இந்து உப்பின் நன்மைகள்| Pink Salt Benefits in Tamil
அனைவருக்கும் இனிய வணக்கங்கள் நண்பர்களே..! இன்றைய பதிவில் நாம் பார்க்க இருப்பது நாம் அனைவரும் தெரிந்து கொள்ளவேண்டிய மிகவும் முக்கியமான ஆரோக்கியம் பற்றிய தகவல் தான். அப்படி என்ன தகவல் என்றுதானே சிந்திக்கிறீர்கள். அது என்னவென்றால் இந்து உப்பின் நன்மைகள்..! பற்றித்தான் பார்க்கப்போகிறோம். உப்பு என்பது இயற்கை நமக்கு அளித்த மிகச்சிறந்த வரப்பிரசாதம் ஆகும். உப்பு என்பது உணவின் சுவையை கூட்டுவதற்கு மட்டும் பயன்படாமல் மனிதர்களின் நோயை தீர்க்கவும் பயன்படுகிறது. அப்படிபட்ட இந்து உப்பின் நன்மைகள் பற்றி இந்த பதிவில் விரிவாக காணலாம்.
இந்து உப்பின் பயன்கள் :
மனிதன் நெருப்பை கண்டறிந்து சமைத்து சாப்பிடத் தொடங்கிய சில காலங்களிலேயே உணவு சமைப்பதில் உப்பை பய்னபடுத்தினான். உப்பில் பலவகை உள்ளன ஆனால் தற்காலத்தில் நாம் அதிகமாக பயன்படுத்துவது கடலில் இருந்து பெறப்படும் உப்பை தான் அதிகம் பயன்படுத்துகிறோம்.
பொதுவாக உப்பு என்பது உணவின் சுவையை கூட்டுவதற்கு மட்டும் பயன்படாமல் உணவு கெட்டுப்போகாமல் பாதுகாத்து வைக்கிறது. மேலும் இன்றைய காலகட்டத்தில் அயோடின் கலந்த உப்பை பயன்படுத்தாத மனிதர்களே இல்லை. அப்படி உள்ள அயோடின் உப்பிற்கு பதிலாக இந்துப்பை பயன்படுத்தலாம்.
தொன்மையான காலத்திலிருந்தே இந்த இந்துப்பின் பயன்பாடு உள்ளது. ஹிமாலய மலைகளின் பாறைகளில் இருந்து வெட்டி எடுக்கப்படும் உப்பே இந்துப்பு ஆகும். இந்துப்பை நமது உணவில் பயன்படுத்தலாம் என்று பல மருத்துவ நூல்கள் சொல்லுகின்றன.
இந்த இந்துப்பை ஆங்கிலத்தில் Rock Salt என்றும் தமிழில் பாறை உப்பு என்றும் கூறுவார்கள். அப்படி பாறைகளிலுருந்து வெட்டி எடுக்கப்படும் இந்த இந்துப்பு இளஞ்சிவப்பு நிறத்தில் இருக்கும்.
இந்துப்பில் கால்சியம், பொட்டாசியம், மெக்னீசியம், சல்பர் , அயோடின், மற்றும் சோடியம் குளோரைடு உள்ளது. குளிர்ச்சியூட்டும் தன்மை அதிகம் உள்ள இந்துப்பு பசியைத்தூண்டும், மலத்தை ஈசியாக வெளியேற்றும்.
சித்தமருத்துவத்தில் இந்த இந்துப்பை பயன்டுத்துவதால் வாதம், பித்தம், கபம் மற்றும் மூலம் போன்ற பிரச்சனைகள் நீங்கிவிடும் என்று கூறப்படுகிறது.
தைராய்டு பிரச்சனைகளுக்கு சிறந்த மருந்தாக இந்த இந்துப்பு உள்ளது. இந்துப்பை வெந்நீரில் கலந்து வாய் கொப்பளித்து வந்தால் வாயில் உள்ள துர்நாற்றம் நீங்கும். இந்த இந்துப்பை பயன்படுத்துவதால் அஜீரண சம்மந்தப்பட்ட பிரச்சனைகள் நீங்கிவிடும்.
இதையும் படியுங்கள் => கருப்பு உப்பு பற்றி உங்களுக்கு தெரியுமா
இதுபோன்ற உடல் நலம் மற்றும் ஆரோக்கியம் பற்றிய தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> | Natural health tips in tamil |