பூச்சி கடிக்கான எளிமை வீட்டு வைத்தியங்கள்..! Poochi Kadi Vaithiyam in Tamil..!
நண்பர்களுக்கு வணக்கம்..!
இன்றைய பொதுநலம் பதிவில் அனைவரின் உடலில் ஏற்படும் பூச்சி கடியை(poochi kadi vaithiyam) எளிமையாக போக்க சில வீட்டு வைத்தியங்களை இன்று பார்க்கலாம். விலங்கினங்களில் அதிகமான எண்ணிக்கையை கொண்டது பூச்சி இனங்கள் தான். மழை காலங்களிலும் சரி, வெயில் காலங்களிலும் சரி, பூச்சிகள் இல்லாத இடத்தில் நாம் இருக்க முடியாது.
பூச்சிகளில் விஷமுள்ள பூச்சி, விஷமற்ற பூச்சி என இருவகையாக உள்ளது. விஷம் உள்ள பூச்சிகள் நம்மை கடித்துவிட்டால் கண்டிப்பாக மருத்துவரை அணுகவேண்டும். இல்லையெனில் பெரிய விளைவுகளை நாம் சந்திக்க வேண்டியிருக்கும்.
இதை தவிர நாம் அன்றாட வாழ்வில் தினமும் கொசுக்கள், எறும்புகள், பல விஷமற்ற பூச்சிகள் என பல பூச்சி இனங்கள் நம்மை கடிப்பதுண்டு. அவை தடிப்புகளையும், எரிச்சலையும் ஏற்படுத்தும். பூச்சி கடியால் ஏற்படும்(poochi kadi symptoms in tamil) எரிச்சல் மற்றும் வீக்கம் போன்றவற்றை எளிய வீட்டு வைத்தியங்கள் மூலம் சரி செய்யலாம்னு பார்க்கலாம் வாங்க..!
அல்சர் குணமாக சித்த வைத்தியம் …! |
பூச்சி கடிக்கான எளிமை வீட்டு வைத்தியம் / poochi kadi maruthuvam in tamil – Tips 1:
நம் அன்றாடம் வீட்டில் பயன்படுத்துகிற சமையல் பொருள்களில் ஒன்றுதான் சின்ன வெங்காயம். எறும்பு மற்றும் கொசு போன்ற பூச்சிகள் நம்மை கடித்தால் சின்ன வெங்காயத்தின் சாற்றினை கடித்த இடத்தில் தேய்த்து வந்தால் பூச்சி கடி (poochi kadi) விரைவில் குணமடையும். சின்ன வெங்காயத்தை வெட்டி பூச்சிக்கடி உள்ள இடத்தில் நேரடியாக தேய்த்தால் கூட இன்னும் பலன் கிடைக்கும்.
பூச்சி கடிக்கான எளிமை வீட்டு வைத்தியம் / poochi kadi vaithiyam in tamil – Tips 2:
அரிப்பு மற்றும் எரிச்சலுக்கு நாம் பாரம்பரிய காலத்தில் இருந்து இன்றுவரை பயன்படுத்திவரும் மருந்துகளில் ஒன்று தேன். பூச்சி கடி(poochi kadi vaithiyam) உள்ள இடத்தில் தேனை தேய்க்க வேண்டும். தேனை தேய்ப்பதினால் எரிச்சலிலிருந்து நிவாரணம் கிடைக்கும்.மேலும் இதில் ஆன்டி-பாக்டீரியல் தன்மை அதிகம் உள்ளது. அதனால் இது எரிச்சல் மேலும் அதிகமாகாமல் தடுக்கக்கூடியது.
பூச்சி கடிக்கான எளிமை வீட்டு வைத்தியம் / poochi kadi maruthuvam in tamil – Tips 3:
கற்றாழை என்பது இப்பொழுது அனைவரின் வீட்டு தோட்டங்களிலும், வீட்டின் முன் வாசலில் எளிதாக வளரக்கூடிய ஒன்றுதான். பூச்சிக்கடி(poochi kadi home remedies in tamil) உள்ளவர்கள் கற்றாழையின் மேல் உள்ள தோலை நீக்கிவிட்டு கற்றாழை ஜெல்லை பூச்சி கடித்த இடத்தில் தடவி வந்தால் நல்ல நிவாரணம் கிடைக்கும்.
பூச்சி கடிக்கான எளிமை வீட்டு வைத்தியம் / poochi kadi vaithiyam in tamil – Tips 4:
பூச்சி கடித்தவர்கள் எலுமிச்சை சாறு மற்றும் துளசி சாற்றை சம அளவில் எடுத்துக்கொண்டு கலக்கிக்கொள்ளவும். கலந்தபின் பூச்சி கடித்த இடத்தில் தடவி வந்தால் பூச்சி கடித்த பிரச்சனை(poochi kadi marunthu in tamil) விரைவில் குணமடைய செய்யும்.
நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்க பேரிச்சை பழம் பால் தயாரிக்கும் முறை ..! Noi Ethirpu Sakthi Athikarikka Food in Tamil..! |
பூச்சி கடிக்கான எளிமை வீட்டு வைத்தியம் / poochi kadi maruthuvam in tamil – Tips 5:
பூச்சி கடி(poochi kadi maruthuvam in tamil) அரிப்பை தடுப்பதற்கு மற்றொரு வழிதான் டீ ட்ரீ ஆயில். இதில் ஆன்டி செப்டிக் குணங்கள் அதிகமாக உள்ளது. எனவே அரிப்பிலிருந்து நல்ல நிவாரணம் கிடைக்கும்.
டீ ட்ரீ ஆயில் பூச்சி கடிக்கு மட்டுமல்லாமல் சருமம் சார்ந்த பல்வேறு பிரச்சனைகளுக்கும் முக்கிய தீர்வாக உள்ளது.
நம் வீடுகளில் சுலபமாக கிடைக்கும் ஒன்றுதான் தேங்காய் எண்ணெய். எறும்பு அல்லது கொசு கடித்த இடத்தில் தடிப்பு ஏற்படும். அதில் தேங்காய் எண்ணெய் தேய்க்க பூச்சி கடிகளில்(poochi kadi marunthu) இருந்து நல்ல நிவாரணம் கிடைக்கும்.
பூச்சி கடிக்கான எளிமை வீட்டு வைத்தியம் / poochi kadi vaithiyam in tamil – Tips 6:
பேக்கிங் சோடா நம் வீட்டின் சமையலறையில் எளிமையாக கிடைக்கக்கூடிய ஒன்று. பேக்கிங் சோடாவுடன் தேவையான அளவு தண்ணீர் சேர்க்க வேண்டும். பேஸ்ட் போன்று நன்றாக குழைக்கவும். பூச்சி கடி(poochi kadi maruthuvam in tamil) பட்ட இடத்தில் பேஸ்டினை தேய்க்கும் பொழுது நல்ல நிவாரணம் கிடைக்கும்.
பூச்சி கடிக்கான எளிமை வீட்டு வைத்தியம் / poochi kadi maruthuvam in tamil – Tips 7:
நாம் அன்றாடம் சமைக்கும் உணவு பொருட்களில் பிரதான இடம் பிடித்து இருப்பது பூண்டு ஆகும். இது இயற்கையாகவே எண்ணிலடங்கா மருத்துவ குணங்களை பூண்டு உள்ளடக்கியது.
பூண்டை நன்றாக நசுக்கி எடுத்துக்கொள்ள வேண்டும். பூச்சி கடி பட்ட இடத்தில் நசுக்கிய பூண்டை நன்றாக வைத்து தேய்க்க வேண்டும். அவ்வாறு தேய்த்தால் பூச்சி கடி பிரச்சனையில்(poochi kadi) இருந்து நல்ல நிவாரணம் கிடைக்கும்.
பூச்சி கடிக்கான எளிமை வீட்டு வைத்தியம் / poochi kadi vaithiyam in tamil – Tips 8:
ஆப்பிள் சீடர் வினிகர் என்பது ஆப்பிள், சர்க்கரை, பீஸ்ட் இவற்றினை சேர்த்து உருவாக்கப்படுவது. ஆப்பிளை பிழிந்து அதன் சாற்றில் சில பொருட்களைச் சேர்த்து இதனை உருவாக்குவர்.
இந்த சாற்றினை பஞ்சினில் தடவி பூச்சி கடி(poochi kadi home remedies in tamil) உள்ள இடத்தில் தடவினால் நல்ல நிவாரணம் கிடைக்கும்.
பொதுவாக பூச்சி கடித்த இடத்தில் அரிப்பு ஏற்படுவது வழக்கம். ஆனால் மேலும் மேலும் பூச்சி கடித்த இடத்தில் அரித்தால் பாதிப்பு அதிகமாகும்.
ஆனால் கடித்தது விஷ பூச்சிகள் என தெரிந்தால் வீட்டு வைத்தியங்கள் எதவும் முயற்சி செய்யாமல் உடனடியாக மருத்துவரை அணுகுவதே சிறந்தது.
கருப்பை நீர்கட்டி கரைய சித்த மருத்துவம் பகுதி – 2 |
இதுபோன்ற உடல் நலம் மற்றும் ஆரோக்கியம் பற்றிய தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> | ஆரோக்கியமும் நல்வாழ்வும் |