வீசிங் பாட்டி வைத்தியம் | Wheezing Treatment at Home in Tamil | மூச்சுத்திணறல் குணமாக
Wheezing Problem Treatment in Tamil: வீசிங் என்பது நுரையீரல் சம்பந்தமான பிரச்சனை. சிறிய குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை வீசிங் பிரச்சனையினால் அவதிப்படுவார்கள். சிலருக்கு இந்த வீசிங் பிரச்சனையானது தினமும் இருந்துக்கொண்டே இருக்கும். ஒரு சிலருக்கு வாரத்தில் ஒருமுறை வரும். சிலர் வீசிங் நோய்க்கு மருத்துவரின் ஆலோசனை படி இன்ஹெலர் (Inhaler) பயன்படுத்தி வருவார்கள். வீசிங் நோய்யானது நள்ளிரவில் உறக்கத்தில் இருக்கும் போது கூட வரலாம். அதற்கு நாம் தான் தகுந்த சிகிச்சையை மேற்கொள்ள வேண்டும். வீசிங் பிரச்சனையிலிருந்து முற்றிலும் தப்பிக்க சில இயற்கை வைத்திய முறைகளை இந்த பதிவின் மூலம் உங்களுக்கு தெரியப்படுத்துக்கிறோம். அந்த குறிப்புகளை தவறாமல் படித்து வீசிங் பிரச்சனை இருப்பவர்கள் பயன்படுத்தி உடலை பாதுகாப்பாக வைத்திருங்கள்.
மூச்சு பிடிப்பு நீங்க பாட்டி வைத்தியம் |
வீசிங் குணமாக பூண்டு:
vising problem tamil: வீசிங் மட்டுமல்லாமல் ஆஸ்துமா போன்ற பல நோய்களுக்கு சிகிச்சை அளிக்க பயன்படுகிறது பூண்டு. தொற்று பாதிப்புகள் ஏற்படும் போது மூச்சு குழாய்களில் சளி உற்பத்தி மற்றும் சளி படிவதற்கு காரணமாக உள்ளது. இதுதான் வீசிங் பிரச்சனைக்கு மூலக்காரணம் ஆகும். வீசிங் பிரச்சனைக்கு பூண்டு சாப்பிட்டு வரலாம். அதோடு ஆஸ்துமா நோய் இருப்பவர்கள் ஒரு நாளைக்கு 3 முதல் 4 பூண்டுகளை சாப்பிட்டு வர கடுமையான ஆஸ்துமாவை குறைத்துவிடலாம்.
வீசிங் நோய்க்கு ஆளி விதை:
வீசிங் பிரச்சனைக்கு என்ன தீர்வு: ஆளி விதையானது அலர்ஜி போன்றவைகளை எதிர்த்து போராடும் ஆற்றல் வாய்ந்தது. வீசிங் பிரச்சினையினால் அவதிப்படுபவர்கள் ஒரு தேக்கரண்டி அளவு ஆளி விதைகளை தினமும் மென்று சாப்பிட்டு வர வீசிங் குறையும். தினமும் ஒரு தேக்கரண்டி அளவு ஆளி விதையின் எண்ணெயினை குடித்து வந்தால் வீசிங் தொந்தரவிலிருந்து விடுபடலாம்.
ஆஸ்துமா உணவு வகைகள் |
வீசிங் நோய்க்கு மஞ்சள்:
wheezing treatment in tamil: மஞ்சள் ஒரு கிருமி நாசினியாக விளங்குகிறது. மஞ்சள் வீசிங் பிரச்சனைக்கு நல்ல நிவாரணமாக உள்ளது. வீசிங் பிரச்சனை குணமாக வெதுவெதுப்பான நீர் ஒரு கிளாஸ் அளவில் மஞ்சள் தூள் 1/2 ஸ்பூன் கலந்து தினமும் காலையில் எழுந்ததும் பருக வேண்டும். இதனை தினமும் குடித்து வர வீசிங் பிரச்சனை குறைந்துவிடும்.
வீசிங் பிரச்சனைக்கு கடுகு எண்ணெய் மற்றும் கற்பூரம்:
மூக்கில் அதிகமாக சளி சேருவதை தடுத்து நிறுத்தும் ஆற்றல் உடையது கடுகு எண்ணெய். ஆஸ்துமா நோயாளிகளுக்கு இது நல்ல நிவாரணமாக விளங்குகிறது. ஒரு சிறிய பாத்திரத்தில் போதுமான அளவிற்கு கடுகு எண்ணெய்யை எடுத்து ஹீட் செய்து ஊற்றி கொள்ளவும். இதனை நுகர்வதால் வீசிங் பிரச்சனைக்கு நல்ல நிவாரணம் கிடைக்கும்.
வீசிங் குணமாக எலுமிச்சை சாறு:
வீசிங் குணமாக சித்த மருத்துவம்: எலுமிச்சையை தினமும் எடுத்துக்கொண்டால் சளி பிரச்சனை வந்துவிடும் என்று பலரும் நினைத்து கொண்டிருக்கிறார்கள். அது தவறான விஷயம், எலுமிச்சை சாறினை தினமும் எடுத்துக்கொண்டால் சளி பிரச்சனை கட்டுக்குள் இருக்கும். வீசிங் பிரச்சனைக்கு எலுமிச்சை சாறு நல்ல மருந்தாக இருக்கிறது. வீசிங் இருப்பவர்கள் இனிப்பு சேர்க்காமல் ஒரு கிளாஸ் அளவு தினமும் எலுமிச்சை சாறினை குடித்து வர சுவாச கோளாறு பிரச்சனை சரியாக வீசிங் பிரச்சனையும் தீர்வுக்கு வரும்.
மூச்சு விடும் போது வலிக்குதா? அதுக்கு என்ன காரணம்? |
ஆர்கானிக் தேன்:
அலர்ஜி சம்பந்தமான நோய், நோய் கிருமிகளை எதிர்த்து போராடும் சக்தி உடையது தேன். இருமல் பிரச்சனையும் தீர்க்கும் ஆற்றல் உடையது. ஆர்கானிக் தேன் வாசனையை நுகர்வதன் மூலம் அதிகமாக இருக்கும் வீசிங் பிரச்சனையை குறைத்து விடும்.
ஜின்கோ பிலோபா மூலிகை:
ஜின்கோ பிலோபா எனும் மூலிகையானது வீசிங் மற்றும் மூச்சுத்திணறல் பிரச்சனைக்கு பயன்படுத்தப்பட்டு வருகிறது. வீசிங் அதிகமாக இருப்பவர்கள் இந்த மூலிகையை நீரில் நன்றாக கொதிக்க வைத்து டீயாக குடிக்கலாம். இல்லையென்றால் மூலிகை நீரில் கொதிக்கும் போது அந்த ஆவியில் முகத்தினையும் காட்டலாம். வீசிங் பிரச்சனைக்கு நல்ல நிவாரணம் கிடைக்கும். பயன்படுத்தி பாருங்கள்..!
இதுபோன்ற உடல் நலம் மற்றும் ஆரோக்கியம் பற்றிய தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> | Health Tips in Tamil |