மன அழுத்தம் குறைய | Stress Relief Tips in Tamil
வாழ்க்கை என்றாலே நிறைய மேடு பள்ளங்கள் இருக்கத்தான் செய்யும். அதிலும் இன்றைய காலத்தில் எதற்கெடுத்தாலும் டென்ஷன், நிறைய கோபம் வருகிறது. இதனால் பலருக்கும் மன அழுத்தம் அதிகமாகி கொண்டிருக்கிறது. மன அழுத்தத்தை குறைப்பதற்கு பல பேர் பயிற்சி வகுப்புகளுக்கு செல்வார்கள். மன உளைச்சல் என்பது மனதளவில் மட்டுமல்லாமல் உடளவிலும் நம்மை தாக்கக்கூடியது. நாம் இந்த பதிவில் மன அழுத்தம் குறைய சில வழிமுறைகளை பார்க்கலாம்.
மன அழுத்தம் மற்றும் கோபம் குறைய யோகாசனம்..! |
உடற்பயிற்சி:
மனம் சமபந்தப்பட்ட அனைத்து விஷயத்திற்கும் சிறந்த மருந்தாக விளங்குகிறது உடற்பயிற்சி. தினமும் உடற்பயிற்சி செய்வதன் மூலம் நம் மூலையில் இருக்கக்கூடிய நரம்பு பகுதிகள் சீராக இயங்கி அமைதி நிலையை பெறும். உடலின் இயக்கத்தின் மூலம் எண்டோர்பின் (Endorphins) என்னும் ஹார்மோன் சுரப்பது தூண்டப்படுவதால், மன அழுத்தம் குறைந்து, மன அமைதி கிடைக்கும். சரியான நேரத்தில் படுக்கை அறைக்கு சென்று தூங்கினாலே பாதி மன அழுத்தத்தை குறைத்துவிடலாம்.
உணவு முறை:
மன அழுத்தத்தை குறைப்பதில் உணவு முக்கிய பங்கினை வகிக்கிறது. மன அழுத்தத்தை குறைப்பதில் நாம் எடுத்துக்கொள்ளும் உணவுகளில் தான் அதிகளவு நார்ச்சத்துக்கள் மற்றும் ஆக்ஸிஜனேற்றம் நிறைந்துள்ளது. அதிக உடல் எடையினால் கூட சிலருக்கு அதிக மன அழுத்தம் ஏற்படுகிறது. உணவு முறைகளில் கட்டுப்பாடுடன் இருந்தால் மன அழுத்தத்தை குறைக்கலாம்.
செல்ல பிராணிகள்:
வீட்டில் உள்ள பிரச்சனைகளால், வெளியிடங்களில் ஏற்படும் சில பிரச்சனையினால் பலருக்கும் ஸ்ட்ரெஸ் அதிகமாகிறது. நிறைய வீடுகளில் நாய், பூனை, புறாக்கள், கிளி போன்றவை செல்ல பிராணிகளாக வளர்க்கப்படுகிறது. மனதில் அதிக அழுத்தத்துடன் இருப்பவர்கள் வீட்டில் இருக்கக்கூடிய பிராணிகளுடன் சிறிது நேரம் விளையாடி மகிழ்ந்தால் மனதில் உள்ள அனைத்து அழுத்தங்களும் குறைந்துவிடும்.
மூச்சுப் பயிற்சி செய்யும் முறை & அதன் நன்மைகள்..! |
டார்க் சாக்லேட்:
உங்களுடைய மன அழுத்தம் இரண்டு மடங்காக குறைவதற்கு டார்க் சாக்லேட்டை சாப்பிடலாம். சாக்லேட்டில் அதிக பிளவனாய்டுகள் இருப்பதால் நரம்புகளைக் தளர செய்து, ரத்த செல்கள் உங்களுக்கு அமைதியையும் மனதிற்கு ரிலாக்ஸையும் தருகிறது.
வேகமாக கத்த வேண்டும்:
மனதில் உள்ள மொத்த ஸ்ட்ரெஸ்ஸையும் விரட்டி அடிக்க சிறந்த வழி இதுதான். வீட்டில் இருட்டான இடம் அல்லது மொட்டை மாடிக்கு சென்று மனதையும் வாயையும் விட்டு வேகமாகக் கத்த வேண்டும். உங்களுடைய மன அழுத்தம் முழுவதுமாக குறைந்துவிடும்.
இதுபோன்ற உடல் நலம் மற்றும் ஆரோக்கியம் பற்றிய தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> | ஆரோக்கியமும் நல்வாழ்வும் |