பாதாம் தோல் உரித்து சாப்பிடுவது நல்லதா..? தோல் உரிக்காமல் சாப்பிடுவது நல்லதா..?

Peel Or Not To Peel Almonds Benefits

இன்றைய ஆரோக்கியம் பதிவில் பாதாமை தோல் உரித்து சாப்பிடுவது நல்லதா..? அல்லது தோல் உரிக்காமல் சாப்பிடுவது நல்லதா என்பதை பற்றி தான் பார்க்க போகிறோம். குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவருமே பாதாம் சாப்பிட்டு வருகிறார்கள். காரணம் பாதாம் பருப்பில் பல்வேறு வகையான ஊட்டச்சத்துக்கள் காணப்படுகின்றன.

பாதாம் சாப்பிட பிடிக்காதவர்கள் என்று யாரும் இருக்க முடியாது. அதுபோல சிலர் பாதாம் தோல் உரித்துவிட்டு சாப்பிடுவார்கள். சிலர் தோலை உரிக்காமல் சாப்பிடுவார்கள். இதில் எது சிறந்தது என்று உங்களுக்கு தெரியுமா..? இந்த பதிவின் வாயிலாக அதை தெரிந்து கொள்ளலாம் வாங்க..!

பாதாம் சாப்பிடுவதால் ஏற்படும் நன்மைகள்..!

பாதாம் பருப்பில் இருக்கும் சத்துக்கள்: 

பாதாம் பருப்பில் புரதம், இரும்புச்சத்து, கார்போஹைட்ரேட்டுகள், மெக்னீசியம், துத்தநாகம், பாஸ்பரஸ், நீர்ச்சத்து, கொழுப்புசத்து, வைட்டமின் ஈ, ஃபோலேட், நியாசின், சுண்ணாம்பு சத்து, சோடியம் மற்றும் பொட்டாசியம் போன்ற பல ஊட்டச்சத்துக்கள் காணப்படுகின்றன.

பாதாம் எப்படி சாப்பிட வேண்டும்..? 

பாதாம் எப்படி சாப்பிட வேண்டும்

 பெரும்பாலும் மருத்துவர்கள் பாதாமை ஊறவைத்து அதன் தோலை உரித்து சாப்பிட சொல்வார்கள். காரணம் பாதாமை தோலுடன் சாப்பிடுவதால் அது ஜீரணமாவதற்கு கடினமாக இருக்கும். அது சீக்கிரமாக செரிமானம் ஆகாது என்பதால் பாதாம் தோலை நீக்கிவிட்டு தான் சாப்பிட வேண்டும்.  

நாம் பாதாமின் ஊறவைக்காமலும் அதன் தோலை உரிக்காமல் சாப்பிட்டால் அது நம் இரத்தத்தில் உள்ள பீட்டாவை அதிகரிக்க செய்கிறது. அதனால் பாதாமை தோல் உரித்து சாப்பிடுவது நல்லது.

அதனால் பாதாம் பருப்பை இரவு முழுவதும் வெதுவெதுப்பான தண்ணீரில் ஊறவைத்து விடவேண்டும். காலையில் அதன் தோலை நீக்கிவிட்டு சாப்பிட்டு வரலாம்.

பாதாம் VS வேர்க்கடலை இரண்டில் எது சிறந்தது..?

 

நாம் தினமும் ஒரு நாளைக்கு 10 பாதாம் வரை சாப்பிட்டு வரலாம். பாதாம் பருப்பை நாம் வெறும் வயிற்றில் சாப்பிட்டு வருவதை தவிர்க்க வேண்டும். காரணம், வெறும் வயிற்றில் பாதாம் உட்கொள்வதால் பித்தத்தை அதிகரிக்க செய்கிறது. அஜீரணம் போன்ற தேவையற்ற வயிற்று உபாதைகளை ஏற்படுத்துகிறது.

அதனால் இதை உணவு உட்கொண்ட பிறகு மற்றும் பழங்கள் சாப்பிடும் போது சேர்த்து சாப்பிட்டு வரலாம்.

ஊறவைத்த பாதாம் நன்மைகள்:

ஊறவைத்த பாதாம் பயன்கள்

ஊறவைத்த பாதாமில் பல்வேறு வகையான நன்மைகள் இருக்கின்றன. ஊறவைத்த பாதாம் செரிமானத்திற்கு மிகவும் உதவுகிறது. இது இதய ஆரோக்கியத்தை மேம்படுத்த உதவுகிறது.

உடல் எடையை குறைக்க வேண்டும் என்று நினைப்பவர்கள் பாதாமை ஊறவைத்து சாப்பிட்டு வரலாம். மேலும் இதில் இருக்கும் சத்துக்கள் புற்றுநோய் செல்களை அழித்து அவற்றுடன் எதிர்த்துப் போராட உதவுகிறது. அதுமட்டுமில்லாமல், இது நீரிழுவு நோயாளிகளுக்கு மிகவும் உதவுகிறது.

பாதாம் பயன்கள்..! பாதாம் சாப்பிடும் முறை..!

 

இதுபோன்ற உடல் நலம் மற்றும் ஆரோக்கியம் பற்றிய தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> Tamil maruthuvam