6 மாத குழந்தைகளுக்கான உணவு அட்டவணை
உங்கள் வீட்டில் 6 மாத குழந்தை இருந்தால் இது உங்களுக்கான பதிவு தான் நண்பர்களே,! 6 மாத குழந்தைகளுக்கு 180 நாட்கள் முடிந்த பிறகு தான் உணவு கொடுக்க வேண்டும். குழந்தைகள் ஐந்து மாதம் முழுவதும் தாய்பால் குடிப்பதால் அவர்களுக்கு முதல் தடவை உணவு கொடுக்கும் பொழுது உணவில் உப்பு, இனிப்பு சேர்ப்பதை முழுமையாக தவிர்க்க வேண்டும். ஒரு குழந்தை ஆறு மாதம் ஆன பிறகு தாய்ப்பாலுடன் சேர்த்து உணவு உட்கொள்வதை தான் (complementary feeding) என்று சொல்வார்கள். உணவுகளில் முதலில் நாம் பாரம்பரிய உணவான அரிசி தான் ரொம்ப முக்கியம். அரிசி கொடுப்பதால் எந்த ஒரு பிரச்சனையும் வராது. குழந்தைகளுக்கு அரிசி கொடுப்பதால் மாவு சத்துக்கள் அரிசி மூலம் கிடைக்கும். குழந்தைகளுக்கு எந்த ஒரு உணவு கொடுத்தாலும் படுக்க வைத்து கொடுப்பதை தவிர்க்க வேண்டும். உட்கார வைத்து தான் கொடுக்க வேண்டும்.
குழந்தைகள் பிறந்த உடன் வளருமா, வளராத என்ற எதிர்பார்ப்புகள் அதிகம் இருக்கும். எனவே ஆறு மாத குழந்தைகளுக்கு நீர்ச்சத்துள்ள காய்கறிகளை வேக வைத்து கொடுப்பதால் குழந்தையின் வளர்ச்சி அதிகரிக்கும். ஆரம்ப காலகட்டத்தில் குழந்தைகள் உணவு உட்கொள்வதை மறுத்தாலும் போக போக உட்கொள்வார்கள். உணவுகளை கொடுக்க ஆரம்பித்த பிறகு தான் உணவுகளின் பக்குவத்தை குழந்தைகள் உணர்வார்கள். குழந்தைகளுக்கு தாது பொருட்கள் உள்ள உணவுகளை கொடுப்பதால் குழந்தையின் மூளை வளர்ச்சி அடைகிறது. முக்கியமான ஒன்று திணை உணவுகளை ஏழாவது மாதத்தில் தான் கொடுக்க வேண்டும். உணவு கொடுக்கும் போழுது குழந்தைக்கு தண்ணீரை சுடவைத்து ஆறின பிறகு கொடுக்க வேண்டும்.
பால் கொடுக்கும் பெண்கள் சாப்பிட கூடாதவை |
6 Month Baby Food Chart in Tamil:
மதியம் 12 P.M | மாலை 4 P.M |
ஆப்பிள் கூழ் | அரிசி கஞ்சி |
கேரட் கூழ் | ராகி கஞ்சி |
பூசணி கூழ் | சிவப்பு அவல் கஞ்சி |
வாழைப்பழம் கூழ் | சம்பா கோதுமை கஞ்சி |
பப்பாளி கூழ் | உருளைக்கிழங்கு கூழ் |
சர்க்கரைவள்ளி கிழங்கு கூழ் | சப்போட்டா கூழ் |
மற்ற நேரங்களில் தாய்ப்பால் மற்றும் கொடுக்கவும்.
குறிப்பு : எந்த ஒரு உணவு பொருளை கொடுக்கும் பொழுதும் மருத்துவரின் ஆலோசனைக்கு பிறகு தான் கொடுக்கவேண்டும். |
குழந்தை முதல் திட உணவு:
தாய்ப்பால் இல்லாதவர்கள் பசும்பால் கொடுக்கலாம். அதற்கும் சில வழிமுறைகள் இருக்கிறது. பசும்பாலில் கொழுப்பு சத்துக்கள் அதிகம் இருப்பதால் குழந்தைகளுக்கு கொடுப்பதால் செரிமான கோளாறுகள் ஏற்படும்.
அதனால் பசும் பால் கொடுப்பதற்கு முன்பு பசும்பால் 1 டம்லர் எடுத்தால் 2 டம்லர் அளவு தண்ணீர் ஊற்றி காய்த்து வடிக்கட்டி கொடுக்க வேண்டும். சர்க்கரை சேர்க்காமல் கொடுப்பது நல்லது ஏனென்றால் இனிப்புக்கு அடிமையாகாமல் இருக்கும்.
1 வயது ஆன பிறகு நாட்டுச்சர்க்கரை சேர்த்து கொள்ளலாம் . குழந்தைகள் 20 மில்லிக்கு மேல் பால் குடிப்பது இல்லை.
அப்படியே குடித்தாலும் சிறுநீர் கழித்து விடும். அதன் பிறகு பசி எடுக்கும். சிறுநீர் போனவுடன் 5 நிமிடம் கழித்து பால் இல்லை என்றால் கஞ்சி கொடுக்க வேண்டும்.
இதுபோன்று குழந்தை நலன் பற்றிய மேலும் தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> | Baby health tips in tamil |