத்துக்கொள்கிறது.
மைதா மாவு எதிலிருந்து தயாரிக்கப்படுகிறது என்று தெரியுமா.?
பரோட்டா சாப்பிடுவதால் ஏற்படும் தீமைகள்:
- பரோட்டா பொதுவாகவே இரவு நேரங்களில் அதிகம் கிடைக்க கூடிய ஒரு உணவு பொருளாக இருக்கிறது. இதனுடைய விலையும் குறைவாக இருப்பதால் இதை வாங்குவதற்கு எளிதாக இருக்கிறது. மேலும் இதனை தொடர்ந்து உணவுகளில் எடுத்து கொள்வதால் உடலுக்கு என்ன தீங்குகளை விளைவிக்கிறது என்று பார்க்கலாம்.
- மைதா மற்றும் ரவையில் இருந்து பரோட்டா தயாரிக்கப்படுவதால் உடலுக்கு நீரழிவு நோயிகள் உண்டாகும், அதாவது மைதாவில் உள்ள alaxan என்ற வேதி பொருள் கலக்கப்படுவதால் நீரழிவு நோய்கள் வருவதற்கு முக்கிய காரணமாக இருக்கிறது.
- அதோடு கணைய நீர் சுரப்பியை சோர்வு அடைய செய்து சர்க்கரையின் அளவை அதிகரிக்க செய்க்கிறது. கணையத்தில் உள்ள இன்சுலின் சுரப்பிகளை பாதித்து சர்க்கரை நோய் வருவதற்கு முக்கிய காரணங்களாக இருக்கிறது.
- பரோட்டாவை இரவு நேரங்களில் அதிகம் சாப்பிட்டு வரும் பொழுது மலட்டு தனிமையை ஏற்படுத்திக்கிறது, இதனால் வயிற்று வலி வருகிறது. வயிற்றில் உள்ள கழிவுகள் வெளியேறாமல் இருப்பதால் வயிற்றியில் பாக்டீரியாக்கள் தோன்றி மலட்டு தன்மையை ஏற்படுத்துகிறது.
செம்பருத்தி செடியில் உள்ள மாவு பூச்சியை முற்றிலும் ஒழிக்க மைதா மாவு ஒன்று போதும்..!
- இதனோடு மலச்சிக்கல் வருவது மட்டுமில்லாமல் இதய நோய்கள் வருவதற்கும் பாதிப்புகளை ஏற்படுத்திக்கிறது. அதோடு இருதய கோளாறுகளான இருதய இரத்த நாளங்களில் அதிகப்படியான கொழுப்புகள் சேருவதால் இருதய கோளாறுகள், இரத்த அடைப்புகள் ஏற்படுகிறது.
- மைதாவியில் சர்க்கரை சத்து மற்றும் 100 % சார்ச் எனப்படும் கார்போஹைட்ரேட் மட்டுமே உள்ளது, எனவே இதில் வைட்டமின், புரதம் எதுவும் இல்லாததால் எளிதில் ஜீரணம் ஆவதை தடுக்கிறது.
- மைதா உணவுகளை எடுத்து கொள்ளும் பொழுது, மைதாவில் கொழுப்புகள் அதிகம் உள்ளதால் உடலில் கொழுப்புகள் சேர்ந்து உடல் எடையை அதிகரிக்கிறது. இதனால் இரத்த அழுத்தம் போன்ற உபாதைகள் வருகிறது.
- உடலில் உள்ள எலும்புகள் பலவீனமாகுவதற்கும் இந்த பரோட்டோ உணவுகள் பல பாதிப்புகளை தருகிறது. எனவே மைதா கலந்த உணவுகளை சாப்பிடுவதை தவிர்ப்பது நல்லது.
இதுபோன்ற உடல் நலம் மற்றும் ஆரோக்கியம் பற்றிய தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> | Health Tips in Tamil |