சோம்பை உணவில் சேர்ப்பதற்கு முன் அதனின் தீமைகளை தெரிந்து கொள்ளவும்

Advertisement

சோம்பு பயன்கள்

அன்றாட உணவுகளில் அஞ்சறை பெட்டி பொருட்களில் கடுகு, மிளகு, சீரகம் போன்றவை போல பெருஞ்சீரகமும் ஒன்று. இதனை சமையலில் சுவை அதிகரிப்பதற்காக சேர்க்கப்படுகிறது. வாசனைக்காக சேர்க்கப்படும் பொருட்களில் பல மருத்துவ குணங்கள் நிறைந்துள்ளது என்று அனைவரும் அறிந்ததே. ஆனால் இதில் சில பக்க விளைவுகளையும் ஏற்படுத்தும். அதனால் இந்த பதிவில் சோம்பின் பயன்கள் மற்றும் பக்க விளைவுகளை பற்றி தெரிந்து கொள்வோம் வாங்க..

சோம்பின் நன்மைகள்:

sombu theemaigal in tamil

செரிமான பிரச்சனையை சரி செய்கிறது:

செரிமான பிரச்சனை

 சோம்பு செரிமான பிரச்சனைக்கு சிறந்த தீர்வாக இருக்கின்றது. மேலும் வாயு உருவாவதை தடுத்து குடல் சீராக செயல்பட உதவி செய்கிறது. வாயு ஏற்படுத்துவதற்கு முக்கிய காரணமாக ஆண்டி மைக்ரோபியல் உருவாகும் பாக்ட்ரியாவை வளர விடாமல் தடுக்கிறது. 

இரத்த அழுத்தம்:

 சோம்பு பயன்கள்

சோம்பில் பொட்டாசியம் நிறைந்துள்ளதால் இரத்த அழுத்தத்தை சீராக வைத்து கொள்ள உதவுகிறது. பெருஞ்சீரகம் உணவில் சேர்த்து கொள்வதால் உமிழ்நீரில் உள்ள நைட்ரேட்டின் அளவை அதிகரிக்க உதவுகிறது.

மேலும் இவை அலர்ஜி, சைனஸ், ஆஸ்துமா போன்ற பிரச்சனைகளை குறைக்க உதவுகிறது. இதற்கு சிறிது சோம்பை வாயில் மென்று வெந்நீர்  குடித்தால் சுவாச பிரச்சனை சரி ஆகும்.

பெருஞ்சீரகம் பற்றி தெரிந்து கொள்ளுங்கள்..!

மலசிக்கல் பிரச்சனை:
 சோம்பு பயன்கள்

சோம்பை உணவில் சேர்ப்பதன் மலசிக்கல் பிரச்சனை வராமல் தடுக்கிறது. கண் பார்வையை அதிகப்படுத்துகிறது. இதை தாய்மார்கள் உணவில் அதிகம் சேர்ப்பதன் மூலம் தாய்ப்பால் அதிகம் சுரக்கிறது.

மாதவிடாய் பிரச்சனை:

 சோம்பு பயன்கள்

இரைப்பை சம்மந்தப்ட்ட பிரச்சனை, மாதவிடாய் பிரச்சனை போன்றவற்றிற்கு சோம்பு டீ சிறந்த தீர்வை கொடுக்கிறது.

அசைவம் சாப்பிட்ட பிறகு வாய் துர்நாற்றம் ஏற்படாமல் இருப்பதற்கு சோம்பை கொஞ்சம் மென்றால் போதுமானது.

சோம்பின் தீமைகள்:

எவ்வளவு தான் நன்மைகள் நிறைந்திருந்தாலும் உடலுக்கு சில பக்க விளைவுகளையும் ஏற்படுத்துகிறது.

கர்ப்பிணி பெண்கள் சோம்பு சாப்பிடுவதை தவிர்க்க வேண்டும். ஏனென்றால் கருப்பை சுருக்கத்தை ஏற்படுத்தி, பிரசவம் விரைவாக ஏற்படுத்துவதற்கு வழி வகுக்கிறது.

உங்களுக்கு தோல் அலர்ஜி இருந்து, சோம்பை அதிகமாக உணவில் சேர்த்து  கொண்டால் தோல் அலர்ஜியை மேலும் அதிகப்படுத்தலம்.

வலிப்பு பிரச்சனைக்கு நீங்கள் மருந்து மாத்திரை ஏதும் எடுத்து கொண்டால் சோம்பை அதிகமாக எடுத்து கொள்வதை தவிர்க்க வேண்டும்.

நீங்கள் பயன்படுத்துவது கடுகு தானா என்று எப்படி தெரிந்துகொள்வது.?

இதுபோன்ற உடல் நலம் மற்றும் ஆரோக்கியம் பற்றிய தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> Health Tips in Tamil 
Advertisement