பி.சி.ஓ.டி பிரச்சனையை தடுக்கும் உணவுகள்..!

Advertisement

PCOD Problem Solution Food in Tamil..!

பாலிசிஸ்டிக் ஓவரி சிண்ட்ரோம் (PCOS) மற்றும் பாலிசிஸ்டிக் ஓவரியன் டிசிஸ் (PCOD) என்பது ஹார்மோன் ஏற்றத்தாழ்வால் ஏற்படும் உடல் பிரச்சனை ஆகும். இந்த பி.சி.ஓ.எஸ் பிரச்சனையை பல பெண்கள் சந்திக்கின்றன. குறிக்க 20 முதல் 29 வயது உள்ள பெண்மைங்கள் இந்த PCOS பிரச்சனையால் பாதிக்கப்படுகின்றன. இதனை தமிழில் சினைப்பை நீர்க்கட்டி பிரச்சனை என்று சொல்வார்கள். இந்த நிலை ஏற்படும்போது பெண்கள் கருப்பையில் பல நீர்க்கட்டிகள் உருவாகின்றன. இத்தகைய பிரச்சனை கருத்தரிக்கும் காலங்களில் பல பிரச்சனைகளை ஏற்படுத்தும். இத்தகைய பிரச்சனை உள்ள பெண்கள் ஆரோக்கியமான உணவுகளை எடுத்துக்கொள்வது முக்கியமாகும். ஆகவே இந்த பதிவில் PCOS பிரச்சனை உள்ள பெண்கள் எடுத்துக்கொள்ள வேண்டிய ஐந்து உணவுகள் பற்றியும், அவற்றில் உள்ள ஆரோக்கிய தன்மைகள் பற்றியும் இப்பொழுது நாம் படித்தறியலாம் வாங்க.

பி.சி.ஓ.டி பிரச்சனையை தடுக்கும் உணவுகள்..!

ஒமேகா 3:

omega 3 foods

பி.சி.ஓ.டி பிரச்சனையை தடுக்கும் உணவுகள் – ஊட்டச்சத்துக்களில் மிகவும் முக்கியமான ஊட்டச்சத்து எது என்றால் அதனை ஒமேகா 3 என்று சொல்லலாம். இந்த ஊட்டச்சத்து நமது உடலில் ஹரோன்களின் ஏற்றத்தாழ்வுகளை சரி செய்ய மிகவும் பயன்படுகிறது. ஆகவே நீங்கள் ஒரு அசைவ பிரியர்கள் என்றால் மீன்களில் ஒமேகா 3 கொழுப்பு அமிலம் அதிகம் உள்ள மீன்களை உங்களது உணவு முறையில் அதிகம் சேர்த்து கொள்ளுங்கள். இதன் மூலம் உங்கள் உடலில் ஏற்படும் ஹார்மோன்களின் ஏற்றத்தாழ்வுகளை சரி செய்ய மிகவும் உதவியாக இருக்கும்.

கீரைகள்:

கீரைகள்

பி.சி.ஓ.டி பிரச்சனையை தடுக்கும் உணவுகள் – பொதுவாக பெண்களாக பிறந்த அனைவருமே உங்களது உணவு முறையில் குறைந்தபட்சம் 1 முதல் 3 முறை ஆரோக்கியம் அதிகம் நிறைந்த கீரைகளை சேர்த்துக்கொள்வது நல்லது. ஏனென்றால் இது பெண்களுக்கு அண்டவிடுப்பை ஒழுங்குப்படுத்துவதற்கு உதவுகிறது, இன்சுலின் கட்டுப்பாடு மற்றும் உடலில் இரத்த ஓட்டத்தை ஒழுங்குப்படுத்துதல் போன்றவற்றிற்கு கீரை உதவுகிறது.

இவை அனைத்தும் கருவுறுதலுக்கு உதவுபவையாக உள்ளன. எனவே, வைட்டமின்  நிறைந்த கீரைகளை அதிகமாக உட்கொள்வது பி.சி.ஒ.எஸ் தொடர்பான அறிகுறிகளை நிர்வகிக்க உதவுகின்றன. மேலும் இது பி.சி.ஒ.டியுடன் தொடர்புடைய முடி உதிர்தல் மற்றும் அதிக முடி வளர்ச்சி பிரச்சனைகளையும் குறைக்க உதவுகின்றன.

பெர்ரி பழங்கள்:

berry

பி.சி.ஓ.டி பிரச்சனையை தடுக்கும் உணவுகள் – PCOS உள்ள பெண்கள் இந்த பெர்ரி பழங்களை அதிகம் எடுத்து கொள்வதினால் உடலில் ஆக்ஸிஜனேற்ற அழுத்தத்தை குறைக்க உதவும் ஆண்டி ஆக்ஸிடண்ட்களை கொண்டுள்ளன, மேலும் பெர்ரிகளில் பால்பினால்கள் உள்ளன, அவை எடை அதிகரிப்பு மற்றும் அஜீரணம் போன்ற வயிறு தொடர்பான பிரச்சனைகளை சரி செய்ய உதவுகின்றன.

ஓட்ஸ்:

பி.சி.ஓ.டி பிரச்சனையை தடுக்கும் உணவுகள் – பொதுவாக ஓட்ஸ் நமது உடலுக்கு பலவகையான ஆரோக்கிய பலன்களை அளிக்கக்கூடியது. அதாவது உடலில் உள்ள கெட்ட கொழுப்புகளை வெளியேற்றுவது மற்றும் சர்க்கரை உறிஞ்சப்படுவதை மெதுவாக்கும். ஓட்ஸில் அதிகமாக வைட்டமின் பி சத்து உள்ளது, இது புரோஜெஸ்ட்டிரோன் ஹார்மோனின் உற்பத்தியை அதிகரிக்க உதவுகிறது. ட்ஸில் உள்ள துத்தநாக பி.சி.ஓ.டி பிரச்சனைக்கு மிகவும் சிறந்தது. எனவே பி.சி.ஒ.எஸ் நோயாளிகள் உங்கள் உணவில் தினமும் ஒரு கப் ஓட்ஸ் எடுத்துக்கொள்வது மிகவும் நல்லது.

பருப்பு வகைகள்:

pulses

பி.சி.ஓ.டி பிரச்சனையை தடுக்கும் உணவுகள் – பி.சி.ஓ.டி பிரச்சனையை தடுக்கும் உணவு வகையில் பருப்பு வகைகளுக்கு முதல் இடம் உள்ளது. கொண்டைக்கடலை, பீன்ஸ், பருப்பு, பட்டாணி மற்றும் சோயாபீன்ஸ் ஆகியவை நார்ச்சத்து மற்றும் புரதத்தை அதிக அளவில் கொண்ட உணவுகளாக உள்ளன. ஆகவே PCOS பிரச்சனை உள்ளவர்கள் இத்தகைய பருப்பு வகைகளை எடுத்து கொள்வது மிகவும் நல்லது.

கருப்பை கட்டி கரைய சித்த மருத்துவம்..!

 

இதுபோன்ற உடல் நலம் மற்றும் ஆரோக்கியம் பற்றிய தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> ஆரோக்கியமும் நல்வாழ்வும்

 

Advertisement