மூலம் நோய் அறிகுறிகள் | Piles Symptoms in Tamil

Piles Symptoms in Tamil

மூல நோய் அறிகுறிகள் | Moolam Symptoms in Tamil

Piles Symptoms in Tamil: சிலருக்கு ஏற்படும் உடல்நல பிரச்சனை அவர்களுடைய வாழ்க்கையையே பாழாக்கும். அதில் ஒன்றுதான் பைல்ஸ் என்று சொல்லக்கூடிய மூலநோய் ஆகும். மூல நோய் என்பது ஆசன வாயில் உள்ள நரம்பு பகுதிகள் வீக்கம் அடைவதால் இந்த மூல நோய் வருகிறது. கோடை காலத்தில் இந்த பைல்ஸ் நோயால் பல பேர் சிரமப்படுவார்கள். பைல்ஸ் நோயினை ஆரம்ப காலத்திலே பார்த்து சரி செய்துவிட்டால் பிரச்சனை எதுவும் ஏற்படாது. சிலருக்கு பைல்ஸ் இருப்பதே தெரியாமல் இன்றும் சிலர் இருக்கின்றனர். பைல்ஸ் இருந்தால் என்னென்ன அறிகுறிகள் (Piles Symptoms in Tamil) வெளிப்படும் என்பதை இந்த பதிவில் தெரிந்துக்கொள்ளுவோம்..!

மூலம் நோய் குணமாக பாட்டி வைத்தியம்

மூல நோய் அறிகுறிகள்:

மூல நோய் அறிகுறிகள்

 1. ஆசன வாய் பகுதியை தொட்டு பார்க்கும்போது அந்த இடத்தில் வீக்கம் இருப்பது போன்று இருந்தால் உங்களுக்கு பைல்ஸ் இருப்பது உறுதி.
 2. மலவாய் திறப்பில் சளி வெளியேறும். 
 3. மலம் வெளியேறிய பிறகும் சாதாரணமாக உணரவில்லை என்றாலும் பைல்ஸ் இருப்பதன் அறிகுறி.
 4. ஆசன வாய் பகுதியை சுற்றி அரிப்பு பிரச்சனை மற்றும் சிவந்து போதல்.
 5. பைல்ஸ் பிரச்சனை பல நாட்களாக சந்தித்த பிறகு ஆசனவாய் பகுதியில் சிவப்பு தன்மை, உட்காருவதில் சிரமம் ஏற்பட்டால் மருத்துவரிடம் தாமதம் செய்யாமல் உடனடியாக சிகிச்சை பெற வேண்டும்.
 6. ஆசனவாய் பகுதியில் மலம் கழிக்கும் போது மிகவும் வலி ஏற்பட்டால் பைல்ஸ் இருப்பது உறுதி.
 7. ஆசனவாயின் முனைப்பகுதி புடைத்து இருப்பது போன்று இருந்தால் மூலம் இருப்பது உறுதி. 
 8. வெளி மூலநோய் என்பது கட்டிகளை ஏற்படுத்தும். அந்த கட்டியானது பழுப்பு நிறமாகவோ அல்லது நீல நிறத்தில் மாறி அதிக வலியினை ஏற்படுத்தும். அதிக வலிமட்டுமல்லாமல் இரத்தத்தினையும் வெளிப்படுத்தும்.
 9. மூலநோய் அறிகுறியான சில நேரத்தில் அளவுக்கு அதிகமான ஆசனவாய் இரத்தப்போக்கு, தொற்று பரவல், ஆசன வாய் பௌத்திரம், மலத்தினை வெளியேற்றாமல் கட்டுப்படுத்தி வைப்பது போன்றவை மூலத்தின் அறிகுறி.
 10. மலம் கழிக்கச் செல்லும்போது மலத்தை இறுகச்செய்து, மலம் போக முடியாத அளவிற்கு வலி ஏற்படும்.
 11. அதிகமாக காரம் சார்ந்த உணவுகளோ அல்லது மாமிச உணவுகளை அதிகமாக சாப்பிடுவதாலோ மூலம் நோய் வருவதற்கான அறிகுறி. 
இதுபோன்ற உடல் நலம் மற்றும் ஆரோக்கியம் பற்றிய தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> உடல் ஆரோக்கிய குறிப்புகள்