வால் மிளகு மருத்துவ குணங்கள் | Val Milagu Benefits in Tamil

வால்மிளகு மருத்துவ பயன்கள் | Valmilagu Uses in Tamil 

Valmilagu Health Benefits in Tamil: வணக்கம் நண்பர்களே..! இன்றைய பதிவில் வால்மிளகின் மருத்துவ குணங்களை பற்றித்தான் தெரிந்துக்கொள்ளப்போகிறோம். வால்மிளகானது மிளகு போன்ற வடிவமைப்பில் தான் இருக்கும். ஆனால் மிளகில் காம்பு பகுதி இருக்காது, வால்மிளகில் காம்பு இருப்பதால் இதற்கு வால் மிளகு என்று பெயர் வந்தது. அரேபியா, சீனா மற்றும் மலேசியா நாட்டில் இன்றும் அதிகளவு சமையலில் வால்மிளகானது பயன்படுத்தப்பட்டு வருகிறது. வால்மிளகில் இருக்கக்கூடிய வேதிப்பொருள்கள் உடலில் புற்றுநோய் வராமல் தடுத்து நிறுத்தும். புற்றுநோய் மட்டு மல்லாமல் உடலில் ஏற்படக்கூடிய பல நோய்களை சரி செய்யும் மருத்துவ குணம் வாய்ந்தது இந்த வால் மிளகு. சரி வால் மிளகு என்னென்ன நோய்களை குணப்படுத்தும் என்பதை பற்றி விரிவாக கீழே படித்தறியலாம். 

தூதுவளை மருத்துவ பயன்கள்

இருமல் நீங்க:

Valmilagu Health Benefits in Tamil

தீராத இருமல் நோய் குணமாக இலவங்கப்பட்டை , வால்மிளகு இரண்டையும் நன்றாக பொடி பதத்திற்கு செய்து சிறிது நெய்யில் பொடியை கலந்து சாப்பிட்டு வர விடாத இருமல் பிரச்சனை தீரும்.

கல் அடைப்பு / சிறுநீர் பிரச்சனை குணமாக:

Valmilagu Health Benefits in Tamil

சிறுநீரக பிரச்சனை, கல் அடைப்பு பிரச்சனை உள்ளவர்கள் சந்தனப்பொடி, வால்மிளகு, அதிமதுரம் ஆகிய மூன்றனையும் நீரில் நன்றாக காய்ச்சி தினமும் மூன்று வேலை குடித்து வந்தால் வயிற்றில் உள்ள கல் அடைப்பு, சிறுநீரக பிரச்சனை அனைத்தும் நீங்கிவிடும்.

வாய் துர்நாற்றம் நீங்க:

 Val Milagu Benefits in Tamil

வால்மிளகினை நன்றாக பொடி செய்து அந்த பொடியுடன் சீரகம் சேர்த்து மோருடன் கலந்து குடித்து வந்தால் வாய் துர்நாற்றம் மற்றும் பற்களில் ரத்தம் கசிதல் போன்ற பிரச்சனை சரியாகும்.

மிளகு சாகுபடி மற்றும் அதன் பயன்கள்..!

சிறுநீரக பகுதியில் எரிச்சல் நீங்க:

 வால் மிளகு மருத்துவ குணங்கள்

வால் மிளகை எடுத்து பசும்பாலில் ஊறவைத்து நன்றாக காய வைத்து அதன் பிறகு  பொடி செய்து, வெள்ளை பூசணிக்காய், பீர்க்கங்காய், சுரைக்காய் போன்ற நீர்க் காய்களின் பொரியல், கூட்டு வகைகளில் தூவிச் சாப்பிடலாம். இதனால் சிறுநீர் கழிக்கும் போது ஏற்படும் எரிச்சல் குறைவதுடன் அதிக உடல் சூட்டினால் அவதிப்படுபவர்களுக்கு நல்ல நிவாரணம் கிடைக்கும்.

தொண்டை சம்பந்த பிரச்சனை குணமாக:

 வால்மிளகு மருத்துவ பயன்கள்

தொண்டை சம்பந்தமான பிரச்சனை, தும்மல், குரல் அடைப்பு போன்ற பிரச்சனையினால்  அவதிப்படுபவர்கள் அதிமதுரத்தினை தூளாக்கி அதனுடன்  வால்மிளகைச் சேர்த்து லேகியமாகக் செய்து தினமும் சாப்பிட்டு வந்தால் தொண்டை சம்பந்த அனைத்து பிரச்சனைகளும் குணமாகும்.

இதுபோன்ற உடல் நலம் மற்றும் ஆரோக்கியம் பற்றிய தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—>Tamil maruthuvam tips