திப்பிலி பயன்கள் | Thippili Benefits in Tamil

Advertisement

திப்பிலி மருத்துவ குணங்கள் | Thippili Medicinal Uses in Tamil

Thippili Benefits in Tamil: வணக்கம் நண்பர்களே..! இன்றைய பொதுநலம்.காம்-ல் திப்பிலியின் மருத்துவ குணங்களை பற்றி தெரிந்துக்கொள்ளுவோம். ஒவ்வொரு மூலிகைகளுள் தனி தனி மருத்துவ குணம் அடங்கியுள்ளது. திப்பிலியின் காய் உணவுப் பொருட்கள், மருந்துப் பொருட்கள், உயர் ரக மதுபான வகைகள் மற்றும் வாசனைப் பொருட்களில் அதிகமாக பயன்படுத்தப்பட்டு வருகின்றனர். அந்த வகையில் திப்பிலியை சாப்பிடுவதன் மூலம் நம் உடலில் ஏற்படக்கூடிய எந்தெந்த நோய்களை குணப்படுத்தலாம் என்பதை இப்போது படித்து தெரிந்துக்கொள்ளுவோம். 

திப்பிலி பயிரிடும் முறை மற்றும் அதன் பயன்கள்..!

மூலம் நோய் குணமாக:

Thippili Benefits in Tamil

மலச்சிக்கல் பிரச்சனை, இடைவிடாமல் தொடர்ந்து ஓரே இடத்தில் அமர்ந்து வேலை செய்பவர்களுக்கு மூலம் நோய் வருவதற்கான வாய்ப்பு அதிகமாக உள்ளது. மூலம் நோயால் அவதிப்படுபவர்கள் திப்பிலியை நன்றாக பொடி செய்து அதனுடன் குப்பைமேனி செடியை (திப்பிலி சாப்பிடும் முறை) நிழலில் நன்றாக காய வைத்து  பொடி செய்து திப்பிலி பொடியுடன் கலந்து சாப்பிட்டு வர மூல நோய் பிரச்சனை முற்றிலும் சரியாகிவிடும்.

கல்லீரல், மண்ணீரல் பிரச்சனையை சரி செய்ய:

Thippili Benefits in Tamil

நாம் சாப்பிடும் உணவுகளில் இருக்கும் நச்சுக்களை வெளியேற்றுவதும், தேவையான பித்த நீரை உற்பத்தி செய்வது, உடலுக்கு தேவையான நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிப்பது போன்ற செயல்களை கல்லீரல், மண்ணீரல் செய்கின்றன. உடலில் எங்கேயும் அடிபடும் போது, அதிக அலர்ஜியாலும் இந்த இரண்டு உறுப்புகளும் பாதிக்கப்பட்டு வீக்கம் ஏற்படுகின்றன. இதுபோன்ற வீக்கம் குணமடைய திப்பிலியை பொடி செய்து சாப்பிட்டு வர வீக்கங்களை குணப்படுத்த முடியும். 

சுவாச நோய் குணமாக:

 Thippili Benefits in Tamil

திப்பிலி பயன்கள் in tamil: ஆஸ்துமா, பிராங்கைட்டிஸ் (Acute Bronchitis), மார்பு சளி போன்ற கொடிய நோய்கள் நமது நுரையீரலை மிகவும் பாதிப்படைய செய்யும். இது போன்ற நோய் ஏற்பட்டால் மூச்சு விடுவதற்கு மிகவும் சிரமமாக இருக்கும். இந்த நோய் குணமாக திப்பிலி பொடியை சூடான பாலில் கலந்து சாப்பிட்டு வந்தால் நுரையீரலை பாதிக்கும் அனைத்து சுவாச சம்பந்தமான நோய்களையும் உடனடியாக சரி செய்யலாம். 

ஜாதிபத்திரி பயன்கள்

காய்ச்சல் சரியாக:

 Thippili Benefits in Tamil

திப்பிலி பயன்கள் in tamil: உடலில் நோய் எதிர்ப்பு சக்தி குறைந்து காணப்படும்போது காய்ச்சல் ஏற்படுகிறது. உடலில் உண்டாகக்கூடிய காய்ச்சல் நீங்க திப்பிலி, சுக்கு, மிளகு போன்றவற்றை சேர்த்து கஷாயம் வைத்து குடித்துவர காய்ச்சல் முற்றிலும் நீங்கிவிடும்.

மாதவிடாய் காலத்தில் அதிக இரத்தப்போக்கை கட்டுப்படுத்த:

 Thippili Benefits in Tamil

மாதவிடாய் நேரத்தில் சில பெண்களுக்கு அதிக இரத்தப்போக்கு ஏற்படுவதால் உடல் சோர்வுடன் காணப்படுவார்கள். அதிக இரத்தப்போக்கை கட்டுப்படுத்த திப்பிலி ஐந்து பங்கு, தேற்றான் விதை மூன்று பங்கு சேர்த்து பொடி செய்து, அரிசி கழுவிய தண்ணீரில் கலந்து மாதவிடாய் நேரத்தில் மூன்று தினங்களுக்கு தினமும் இருவேளை குடித்து வந்தால் அதிக இரத்தப்போக்கை கட்டுப்படுத்தலாம். 

செரிமான பிரச்சனையை தடுக்க:

 Thippili Benefits in Tamil

சிலருக்கு சாப்பிட பின் உணவானது சரியான முறையில் அஜீரணம் ஆகாமல் இருக்கும். செரிமான பிரச்சனைக்கு திப்பிலியானது நல்ல தீர்வு கொடுக்கிறது. மலச்சிக்கல் பிரச்சனை, குடல் சுத்திகரிப்பு, வயிறு சம்பந்த  அனைத்து பிரச்சனைக்கும் திப்பிலி தீர்வு கொடுக்கிறது. 

இரத்த சோகை குணமாக:

 Thippili Benefits in Tamil

thippili uses tamil: நமது உடலில் இரத்த சோகை பிரச்சனை வராமல் இருக்க இரத்த சிவப்பு அணுக்களின் எண்ணிக்கை அதிகமாக இருக்க வேண்டும். இரத்த சோகை உள்ளவர்கள் வாரத்தில் 1 முறை திப்பிலி பொடியை சாப்பிட்டு வர உடலில் இரத்த அணுக்கள் எண்ணிக்கை அதிகரிக்கும். அதுமட்டுமல்லாமல் உடலில் நோய் எதிர்ப்பு சக்தியும் அதிகமாக இருக்கும். 

சர்க்கரை நோய் குணமாக:

 Thippili Benefits in Tamil

Thippili Benefits in Tamil: உடலில் குளுகோஸின் அளவை சமநிலையில் வைத்துக்கொள்வதில் பொறுப்பு அதிகமாக வகிப்பது “இன்சுலின்” ஆகும். திப்பிலி பொடி சாப்பிடுபவர்களுக்கு கணையத்தினைத் தூண்டி, இன்சுலினை சுரக்கச் செய்து இரத்தத்தில் சர்க்கரையின் அளவை கட்டுக்குள் வைத்து நீரிழிவு நோய் பாதித்தவர்களுக்கு பெருமளவு நிவாரணம் அளிக்கிறது.

தலை வலி நீங்க:

 Thippili Benefits in Tamil

Thippili Benefits in Tamil: சிலருக்கு உடலில் இருக்கும் நரம்பு சம்பந்தமான பிரச்சனையினாலும், வேறு பல காரணங்களாலும் அடிக்கடி தலைவலி பிரச்சனையினால் அவதிப்படுவார்கள். தலைவலி பிரச்சனைகளுக்கு சிறந்த நிவாரணமாக திப்பிலி பொடி பயன்படுகிறது. மிகவும் காரமான திப்பிலி பொடி சாப்பிட சிறிது நேரத்திலேயே தலைவலி முற்றிலும் நீங்கிவிடும். 

இதுபோன்ற உடல் நலம் மற்றும் ஆரோக்கியம் பற்றிய தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> ஆரோக்கியமும் நல்வாழ்வும்
Advertisement