சிறுகீரை பயன்களை பற்றி தெரிந்து கொள்வோமா?

Siru Keerai Benefits in Tamil

சிறுகீரை பயன்கள்..! Siru Keerai Benefits in Tamil..!

Siru Keerai Benefits in Tamil:- மாறிவரும் லைப் ஸ்டைல் காரணமாக நாம் விதவிதமான ஆரோக்கிய பிரச்சனைகளை சந்திக்கின்றோம். இத்தகைய ஆரோக்கிய பிரச்சனைகளில் இருந்து நம்மை பாதுகாத்துக்கொள்ள வேண்டுமென்றால் அது நமது கைகளில் தான் உள்ளது. அதாவது நமது ஆரோக்கியத்தை பாதுகாக்க சத்துக்கள் நிறைந்த உணவுமுறைகளை மேற்கொள்ளவேண்டியது மிகவும் அவசியமாகும். அந்த வகையில் கீரைவகைகளை நம் உணவுகளில் அதிகம் எடுத்துக்கொள்வதன் மூலம் உடல்நலத்தை பாதுகாக்கலாம் எனவே இந்த பதிவில் அதிக சத்துக்கள் நிறைந்த சிறுகீரையை உணவில் அதிகளவு சேர்த்துக்கொள்வதனால் ஏற்படும் நன்மைகளை பற்றி தெரிந்து கொள்ளலாம் வாங்க..!

சிறுகீரையில் உள்ள ஊட்டச்சத்துக்கள்:-

இந்த கீரையில் சுண்ணாம்புசத்து, இரும்புசத்து போன்றவை மிக அதிக அளவில் நிறைந்துள்ளது. நீர்சத்து, புரதம், கொழுப்பு, தாது உப்பு, மாவுசத்து, ஆகியவையும் இந்த சிறுகீரையில் நிறைந்துள்ளது. இந்த கீரையில் வைட்டமின் ஏ, பி, சி ஆகிய ஊட்டச்சத்துக்களும் அடங்கியுள்ளன.

யாரெல்லாம் சாப்பிடலாம்:-

உடற்பருமன் கொண்டவர்கள், இதய நோயாளிகள், சர்க்கரை நோயாளிகள் மற்றும் முதியவர்கள் ஆகியோர் சாப்பிட ஏற்ற கீரை சிறுகீரை ஆகும்.

உடலில் ஆற்றலை பெருக்கும் சுண்டைக்காய் மருத்துவ பயன்கள்..!

சிறுகீரை மருத்துவ பயன்கள்..! Siru Keerai Benefits in Tamil..!

மலச்சிக்கல் பிரச்சனைக்கு:-

Constipation

அதிக நார்ச்சத்து நிறைந்த கீரை வகைகளில் சிறுகீரையும் உண்டு. எனவே இந்த சிறு கீரையை உணவில் அதிகளவு சேர்த்துக்கொள்பவர்களுக்கு. வயிற்றில் உணவு நன்றாக செரிமானம் ஆக உதவுகிறது. மேலும் தீவிரமான மூலம், மலச்சிக்கல் பிரச்சனைகளையும் சுலபத்தில் சிறுகீரை தீர்க்கிறது.

நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க:-

immunity

உடலில் நோய் எதிர்ப்பு சக்தியானது வயது கூடிக்கொண்டு செல்லும் பொது, குறைந்து கொண்டே வரும். எனவே சிறுகீரையை உணவில் அதிகம் சேர்த்து கொள்வதன் மூலம். இந்த சிறுகீரையில் உள்ள ஊட்டச்சத்துக்கள் இரத்தத்தில் கலந்து உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும்.

மேலும் வெளியிலிருந்து உடலுக்குள் வரும் நோய்களால் உண்டாகும் ஆபத்தான நுண்ணுயிரிகளை எதிர்த்து, அவற்றை அழித்து உடலை தொற்று நோய்கள் அண்டாதவாறு காக்கிறது.

இரத்த சோகை நீங்க:-

Anemia

பொதுவாக உடலில் இரத்த சோகை குறைபாடு ஏற்படாமல் இருக்க இரத்தத்தில் சிவப்பு அணுக்களின் எண்ணிக்கை அதிகம் இருப்பது அவசியம். சிறுகீரையை வாரம் ஒரு முறை சாப்பிடுபவர்களுக்கு இரத்தத்தில் சிவப்பு அணுக்களின் எண்ணிக்கை அதிகரிக்கப்படுகிறது, மேலும் நோய் எதிர்ப்பு சக்தியையும் அதிகரிக்கிறது.

ஆண்மை குறைபாடு:-

ஆண்மை குறைபாடு

இன்றைய காலத்தில் தவறான உணவு மற்றும் வாழ்க்கை முறைகளால் பல ஆண்களுக்கு அவர்களின் விந்தணுக்கள் குறைந்து மலட்டுத்தன்மை ஏற்படுகின்ற வாய்ப்புகள் அதிகமாகின்றன. சிறுகீரை ஆண்களின் உடலில் உயிரணுக்களை பெருக்கும் திறன் கொண்டதாகும். இதை சாப்பிடும் ஆண்களுக்கு விந்தணுக்கள் பெருக்கம் ஏற்பட்டு மலட்டுத்தன்மை நீங்கும்.

கல்லீரல் பாதிப்புகளுக்கு:-

சிலருக்கு கல்லீரலில் அதிகளவு நச்சுகள் சேருவதாலும், அதீத அழற்சியினாலும் கல்லீரல் வீக்கம் ஏற்படுகிறது. இந்த பிரச்சனையை சரி செய்வதில் பாகற்காய் ஒரு சிறந்த இயற்கை மருத்துவ உணவாக இருக்கிறது. வாரத்திற்கு இரண்டு, மூன்று முறை பாகற்காய் சாப்பிட்டு வந்தால் கல்லீரலில் இருக்கும் கிருமிகள் மற்றும் நச்சுகள் நீங்கி கல்லீரல் வீக்கம் குணமாகிறது.

எச்சரிக்கை:-

siru keerai benefits

இரவில் கீரை சாப்பிடவே கூடாது. ஏனென்றால், கீரைகளில், நார்ச்சத்துக்கள் அதிகமாக இருப்பதால், எளிதில் செரிமானம் ஆகாது.

கீரையுடன் முட்டை, பால், தயிர், அசைவம் போன்றவற்றை சேர்த்து சமைக்கக்கூடாது. ஏனென்றால், இவை ஒன்றாக சேர்ந்தால் மலச்சிக்களையும், வயிற்றுப் பிரச்னைகளையும் உருவாக்கும்.

 

இதுபோன்ற உடல் நலம் மற்றும் ஆரோக்கியம் பற்றிய தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—>ஆரோக்கியமும் நல்வாழ்வும்