யூரிக் அமிலத்தை கட்டுப்படுத்தும் பழங்கள் எது..?

Advertisement

Uric Acid Control Fruits in Tamil

அன்பு நேயர்களுக்கு வணக்கம்..! இன்றைய ஆரோக்கியம் பதிவில் யூரிக் அமிலத்தை கட்டுப்படுத்த சாப்பிட வேண்டிய பழங்கள் எது என்பதை பற்றி தான் பார்க்க போகிறோம். யூரிக் அமிலம் என்பது உடலில் உள்ள கழிவுகளில் ஓன்று. யூரிக் அமிலம் என்பது உடலில் புரதங்கள் உடைக்கப்படும் பொழுது அதில் இருக்கும் பியூரின் என்ற வேதிப்பொருளானது உடலில் யூரிக் அமிலத்தை  சுரக்கிறது. நாம் உண்ணும் உணவு பொருட்களில் இருந்து உறிஞ்சப்படும் செல்களில் வளர்ச்சிதை மாற்றம் ஏற்படுகிறது. அதிலிருந்து பெறப்படும் கழிவுகள் யூரிக் அமிலமாக உற்பத்தி ஆகின்றன. அந்த வகையில் இந்த யூரிக் அமிலத்தை கட்டுப்படுத்தும் பழங்கள் என்ன என்பதை இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்ளலாம் வாங்க..!

யூரிக் அமிலம் முற்றிலும் குணமாக சித்த மருத்துவம்..!

யூரிக் அமிலத்தை கட்டுப்படுத்தும் பழங்கள்: 

யூரிக் அமிலம் என்பது ஒரு வகையான கழிவு பொருள் என்று சொல்லப்படுகிறது. இது கார்பன், நைட்ரஜன், ஆக்சிஜன் மற்றும் ஹைட்ரஜன் போன்றவற்றால் ஆன கரிமச் சேர்மமாகும்.

இந்த யூரிக் அமிலமானது ஆண்களுக்கு அதிகமாக வருகிறது. உடலில் யூரிக் அமிலம் அதிகமாக இருக்கும் போது மன அழுத்தம், தூக்கமின்மை போன்ற பிரச்சனைகள் ஏற்படுகிறது. இந்த யூரிக் அமிலம் மிகவும் அதிகமாக ஏற்படும் பொழுது கீழ்வாதத்தை ஏற்படுத்துகிறது.

அதனால் கட்டாயம் யூரிக் அமிலத்தை கட்டுப்படுத்த வேண்டும். அதுபோல யூரிக் அமிலத்தை கட்டுப்படுத்தும் பழங்களை பற்றி இங்கு பார்க்கலாம்.

ஆப்பிள்: 

ஆப்பிள்

இதில் பல்வேறு ஊட்டச்சத்துக்கள் காணப்படுகின்றன. ஆப்பிளில் வைட்டமின்கள், தாதுக்கள், ஆக்ஸிடன்கள் மற்றும் நார்ச்சத்துக்கள் அதிகளவில் காணப்படுகின்றன.

அதனால் தினமும் ஒரு ஆப்பிள் சாப்பிட்டு வருவதால் யூரிக் அமிலத்தின் அளவை கட்டுக்குள் வைக்கிறது. அதுமட்டுமில்லாமல், இது யூரிக் அமிலத்தின் அறிகுறிகளையும் அகற்றுகிறது.

எலுமிச்சை பழம்:

எலுமிச்சை பழம்

எலுமிச்சை பழத்தில் சிட்ரிக் அமிலம் அதிகமாக இருப்பதால் இது யூரிக் அமிலத்தின் அளவை கட்டுப்படுத்துகிறது. தினமும் ஒரு கிளாஸ் தண்ணீரில் எலுமிச்சை சாறை கலந்து குடித்து வருவதால் யூரிக் அமிலத்தால் ஏற்படும் பிரச்சனைகள் வராமல் தடுக்க முடியும்.

செர்ரி: 

செர்ரி

செர்ரி பழத்தில் ஆரோக்கியத்தை தரக்கூடிய சத்துக்கள் அதிகம் காணப்படுகின்றன. இதில் இருக்கும் வைட்டமின் சி, ஆக்ஸிஜனேற்றிகள் மற்றும் அந்தோசயினின்கள் எனப்படும் அழற்சி எதிர்ப்பு பண்புகள் யூரிக் அமிலத்தின் அளவை கட்டுப்படுத்த உதவுகிறது.

செர்ரி பழத்தை உட்கொள்வதால் யூரிக் அமிலத்தால் உடலில் ஏற்படும் வீக்கம் மற்றும் விறைப்பு தன்மை போன்ற பாதிப்புகள் வராமல் தடுக்கிறது.

உடம்பில் சுரக்கும் யூரிக் அமிலம் பற்றி உங்களுக்கு தெரியுமா.?

 

இதுபோன்ற உடல் நலம் மற்றும் ஆரோக்கியம் பற்றிய தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> ஆரோக்கியமும் நல்வாழ்வும்
Advertisement