சீந்தில் கொடி பயன்கள் | Seenthil Kodi Benefits in Tamil

Seenthil Kodi Uses in Tamil

சீந்தில் கொடி மருத்துவ பயன்கள் | Seenthil Kodi Uses in Tamil

வணக்கம் நண்பர்களே இன்றைய பொதுநலம்.காம் பதிவில் சீந்தில் கொடியின் மருத்துவ பயன்கள் பற்றி தெரிந்து கொள்ளலாம் வாங்க. இது மரங்களில் தொற்றி படரும் ஒரு மூலிகை தாவரம். இந்த கொடியின் அறிவியல் பெயர் Tinospora cordifolia என்பது ஆகும். இந்த தாவரத்தின் இலைகள் இதய வடிவில் இருக்கும். சீந்தில் கொடியை அறுத்து விட்டாலும் உலர்ந்து போகாது. காற்றில் உள்ள நீரை உறிஞ்சி வாழும் தன்மை கொண்டது. இப்பொழுது நாம் இந்த சீந்தில் கொடியை உணவில் சேர்ப்பதால் என்ன மருத்துவ பயன்கள் உள்ளன என்பதை பார்க்கலாம் வாங்க.

சர்க்கரை நோயை குணப்படுத்த – Seenthil Kodi Benefits in Tamil:

சீந்தில் கொடி பயன்கள்

 • சர்க்கரை நோயாளிகள் உடலில் சர்க்கரை அளவு குறைவதற்கு இந்த கொடியின் இலைகளை நிழலில் காய வைத்து பொடியாக அரைத்து கொள்ள வேண்டும். இந்த பொடியை பாலில் கலந்து காலை, மாலை என இரண்டு வேலை குடித்து வந்தால் ரத்தத்தில் சர்க்கரை அளவு குறைவதற்கு உதவுகிறது.

உடல் சோர்வை தணிக்க – Seenthil Kodi in Tamil:

சீந்தில் கொடி பயன்கள்

 • உடல் சோர்வாக உள்ளவர்கள் குளிர்ந்த நீரில் சீந்தில் கொடியை இடித்து 10 நிமிடம் ஊற வைக்க வேண்டும். 10 நிமிடம் கழித்து அதில் உள்ள நீரை மட்டும் வடிகட்டி கொள்ள வேண்டும். பிறகு மீண்டும் அதில் நீர் சேர்த்து வெயிலில் வைக்க வேண்டும். இப்படி வெயிலில் வைத்து எடுக்கும் போது நன்றாக சுண்டி அந்த பாத்திரத்தின் அடியில் வெண்மையான மாவு போன்ற பொருள் கிடைக்கும். இதற்கு சீந்தில் மா அல்லது சீந்தில் சர்க்கரை என்று பெயர்.
 • இந்த சீந்தில் சர்க்கரையை 1 கிராம் அல்லது 4 கிராம் வயதுக்கு ஏற்ப கொடுத்து வந்தால் காய்ச்சலுக்கு பிறகு உடல் பலம் பெறுவதற்கு உதவி புரியும்.

வயிற்று கோளாறுகளை சரி செய்ய – Seenthil Kodi Uses in Tamil:

சீந்தில் கொடி

 • இருமல், மண்ணீரல், மூச்சு திணறல் மற்றும் வாந்தி பிரச்சனைகளை குணப்படுத்துவதற்கும் மற்றும் ஈறுகள் வலுப்பெறுவதற்கும் இந்த சீந்தில் சர்க்கரை பயன்படுகிறது.
 • இரைப்பை புண், வயிற்று புண் மற்றும் வயிற்று கோளாறுகளை சரி செய்வதற்கு சீந்தில் கொடி சாறு பயன்படுகிறது.
 • சீந்தில் கொடியுடன் அதிமதுரப்பொடி, சோம்பு மற்றும் பன்னீர் ரோஜா சேர்த்து ஊற வைத்து அந்த நீரை குடிப்பதால் செரிமான பிரச்சனை மற்றும் வயிற்று உப்புசம் போன்றவற்றை குணப்படுத்த உதவுகிறது.

எலும்புகளின் வளர்ச்சிக்கு – சீந்தில் கொடி பயன்கள்:

seenthil kodi

 • இதில் ஆன்டி ஆக்சிடண்ட் இருப்பதால் எலும்புகளின் வளர்ச்சியை அதிகரிப்பதற்கும், மூட்டு வலி மற்றும் வீக்கத்தை சரி செய்வதற்கும், உள்ளங்கை மற்றும் பாதங்களில் ஏற்படும் எரிச்சலை சரி செய்வதற்கும் உதவுகிறது.

காய்ச்சலை குணப்படுத்துவதற்கு – சீந்தில் கொடி:

seenthil kodi uses in tamil

 • மஞ்சள் காமாலை, தீராத காய்ச்சல், சிறுநீரக பிரச்சனைகள், கல்லீரல் கோளாறு, வெள்ளைப்படுதல் ஆகியவற்றை குணமாக்க உதவுகிறது.
 • புண்கள் மற்றும் அடிபட்ட காயங்களை விரைவில் குணப்படுத்த சீந்தில் இலையை அடுப்பு அனலில் வாட்டி மிதமான சூட்டில் புண்களின் மீது தடவி வர புண்கள் மற்றும் அனைத்து விதமான காயங்களும் ஆறிவிடும்.

நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க – Seenthil Kodi Uses in Tamil:

seenthil kodi uses in tamil

 • சீந்தில் கொடியை வெயிலில் காய வைத்து பொடியாக அரைத்து கொள்ளவும்.
 • பின் அந்த பொடியை பாலில் சேர்த்து, அதனுடன் கற்கண்டு சேர்த்து குடித்து வந்தால் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரித்து நீண்ட நாள் ஆரோக்கியமாக வாழ முடியும்.
கற்பூரவள்ளி இலையின் தெரியாத பல மருத்துவ குணம்
ஆயுர்வேத மருத்துவ குறிப்புகள்

 

இதுபோன்ற உடல் நலம் மற்றும் ஆரோக்கியம் பற்றிய தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—>ஆரோக்கியமும் நல்வாழ்வும்