Food To Avoid With Bitter Gourd in Tamil
பாகற்காய் கசப்பு தன்மை உடைய ஒரு காய் என்பது அனைவருக்கும் தெரியும். இவற்றின் கசப்பு தன்மையால் பலபேர் இதனை சாப்பிடமாட்டார்கள். ஆனால் இது உடலுக்கு பல நன்மைகளை அளிக்கிறது என்று அவர்களுக்கு தெரிவதில்லை. அப்படி நம் உடலுக்கு நன்மைகளை அளிக்கக்கூடிய பாகற்காயை சாப்பிடும் போதோ அல்லது சாப்பிட்ட பிறகு சில பொருட்களை மறந்தும் கூட சாப்பிட கூடாது என்று கூறுகிறார்கள். அப்படி சாப்பிட்டால் உடலில் பல்வேறு பிரச்சனைகள் ஏற்படும் என்றும் கூறுகிறார்கள். ஓகே வாருங்கள் பாகற்காயுடன் சேர்த்து சாப்பிடக்கூடாத பொருட்கள் என்னவென்று இப்பதிவில் படித்து தெரிந்து கொள்ளலாம்.
டீயுடன் இந்த பொருட்களை எல்லாம் சேர்த்து சாப்பிடக் கூடாதாம்..! உங்களுக்கு தெரியுமா..?
பாகற்காய் சாப்பிட்ட பிறகு சாப்பிட கூடாத பொருட்கள்:
பால்:
பாகற்காய் சாப்பிட்ட பிறகு, பாலை மறந்தும் கூட குடிக்கக் கூடாது. அப்படி பாகற்காய் சாப்பிட்ட பிறகு, பால் குடித்தால் உடலில் பல்வேறு பிரச்சனைகள் உண்டாகும். அதாவது மலசிக்கல், வயிற்று வலி மற்றும் வயிற்று எரிச்சல் போன்றவை ஏற்படும். அதுமட்டுமில்லாமல் உங்களுக்கு ஏற்கனவே வயிறு சம்பந்தப்பட்ட பிரச்சனைகள் இருந்தால் அது மேலும் அதிகரிக்கவும் வாய்ப்பு உள்ளது.
முள்ளங்கி:
பாகற்காய் சாப்பிட்ட பிறகு, முள்ளங்கி சாப்பிடக்கூடாது. ஏனென்றால், முள்ளங்கியும் பாகற்காயும் எதிர் எதிர் தன்மை கொண்டவை. எனவே இதனை ஒரே நேரத்தில் சாப்பிடும் போதும் வாந்தி, வயிற்று உபாதைகள் மற்றும் சீறுநீரக பிரச்சனை ஏற்படும். அதுமட்டுமில்லாமல் தொண்டையில் அமிலத்தன்மை மற்றும் சளி பாதிப்பு ஏற்படலாம்.
முள்ளங்கி சாப்பிடும் போது இந்த உணவுகளை மட்டும் சேர்த்து சாப்பிடவேக்கூடாது…!
தயிர்:
பாகற்காய் சாப்பிட்ட பிறகு, தயிர் சேர்த்து கொள்ள கூடாது. இது நம் உடலில் பல பிரச்சனைகளை ஏற்படுத்தும். அனைவரும், சாப்பிடும்போது கடைசியாக தயிர் சேர்த்து சாப்பிடும் பழக்கம் இருக்கும். அப்படி நாம் உண்ணும் உணவில் பாகற்காய் இருந்தால் தயிர் சேர்த்துக் கொள்வதை தவிர்த்து கொள்வது நல்லது.
வெண்டைக்காய்:
பாகற்காயுடன் வெண்டைக்காய் சேர்த்து சாப்பிட கூடாது. இதனை ஒன்றாக சாப்பிட்டால் வயிற்று கோளாறுகள் ஏற்படும்.
பாகற்காய் குழம்பு கசப்பில்லாமல் இப்படி செய்யுங்க..! யாரும் வேண்டான்னு சொல்ல மாட்டாங்க…!
மாம்பழம்:
வெயில் காலத்தில் மாம்பழத்தை பலரும் விரும்பி சாப்பிடுவர். ஆனால் இதை பாகற்காய் சாப்பிட்ட பிறகு சாப்பிட்டால் வயிற்றில் எரிச்சல் உணர்வு, குமட்டல் மற்றும் செரிமான பிரச்சனை போன்றவை ஏற்படும்.
இதுபோன்ற உடல் நலம் மற்றும் ஆரோக்கியம் பற்றிய தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்👉 | Health tips tamil |