கசகசா அற்புத மருத்துவ குணங்கள்..!

Advertisement

கசகசாவின் பயன்கள்..! Poppy Seeds Benefits in Tamil..!

Poppy Seeds Benefits in Tamil:- இந்திய உணவு முறைகளில் கசகசாவிற்கு தனி இடம் உள்ளது. இவற்றில் 50 சதவீதம் எண்ணெய் தன்மை உள்ளது. இந்த எண்ணெயில் இருக்கும் கொழுப்பு உடலுக்கு அதிக நன்மை அளிக்கின்றது. நாம் தினமும் உணவில் கசகசாவை சேர்த்து கொள்வதினால் உடலுக்கு பல அற்புத நன்மைகள் நிகழும். சரி இன்றைய பதிவில் கசகசா மருத்துவ குணங்கள் பற்றி தெரிந்து கொள்ளலாமா..?

கசகசாவில் உள்ள ஊட்டச்சத்துக்கள்:-

கசகசாவில் ஏராளமான ஊட்டச்சத்துக்கள் உள்ளது. அதாவது பொட்டாசியம், கால்சியம், தாமிரம், மக்னீசியம் மற்றும் இரும்பு சத்து போன்ற ஊட்டச்சத்துக்கள் அதிகம் நிறைந்துள்ளது.

newகவுனி அரிசி மருத்துவ பயன்கள்..!

கசகசா மருத்துவ குணங்கள்..!

ஞாபக சக்தியை அதிகரிக்க:-

ஞாபக சக்தியை அதிகரிக்க

கசகசாவில் உள்ள ஊட்டச்சத்துக்கள் மூளைக்கு புத்துணர்ச்சி அளித்து, நரம்பு செல்கள் வளர்ச்சிக்கும் உதவுகிறது. குறிப்பாக அறிவு திறன் மங்கும் குறைபாட்டினை குறைக்க உதவுவதாக சொல்லப்படுகிறது.  எனவே ஞாபக சக்தியை அதிகரிக்க உணவில் அதிகளவு கசகசாவை சேர்த்து கொள்ளுங்கள்.

செரிமான பிரச்சனைகளுக்கு:-

acidity

இந்த கசகசாவில் கரையாத நார்ச்சத்துக்கள் அதிகளவு நிறைந்துள்ளதால் செரிமான பிரச்சனைக்கு சிறந்த தீர்வினை அளிக்கின்றது. அதாவது கசகாவை உணவில் நாம் சேர்த்து கொள்வதன் மூலம் நாம் சாப்பிடும் உணவுகள் முறையாக செரிமானம் உண்டாக்கி மலச்சிக்கல் ஏற்படாமல் தடுக்கிறது.

மன அழுத்தம் நீங்க:-

மன அழுத்தம்

இன்றைய காலகட்டத்தில் பலரும் பலவிதமான பிரச்சனைகளை சந்தித்து அதன் காரணமாக மன அழுத்தத்தை சந்திக்கின்றன. அப்படிபட்டவர்கள் தொடருந்து கசகசாவில் செய்ய கூடிய பானத்தை அருந்தி வருவதினால் மன அழுத்த பிரச்சனை சரியாகும்.

மேலும் இந்த மன அழுத்தம் பிரச்சனை உள்ளவர்கள் தூக்கமின்மை பிரச்சனைக்கு கூட தள்ளப்படுவார்கள். எனவே தூக்கமின்மை பிரச்சனை உள்ளவர்கள் இரவு தூங்குவதற்கு முன் சிறிதளவு கசகசாவை பேஸ்டு போல் அரைத்து பாலுடன் சேர்த்து காய்ச்சி ஒரு கிளாஸ் தினமும் அருந்தி வர நன்றாக தூக்கம் வரும்.

கை கால் நடுக்கம் சரியாக சித்த மருத்துவம்..!

வாய் புண் குணமாக கசகசா:-

vaai pon

முறையற்ற வாழ்க்கை முறை மற்றும் உணவு முறை காரணமாக பலருக்கு வாய் புண் மற்றும் வயிற்று புண் ஏற்படும் அப்படிப்பட்டவர்கள் சிறிதளவு கசகசாவுடன், பொடித்த நாட்டு சர்க்கரை மற்றும் தேங்காய் சேர்த்து பிசைந்து சிறு சிறு உருண்டைகளாக உருட்டி, தொடர்ந்து சாப்பிட்டு வர வாய் புண் மற்றும் வயிற்று புண் குணமாகும்.

அம்மை தழும்பு நீங்க கசகசா:-

ammai thalumpu

கோடை காலம் வந்துவிட்டால் அம்மை போன்ற நோய்களும் ஏற்படும். அந்த அம்மை நோய் சில நாட்களில் சரி ஆகிவிடும். ஆனால் இந்த அம்மை நோயால் ஏற்படும் தழும்புகள் மட்டும் அவ்வளவு எளிதாக மறையாது. முகத்தின் அழகையும் கெடுத்துவிடும். இந்த அம்மை தழும்பு மறைய 10 கிராம் கசகசா விதையுடன், ஒரு கைப்பிடியளவு வேப்பிலை மற்றும் ஒரு துண்டு கஸ்தூரி மஞ்சள் ஆகியவற்றை சேர்த்து நன்றாக பேஸ்டு போல் அரைத்து அம்மை தழும்புகள் உள்ள இடத்தில் அப்ளை செய்ய வேண்டும். இவ்வாறு தொடர்ந்து செய்து வர அம்மை தழும்புகள் மறைய ஆரம்பிக்கும்.

வில்வம் மருத்துவம் பயன்கள்

எலும்புகள் வலுப்பெற:-

BONE

நமது எலும்புகளின் வலிமைக்கு போதுமான கால்சியம் மற்றும் தாமிரச் சத்து தேவைப்படுகிறது. 40 வயதுக்குப் பிறகு எலும்புகள் தேயத் தொடங்குகின்றன. அப்போது மக்கள் கால்சியம் மாத்திரைகளை தேர்ந்தெடுக்கின்றனர்.

கசகசா விதைகள் எலும்புகளையும் அத்துடன் தொடர்புடைய திசுக்களையும் பலப்படுத்தக்கூடிய இயற்கையான மூலக்கூறு ஆகும். இதில் செறிந்துள்ள பாஸ்பரஸ் எலும்பு திசுக்களை உறுதிப்படுத்துகிறது.

இதைத் தவிர கசகசா விதைகளில் அடங்கியுள்ள மாங்கனீசு எலும்புகளை தீவிரமான காயங்களிலிருந்து காக்கிறது.

 

இதுபோன்ற உடல் நலம் மற்றும் ஆரோக்கியம் பற்றிய தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> ஆரோக்கியமும் நல்வாழ்வும்
Advertisement