சுகப்பிரசவத்தில் குழந்தை பிறக்க என்ன சாப்பிடவேண்டும்..!

Which Food Eat for Normal Delivery in Tamil

சுகப்பிரசவம் ஆக என்ன சாப்பிட வேண்டும் | Which Food Eat for Normal Delivery in Tamil

அனைத்து நண்பர்களுக்கும் ஹாய். பெண்ணாக பிறந்த அனைவருமே பெருமை அடையும் நிலை தான் தாய்மை. ஒரு பெண்ணின் முதல் மாதத்திலிருந்து 10 மாதம் வரையிலும் ஒவ்வொன்றாக பார்த்து பார்த்து தான் செய்வார்கள். அப்படி இருந்தும் சில பெண்களுக்கு நார்மல் டெலிவரி இல்லாமல் சிசேரின் செய்யும் நிலை ஏற்படும். அதற்கு ஒரு விதத்தில் உணவும் ஒரு காரணமாக உள்ளது.  ஆகவே நார்மர் டெலிவரி ஆவதற்கு கீழ் கொடுக்கப்பட்டுள்ள உணவு முறைகளை பின்பற்றுங்கள்..!

What Eat For Normal Delivery in Tamil:

காய்கறிகள், கீரைகள்:

 what to eat in 9th month of pregnancy for normal delivery in tamil

பாலக்கீரை, மலபார் கீரை, வெந்தய கீரை, முருங்கை கீரை, புதினா, கறிவேப்பிலை, கொத்தமல்லி இலை, செலரி, முட்டைகோஸ், காலிஃப்ளவர் என பல்வேறு வகையான கீரைகளை சாப்பிடவேண்டும்.

இது அனைத்திலும் சத்துக்கள் அதிகமாக இருந்தாலும், வைட்டமின் கே சத்துக்கள் முக்கிய பங்கு வகிக்கிறது. அதேபோல் பெரும்பாலான வைட்டமின் சத்துக்கள் இதில் அடைந்துள்ளது. இதில் உள்ள கீரை வகைகளில் ஏதாவது ஒரு கீரைகளை தினமும் எடுத்துக் கொள்ளுங்கள்.

தயிர்:

 what to eat in 9th month of pregnancy for normal delivery in tamil

தினமும் தயிர் சாப்பிடுவதால் கருவில் இருக்கும் குழந்தைக்கு உறுதியான  எலும்புகள் உருவாகும். இதில் கால்சியம் சத்துக்கள் அதிகம் உள்ளது. பாலை விட தயிரில் தான் கால்சியம் நிறைந்துள்ளது. பால் இல்லாமல் சாப்பிட்ட தாய்மார்களுக்கு தயிர் ஒரு சிறந்த ஊட்டசத்துக்கள் ஆகும். தயிர் குடலில் ஒருமைப்பாட்டை பராமரிக்கும் உணவாகும்.

பீட்ரூட்:

what eat for normal delivery

இந்த பீட்ரூட் ரோமானிய காலத்திலிருந்து பிரபலமான காய்கறி ஆகும். பீட்ரூட் காய்ச்சல், மலசிக்கல், காயங்கள் மற்றும் தோல் பிரச்சனைகளுக்கு மருந்தாக பயன்படுகிறது. இதில் பொட்டாசியம், மெக்னீசியம், இரும்பு போன்ற அத்தியாவசிய தாதுக்கள் மற்றும் வைட்டமின் ஏ, ஃபோலிக் அமிலம், வைட்டமின் பி6, ஆன்டி ஆக்ஸிடன்ட்கள் போன்ற சத்துக்கள் பீட்ரூட்டில் கிடைக்கிறது. ஆகவே உடலுக்கு தேவையான சத்துக்களில் பாதி இதிலிருந்து கிடைக்கும் பட்சத்தில் பீட்ரூட்டை தினமும் எடுத்துக் கொள்வது நல்லது.

உலர் பழங்கள்:

what eat for normal delivery

இந்த உலர் பழங்கள் மற்றும் விதைகளில் ஏராளமான சத்துக்கள் உள்ளது. இதில் முக்கியமாக வைட்டமின் மற்றும் தாதுக்கள், நார்ச்சத்து அதிகம் நிறைந்துள்ளது.

இதனை சாப்பிடுவதன் மூலம் இரத்த சோகையை தடுத்து நல்ல இரத்தம் ஊறுவதற்கு உதவி செய்கிறது.

மெக்னீசியம் சத்துக்கள் குழந்தையின் எலும்புகள் மற்றும் நரம்புகள் உருவாகி சாதாரணமாக இயங்க உதவி செய்கிறது.

பொட்டாசியம் தசை கட்டுப்பாட்டுடன் இருக்க உதவி செய்கிறது. வைட்டமின் ஏ சத்துக்கள் குழந்தையின் பற்கள் சரியாக வளர்வதற்கு சத்துக்களை கொடுக்கும்.

கர்ப்பிணி பெண்கள் சாப்பிடக்கூடாத பழங்கள்..!

பழங்கள்:

what eat for normal delivery

ஆப்பிள் – நார்சத்து அதிகம் இருப்பதால் கால் கைகள் வீக்கத்திற்கும், மலசிக்கல் இல்லாமலும் இருக்க உதவி செய்கிறது.

வாழைப்பழம் – வாழைப்பழம் சாப்பிடுவதால் இரத்த சம்பந்தப்பட்ட பிரச்சனையிலிருந்து காத்துக்கொள்ள உதவி செய்கிறது.

முலாம்பழம் – முலாம்பழம் சாப்பிடுவதால் உங்களுக்கும் குழந்தைக்கும் தீங்கு அளிக்கும் நச்சுகளிலிருந்து பாதுகாக்கும். ஆக்ஸிஜனேற்றங்கள் அதிகம் அளிக்கிறது.

சிட்ரஸ் பழங்கள் – தாய் மற்றும் குழந்தையின் தோல், கண் ஆரோக்கியத்திற்கு பெரிதும் உதவி செய்கிறது.

இதையும் தெரிந்துகொள்ளுங்கள் 👇👇👉 5 மாத கர்ப்பிணிகள் சாப்பிட கூடாத உணவுகள்

கர்ப்பிணிகள் எந்த உணவு சாப்பிட்டால் ஆண் குழந்தை பிறக்கும் தெரியுமா?   

இதுபோன்ற உடல் நலம் மற்றும் ஆரோக்கியம் பற்றிய தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> ஆரோக்கியமும் நல்வாழ்வும்