மாதவிடாய் தாமதமாக காரணம் என்ன | Home Remedy for Irregular Periods in Tamil
பெண்களுக்கு ஒவ்வொரு ஆண்டும் 11 முதல் 13 வரை மாதவிடாய் சுழற்சியானது இருக்க வேண்டும். மாதவிடாய் தாமதாக வந்தால் பெண்களுக்கு முதலில் நினைவிற்கு வருவது கர்ப்பப்பை தான். ஆனால் மாதவிடையானது தாமதமாக வந்தால் கர்ப்பப்பை தான் காரணம் என்றால் அது தவறு. அதை தாண்டி பல கரணங்கள் உள்ளது. மாதவிடாய் என்பது பெண்களுக்கு சரியான நேரத்தில் வந்தால் தான் உடலில் எந்த நோய்களும் நம்மை அண்டாது என்று நம் முன்னோர்கள் கூறி வைத்து சென்றுள்ளார்கள். மாதவிடாய் தாமதாக வருவதற்கு பல காரணங்கள் இருக்கிறது அவற்றை நாம் படித்து தெரிந்துக்கொள்ளுவோம் வாங்க..
அதிக உதிரப்போக்கு நிற்க |
அதிக மன அழுத்தம்:
மன அழுத்தம் அதிகமாக இருப்பவர்களுக்கு அவர்களுடைய வாழ்க்கையே பாதிப்படைகிறது. அதிக மன அழுத்தத்தினால் உடலில் ஹார்மோன் சுரப்பியானது குறைகிறது. இதனால் தான் மாதவிடையானது சரியான நேரத்தில் வராமல் பெண்கள் அவதிப்படுகிறார்கள். இது மாதிரியான நேரத்தில் தகுந்த மருத்துவரிடமோ அல்லது நர்ஸ்களிடம் அறிவுரை பெற்று உடலை ரிலாக்சேஷன் செய்வதன் மூலம் பழைய நிலைக்கு வரலாம்.
அடிக்கடி உடல் நல குறைவு:
ஒரு சிலருக்கு திடீரென்று நோய் ஏற்படுதல், பல நாட்களாக உடலில் நோய் இருந்துக்கொண்டே இருந்தால் கூட மாதவிடாயானது சரியான நேரத்தில் வராமல் தாமதம் ஆகலாம். நமது உடலில் இருக்கக்கூடிய நோயின் காரணமாகத்தான் மாதவிடாய் சரியாக வரவில்லை என்று உங்களுக்கு முன்கூட்டியே தெரிந்தால் மருத்துவரிடம் உடனே சென்று மாதவிடாய் எப்போது சரியாக வரும் என்பதில் ஆலோசனை கேட்டு தெளிவு பெறவும்.
பணி மாற்றம்:
மாறி மாறி வேலை பார்ப்பதால் கூட மாதவிடாய் சரியாக வராது. குறிப்பாக மாதவிடாய் பிரச்சனையை சந்திக்கும் பெண்களுக்கு வேலை பார்க்கும் இடத்தில் பகல் ஷிப்ட், நைட் ஷிப்ட் என்று மாறி மாறி பார்த்தால் மாதவிடாய் சரியாக வராது. மாதவிடாய் தாமதமாக வராமல் இருக்க பணியிடத்தில் முடிந்தளவிற்கு ஒரே ஷிப்ட்டில் பார்க்கும் படி வைத்துக்கொள்ளுங்கள். முடியாதவர்கள் மாதவிடாய் தாமதம் இல்லாமல் வந்த சில நாட்களுக்கு பிறகு ஷிப்ட் மாற்றிக்கொள்ளலாம்.
ஒழுங்கற்ற மாதவிடாய் பிரச்சனை சரியாக பாட்டி வைத்தியம்..! |
அதிக உடல் எடை:
உடலில் எடையானது அளவிற்கு அதிகமாக இருந்தால் ஹார்மோன்கள் மாதவிடாய் சுழற்சியை மாற்றம் செய்து சில நேரத்தில் மாதவிடாயை வரவிடாமல் செய்துவிடும். பெரும்பாலான பெண்களுக்கு தங்களின் எடை குறைந்த பிறகு, அவர்கள் அதிக எடையுடன் இருப்பதாக நினைத்தாலும், அவர்களுக்கு மீண்டும் சாதாரண மாதவிடாய் சுழற்சிகள் ஏற்படுவதுடன், கருவுறுதலும் ஆரம்பமாகின்றன.
உடல் எடை குறைவு:
உடலானது அதிக உடல் எடையும், ரொம்பவும் மெலிந்து போய் இருக்க கூடாது. உடலில் தேவையான கொழுப்புகள் இல்லை என்றாலும் மாதவிடாய் தாமதமாக வரும். மாதவிடாய் முழுவதுமாக நின்று போகக்கூடிய வாய்ப்புள்ளது. இந்த காரணம் தான் பெரும்பாலான பெண்களுக்கு ஏற்படும் மாதவிடாய் பிரச்சனைகளுக்கு காரணமாகிறது. மேலும் வேலை பளு உள்ள பெண்களுக்கும் அல்லது தொழில்முறை தடகள வீராங்கனைகளுக்கும் இந்த தவறுதல் காரணமாகிறது.
இதுபோன்ற உடல் நலம் மற்றும் ஆரோக்கியம் பற்றிய தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> | Tamil maruthuvam tips |