தொண்டை புண் குணமாக இதை ட்ரை பண்ணுங்க போதும்..!

Advertisement

தொண்டை புண் குணமாக இயற்கை மருத்துவம்

வணக்கம் ஆரோக்கிய நண்பர்களே..! தொண்டை புண் என்பது சிலருக்கு நீண்ட நாளாக இருந்து வரும் பிரச்சனையாக இருக்கிறது. ஆரம்பத்தில் சாப்பிடும் போது அல்லது பேசும் போது தொண்டையில் வலி ஏற்படும். அந்த வலி அதிகமாகி ஒரு கட்டத்திற்கு பிறகு அது ஆராத புண்ணாக மாறிவிடுகிறது. இந்த தொண்டை புண் நமது உடலுக்கு ஏற்படும் அழற்சி காரணமாக வருகிறது. இத்தகைய பிரச்சனைக்கு எவ்வளவு தான் மாத்திரை சாப்பிட்டாலும் சிலருக்கு  தீராத நோயாக இருக்கும். ஆனால் தொண்டை புண்ணை வீட்டு வைத்தியத்தின் மூலம் குணமடைய செய்ய முடியும். அத்தகைய வீட்டு வைத்தியம் என்ன என்பதை இன்றைய பதிவின் மூலம் படித்து தெரிந்துகொள்ளலாம் வாங்க…!

Throat Ulcer Home Remedies in Tamil:

மாதுளை பூ மருத்துவம்:

மாதுளை பூ மருத்துவம்

நீண்ட நாளாக தொண்டை புண் இருந்தால் அந்த புண்ணை சரி செய்வதற்கு முதலில் நீங்கள் மாதுளை பூவை எடுத்துக் கொள்ளுங்கள். அதன் பிறகு சிறிதளவு தண்ணீர் மற்றும் மாதுளம் பூ சேர்த்து அதனை நன்றாக கொதிக்க வைத்து வடிகட்டி விடுங்கள். இப்போது அந்த தண்ணீருடன் 1 ஸ்பூன் தேன் சேர்த்து குடித்தால் தொண்டை புண் விரைவில் குணமடையும்.

எலுமிச்சை சாறு உப்பு:

எலுமிச்சை சாறு உப்பு

1 டம்ளர் சூடு தண்ணீரில் சிறிதளவு எலுமிச்சை சாறு மற்றும் உப்பு சிறிதளவு சேர்த்து அந்த தண்ணீரை இரவு தூங்க போகும் முன்பு வாய் கொப்பளிக்க வேண்டும். இது மாதிரி செய்தால் தொண்டை புண் சரியாகிவிடும்.

திரிகடுகு சூரணம்:

திரிகடுகு சூரணம்

1 ஸ்பூன் தேனுடன் திரிகடுக சூரணத்தை கலந்த சாப்பிட்டால் தொண்டை புண் குணமாகும். ஏனென்றால் திரிகடுக சூரணத்திற்கு பாக்டீரியாவை அளிக்கும் தன்மை இருகிறது.

வெந்தயம்:

வெந்தயம் நன்மைகள்

 

வெந்தயத்தில் எண்ணற்ற மருத்துவ குணங்கள் இருக்கிறது. அதனால் தொண்டை புண் உள்ளவர்கள் வெந்தயத்தில் டீ போட்டு குடித்தால் விரைவில் புண் சரியாகிவிடும்.

பூண்டு மருத்துவ குணம்:

பூண்டு மருத்துவ

பூண்டில் இயற்கையாவே நோய் எதிர்ப்பு சக்தி பண்பு இருக்கிறது. ஆகையால் தினமும் நீங்கள் சாப்பிடும் உணவுகளில் ஏதாவது ஒரு வகையில் பூண்டினை எடுத்துக்கொள்ள வேண்டும். இதுமாதிரி சாப்பிட்டால் தொண்டை புண்ணிற்கு நல்லது.

ஆப்பிள் சீடர் வினிகர்:

ஆப்பிள் சீடர் வினிகர்

அதே போல ஆப்பிள் சீடர் வினிகரில் பாக்டீரியாவை அளிக்கும் தன்மை இருக்கிறது. அதனால் 1 ஸ்பூன் சீடர் ஆப்பிள் வினிகரை 1 கப் சூடு தண்ணீரில் கலந்து தினமும் காலை, இரவு என இரண்டு வேளையும் வாய் கொப்பளிக்க வேண்டும். இதுவும் தொண்டை புண் வீட்டு வைத்தியத்தில் ஒன்று.

சமையல் சோடா:

சமையல் சோடா

1/4 ஸ்பூன் சமையல் சோடா, 1/2 ஸ்பூன் உப்பை இவை இரண்டையும் 1 கப் சூடு தண்ணீரில் கலந்து வாய் கொப்பளித்தால் தொண்டை புண் பிரச்சனை இனி இருக்காது.

இதையும் படியுங்கள்⇒ தோள்பட்டை வலி நீங்க எளிய வீட்டு வைத்தியங்கள்..!

இதுபோன்ற உடல் நலம் மற்றும் ஆரோக்கியம் பற்றிய தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> ஆரோக்கியமும் நல்வாழ்வும்
Advertisement