வைட்டமின் குறைபாடு அறிகுறிகள் & அதற்கான உணவுகள்..! vitamin deficiency symptoms

vitamin deficiency symptoms

வைட்டமின் குறைபாடு அறிகுறிகள் & அதற்கான உணவு முறைகள்..! vitamin deficiency symptoms

vitamin deficiency symptoms: வைட்டமின் சத்துக்களில் A,B,C,D என்று பலவகையான சத்துக்கள் இருக்கிறது, நம் உடலின் செயல்பாடுகள் மிகவும் ஆரோக்கியமாக இருக்க வேண்டும் என்றால் அதற்கு வைட்டமின் சத்துக்கள் மிகவும் அவசியம். வைட்டமின் குறைபாடுகளை சில அறிகுறிகள் மூலமாகவே நாம் தெரிந்து கொள்ள முடியும்.

இதற்காக நாம் இரத்த பரிசோதனை (blood test) எடுத்து பார்க்க  வேண்டிய அவசியம் இல்லை. நம் உடலில் நிகழும் சில அறிகுறிகளை வைதே தெரிந்து கொள்ளலாம். பின் அதற்கான ஆரோக்கிய உணவுகளை மேற்கொண்டால் இந்த வைட்டமின் குறைபாடு பிரச்சனையை சரி செய்யலாம்.

சரி இங்கு வைட்டமின் குறைபாடு அறிகுறிகள் (vitamin deficiency symptoms) மற்றும் அதற்கான உணவு முறைகளையும் இங்கு படித்தறிவோம் வாங்க.

இதையும் படியுங்கள்👉 அழகை பாதுகாக்கும் விட்டமின்கள்..!

விட்டமின் B7 குறைபாடு அறிகுறிகள் / vitamin B7 symptoms:

இப்போது எல்லாம் பலருக்கு தலைமுடி உதிர்வு மற்றும் பொடுகு பிரச்சனை இருக்கிறது இதற்கு என்ன காரணம் என்றால் உடலில் அதிகப்படியான வைட்டமின் குறைபாடு பிரச்சனையே காரணமாகும்.

எனவே உடலில் வைட்டமின் பி7 சத்துக்களை அதிகரிக்க முட்டை, பாதாம், நட்ஸ், பருப்பு வகைகள் மற்றும் முழு தானியங்களை அதிகளவு உணவாக உட்கொள்வதினால் இந்த வைட்டமின் பி7 குறைபாடுகளை சரி செய்யலாம்.

வைட்டமின் டி அதிகம் உள்ள உணவுகள்

விட்டமின் சி குறைபாடு / vitamin c symptoms:

சிலருக்கு அடிக்கடி பற்களில் உள்ள ஈரல்களில் இரத்தம் வலிந்து கொண்டே இருக்கும் இதர்க்கு வைட்டமின் சி குறைபாடு என்று சொல்லலாம். உடலில் வைட்டமின் சி சத்து குறைந்தால் அது நோய் எதிர்ப்பு சக்தியையும் பாதிக்கும்.

எனவே வைட்டமின் சி சத்துக்களை அதிகரிக்க மிளகு, முளைகட்டிய பயிர், ப்ரோக்கோலி, ஸ்ட்ராபெரி, திராட்சை போன்றவற்றை அதிகளவு சாப்பிட வேண்டும். இதனால் வைட்டமின் சி சத்துக்களை அதிகரிக்கலாம். மேலும் பற்கள் மற்றும் ஈறுகள் பலம் பெரும்.

வைட்டமின் பி12 குறைபாடு / vitamin B12 symptoms:

சிலருக்கு சருமங்களில் சுருக்கங்கள் ஏற்படும், மேலும் சோர்வாகவே காணப்படுவோம் இந்த பாதிப்புக்கு வைட்டமின் பி12 குறைபாடே காரணமாகும்.

எனவே இந்த பிரச்சனையை சரி செய்ய தானியங்கள், இறைச்சி, மீன், தயிர், சீஸ் (CHEESE) போன்ற உணவுகளை அதிகளவு சாப்பிடலாம். இதன் மூலம் வைட்டமின் பி12 குறைபாட்டினை சரிசெய்யலாம்.

இதையும் படியுங்கள்👉முகம் வெள்ளையாக வைட்டமின் ஈ மாத்திரை அழகு குறிப்பு..!

அயோடின் குறைபாடு:

பொதுவாக ஒரு மனிதனுக்கு தூக்கம் என்பது 7 மணி நேரம் தான், இருந்தாலும் சிலர் இரவு முழுவது நன்றாக உறங்கிவிட்டு, மறுநாள் காலையில் கண் விழிக்கும் போது இரு கண்களும் வீங்கி இருக்கும்.

சரியான தூக்கம் இல்லை என்பது பலரது நினைப்பாகும், இது தவறான எண்ணமாகும். கண்கள் வீங்கி இருந்தால் அதற்கு அயோடின் குறைபாடு என்று அர்த்தமாகும்.

இந்த அயோடின் குறைபாடுகளை சரி செய்ய தினமும் அன்றாட உணவில் அதிகளவு தயிர் (Yogurt), உருளைக்கிழங்கு, ஸ்ட்ராபெரி, பீன்ஸ் போன்றவற்றை சேர்த்துக் கொள்ளுங்கள் இதனால் அயோடின் குறைபாடு சரியாகும்.

இரும்பு சத்து குறைபாடு:

உதடுகளில் அடிக்கடி வெடிப்புகள் விழுந்தால் அதற்கு இரும்பு சத்து குறைபாடு என்று சொல்லலாம். மேலும் நம் உடலில் நோய் எதிர்ப்பு சக்திகள் குறைத்தாலும் உதடுகளில் வெடிப்புகள் விழும்.

இந்த பிரச்சனையை சரி செய்ய கடல் உணவு, இறைச்சி, பீன்ஸ், பச்சை நிற காய்கறிகள், தானியங்கள் மற்றும் பச்சை பட்டாணி போன்ற சத்துக்கள் அதிகம் நிறைந்துள்ள உணவுகளை அதிகம் உட்கொள்ள வேண்டும், இதனால் உடலில் இரும்பு சத்து மற்றும் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கலாம்.

 

இதுபோன்ற உடல் நலம் மற்றும் ஆரோக்கியம் பற்றிய தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> உடல் ஆரோக்கிய குறிப்புகள்