அல்சர் நோயின் அறிகுறிகள் | Symptoms Of Ulcer in Tamil

அல்சர் அறிகுறிகள் | Ulcer Symptoms in Tamil

Ulcer in Tamil: நண்பர்களுக்கு வணக்கம்..! இன்றைய பொதுநலம்.காம்-ல் அல்சர் நோய் வருவதற்கான அறிகுறிகள் என்னென்ன உள்ளது என்பதை பற்றி தெரிந்துக்கொள்ளுவோம். வயது வித்தியாசம் இல்லாமல் இன்று அனைவரும் எதிர்கொள்ளும் பிரச்சனையாக இருப்பது இந்த அல்சர் நோய். அல்சர் வருவதற்கு காரணம் என்னவென்றால் நேரத்திற்கு உணவு எடுத்துக்கொள்ளாமல் இருப்பதே இதன் விளைவாகும். சரி இப்போது நம் உடலில் ஏற்படக்கூடிய அல்சர் நோய்க்கான அறிகுறி என்னென்ன என்பதை பற்றி இப்போது படித்து தெரிந்துக்கொள்ளுவோம்.

newஅல்சர் குணமாக பாட்டி வைத்தியம்

அல்சர் அறிகுறிகள் என்ன:

Ulcer in Tamilஅல்சர் ஏற்படுவதற்கான முதல் அறிகுறி வயிற்று பகுதியில் ஏற்படக்கூடிய வலிதான். வயிற்றில் எரிவது போன்று மிக கடுமையான வலி உண்டாகும். இந்த வலியானது வயிற்றில் புண் ஏற்பட்ட இடத்தில் அமிலம் படுவதால் வலியானது உண்டாகிறது.

உணவு சாப்பிடாமல் வெறும் வயிற்றில் இருக்கும் போது வலியானது இன்னும் அதிகமாக இருக்கும். இப்போது இதனை தொடர்ந்து அல்சர் வருவதற்கு அறிகுறிகள் என்னென்ன உள்ளது என்பதை பற்றி ஒவ்வொன்றாக படித்து தெரிந்துக்கொள்ளலாம்.

அல்சர் அறிகுறி 1:

அல்சர் புண்களின் பொதுவான அறிகுறி எதுவென்றால் அடி வயிற்று பகுதியில் அதிகமாக வலி உண்டாகும். செரிமான மண்டலத்தின் மேல் பகுதியில் எந்த இடத்தில் வேண்டுமானாலும் புண் வரலாம். இந்த வயிற்று வலியானது நாம் உணவு எடுத்துக்கொள்ளாத நேரத்தில் ஏற்படுகிறது.

அல்சர் அறிகுறி 2:

அல்சர் என்று சொல்லக்கூடிய வயிற்று பகுதியில் ஏற்படும் புண்களுக்கான அறிகுறியாக இருப்பது குமட்டல். இந்த பிரச்சனையிலிருந்து வெளியேற வேண்டுமென்றால் உணவில் அலட்சியம் செய்யாமல் நேரத்திற்கு சாப்பிட்டு வந்தால் இந்த நோயிலிருந்து தப்பிக்கலாம்.

அல்சர் அறிகுறி 3:

புண்களினால் உண்டாகக்கூடிய குமட்டல் சில நேரத்தில் வாமிட் போன்றவற்றை ஏற்படுத்தும். இது போன்ற நிலை வந்தால் இப்யூபுரூஃபன் மற்றும் ஆஸ்பிரின் என்று சொல்லக்கூடிய மருந்தினை எடுத்துக்கொள்வதை தவிர்த்துக்கொள்வது நல்லது. ஏனென்றால் இந்த வலி மருந்தானது அதிகமாக வயிற்றில் புண்களை ஏற்படுத்தும்.

newஅல்சர் குணமாக சித்த வைத்தியம் …!

அல்சர் அறிகுறி 4: 

இரைப்பை குழாயில் இருந்து இரத்தம் கசிதல் என்பது பல வகையான உடல் சம்பந்த பிரச்சனையை குறிக்கிறது. இந்த இரத்த கசிதலானது மேல் வயிற்று வலியுடன் சேர்ந்து ஏற்பட்டால் அது வயிற்று புண்களுக்கான அறிகுறியாகும்.

அல்சர் அறிகுறி 5:

வயிற்றில் புண்கள் இருந்தால் மார்பு சம்பந்த வலிகள் ஏற்படும். மேலும் இந்த அல்சர் அறிகுறியானது மன அழுத்தம், பதற்றம் போன்றவைகளால் கூட இந்த அல்சர் நோயானது வரலாம்.

அல்சர் அறிகுறி 6: 

வயிற்று பகுதியானது வீக்கம் அடைந்திருப்பது போன்று நீங்கள் அறிந்தால் வாயு சம்பந்தமான பிரச்சனைகளாக கூட இருக்கலாம். இது மட்டுமல்லாமல் வயிறு புண்களுக்கான அறிகுறியாக கூட இருக்கலாம்.

அல்சர் அறிகுறி 7:

அல்சர் அறிகுறியாக இருந்தால் உடல் எடையானது குறைந்து காணப்படும். அதிகமாக பசி எடுக்காமல் இருப்பதை வைத்து நீங்கள் இதனை அறிந்துகொள்ளலாம். உணவு உட்கொள்ளும் போது அசெளகரியமாக உங்களை உணர செய்யும்.

அல்சர் அறிகுறி 8:

அல்சர் நோயினால் வரக்கூடிய புண் பசியினை கட்டுப்படுத்துகிறது. சிலருக்கு பசிக்கும் நேரத்தில் வயிற்று பகுதியில் எரிச்சலும், கசப்பு தன்மையை உணர்கின்றனர். இந்த வலியானது உணவு உண்ட பிறகு குறைந்துவிடும். பசி வரும்போது மட்டும் இந்த வலி ஏற்படுவதால் இதனை வைத்து அல்சர் நோயை கண்டறியலாம்.

அல்சர் அறிகுறி 9:

அல்சரினால் ஏற்படக்கூடிய இந்த வலியானது வயிற்றின் மேல் அல்லது நடுப்பகுதியில் ஏற்படுவதாக சிலர் தெரிவிக்கின்றனர். இதனால் முதுகு பகுதிகளில் வலி உண்டாகிறது. இந்த அறிகுறிகளை வைத்தும் தெரிந்துக்கொள்ளலாம்.

அல்சர் அறிகுறி 10:

ஏப்பம் என்பது வயிற்றில் உள்ள புண்களின் பொதுவான அறிகுறியாகும். ஏப்பமானது வழக்கத்தினை விட அதிகமாக இருந்தால் மருத்துவரை அணுகி ஆலோசிப்பது மிகவும் நல்லது.

இதுபோன்ற உடல் நலம் மற்றும் ஆரோக்கியம் பற்றிய தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—>Health tips in tamil