தலையணை இல்லாமல் தூங்கினால் கிடைக்கும் நன்மைகள்

Advertisement

தலையணை இல்லாமல் தூங்கினால் கிடைக்கும் நன்மைகள் | Sleeping Without Pillow Benefits in Tamil

பொதுவாக நம்மில் பலர் தூங்குவதற்கு தலையணை பெரும்பாலும் பயன்படுத்துவோம்.. இன்னும் சிலர் காலுக்கு ஒரு தலையணை, பக்கத்தில் கட்டிப்பிடித்து படுக்க தலையணை என வித, விதமாக தூங்குவதற்கு தலையணை வைத்திருப்பார்கள். இருப்பினும் தலையணையே இல்லாமல் தூங்குவதில் நம் உடலுக்கு ஏரளமான ஆரோக்கியம் கிடைக்கும் என்று தங்களுக்கு தெரியுமா? அப்படி தெரியாது என்றால் இந்த பதிவை படித்து தெரிந்து கொள்ளுங்கள்.. பின்பு எப்பொழுதுமே தூங்குவதற்கு தலையணை இல்லாமல் தூங்க வேண்டும் என்று தான் நினைப்பீர்கள். சரி வாங்க தலையணை இல்லாமல் தூங்கினால் கிடைக்கும் நன்மைகள் என்னென்ன என்பதை பற்றி படித்து தெரிந்து கொள்வோம்.

​கழுத்து மற்றும் முதுகு வலி:

ழுத்து வலி மற்றும் முதுகு வலியால் கடுமையாக அவஸ்த்தைப்படும் நபர்களை நீங்கள்? ஆம் என்றால், இனிமேல், தூங்கும் தலையணைகளை பயன்படுத்த வேண்டாம். இவ்வாறு செய்து வந்தால், கழுத்து வலி மற்றும் முதுகு வலியில் இருந்து விடுபடலாம்.

இதுமட்டுமல்லாது, உறக்கத்தின் போது உங்கள் உடலமைப்பையும் சிறப்பாக பேணிக்காக்க முடியும். குறிப்பாக உயரமான தலையணை பயன்படுத்தும் போது படுக்கை நிலை குலைந்துபோகும். இதனால், தண்டுவடம் பாதிக்கும்.

ஆகவே  தலையணை இல்லாமல் தூங்கினால் தோள்பட்டை, கழுத்து வலியும் கூட வராது.

​மனஅழுத்தம் மற்றும் கவனச் சிதறலை குறைக்கிறது:

ஆகி நாம் தலையணை இல்லாமல் தூங்கினால் மன அழுத்தம் மற்றும் கவன்ச் சிதறல் குறையுமாம். அதாவது தலையணை இல்லாமல் உறங்கும் போது, நமது உடல் இயற்கையான நிலையில் இருக்கிறது.

இதன் காரணமாக, கழுத்து மற்றும் முதுகு வலி ஏற்படாமல் இருக்கிறது. இதுமட்டுமல்லாது, தலையணை இன்றி உறங்குவதால், நம் மனதுக்கு ஏற்படும் மன அழுத்தமும் குறைவதால், நல்ல உறக்கம் கிடைக்கிறது.

தலையணை இல்லாமல் தூங்கினால் கிடைக்கும் நன்மைகள்:

தண்டுவட பிரச்சனை: தலையணை இல்லாமல் தூங்குபவர்களுக்கு தண்டுவடம் அதன் இயல்பான நிலையில் இலகுவாக இருக்குமாம். இதனால் உடல்வலி, தண்டுவட பிரச்சனை துளிகூட ஏற்படாதாம்.

தலையணை இல்லாமல் தூங்கினால், உடலின் எலும்புகளை சீராக்க முடியும்.

அதேபோல் தலையணை இல்லாமல் தூங்குபவர்களுக்கு முகச்சுருக்கம் ஏற்படாது.

தலையணை இல்லாமல் தூங்கும்போது, சிலர் நேராக படுத்து தூங்குவார்கள். அவர்களுக்கு மெல்லிய தலையணையே சிறந்தது.

இது கழுத்து, தலை, தோள்பட்டை பிரச்னைகளிலிருந்து பாதுகாக்கும். சிலர் சாய்த்து அதாவது ஒருபக்கமாக படுப்பதை வழக்கமாக வைத்திருப்பார்கள்.

இவர்களுக்கு அடர்த்தியான தலையணை வைத்து படுத்தால் தோள்பட்டை, காதுக்கு இடையே சமநிலையை ஏற்படுத்துமாம்.

குப்புறப்படுத்து தூங்குபவர்களுக்கு தட்டையான தலையணையே நல்லது. இது நம் தலையில் நிலையை அசௌரியமாக உணராமல் இருக்க உதவி செய்வதோடு, முதுகு, இடுப்பு வலியையும் விரட்டியடிக்கிறது.

ஆனால், தலையணை இல்லாது தூங்கினால் நாம் நோய்களை விரட்டி விட முடியும். சிலருக்கு மருத்துவர்கள் தலையணை வைத்து தூங்க பரிந்துரைத்து இருப்பார்கள். அவர்கள் மட்டும் தலையணை வைத்து தூங்கலாம் தலையணை இல்லாத தூக்கம் உடலில் நிகழ்த்தும் மாற்றம்.

இப்படியான தலையணையே இல்லாமல் தூங்குவதில் தான் நம் ஆரோக்கியமே இருக்கிறது.

தலையணை இல்லாமல் நீங்கள் தூங்கினால் உடல் இயற்கையான நிலையில் இருக்கும்.. இதனால் நமது கழுத்து, முதுகு வலி ஏற்படாது. இதுமட்டுமல்ல, தலையணை இல்லாமல் தூங்கினால், மன அழுத்தமும் குறைவதால், நல்ல உறக்கம் கிடைக்கிறது.

அடிக்கடி சிறுநீர் கழிப்பதை தடுக்க சில வழிகள்..!

 

இதுபோன்ற உடல் நலம் மற்றும் ஆரோக்கியம் பற்றிய தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> ஆரோக்கியமும் நல்வாழ்வும்
Advertisement