Baby Dysentery Home Remedies in Tamil
குழந்தைகளை பாதுகாப்பாக வைத்து கொள்வது அவசியமான ஒன்றாகஇருக்கிறது. ஏனென்றால் பெரியவர்களாக இருந்தால் அவர்களுக்கு என்ன செய்கிறது என்பதை கூறுவார்கள். ஆனால் குழந்தைகளுக்கு என்ன செய்கிறது என்பதை யாராலும் அறிந்து கொள்ள முடியாது. குழ்நதைகளின் உடம்பில் ஏதவாது செய்கிறது என்றால் அழுவுவார்கள். அழுவுவதை வைத்து அவர்கள் எதற்கு அழுகிறார்கள் என்பதை நம்மால் அறிந்து கொள்ள முடியாது. அது போல தொடர்ந்து வாந்தி, வயிற்றுப்போக்கு போகிறது என்றால் உடனே மருத்துவமனைக்கு தான் அழைத்து செல்வோம். அவர்கள் எழுதி கொடுக்கும் மருந்துகளானது தொடர்ந்து கொடுத்தால் தான் அதற்கான ரிசல்ட்டையே பெறமுடியும். அதனால் நீங்கள் இயற்கை வைத்தியத்தை மேற்கொண்டால் உடனடியாக ரிசல்ட்டை பெற முடியும். அதனால் தான் இந்த பதிவில் குழந்தை வயிற்றுப்போக்கு உடனடியாக நிற்பதற்கு என்ன செய்ய வேண்டும் என்று அறிந்து கொள்வோம் வாங்க..
தேங்காய் தண்ணீர்:
தேங்காய் நீரில் அதிகளவு நீர்ச்சத்து மற்றும் தாதுக்கள் நிறைந்துள்ளது. இந்த சத்தானது குழந்தையை நீரேற்றத்துடன் வைத்திருக்கஉதவுகிறது. இதனை குழந்தைக்கும் தருவதால் மலத்தை கெட்டியாக மாற்றுவதற்கு உதவுகிறது. தேங்காய் நீரில் இருக்கும் நார்ச்சத்தானது குழந்தையின் வயிற்றுப்போக்கை சரி செய்வதற்கு உதவுகிறது. அதற்காக வயிற்றுப்போக்கு இருக்கின்ற நேரத்தில் தான் கொடுக்க வேண்டும் என்று அவசியமில்லை. வயிற்றுப்போக்கு இல்லாத நேரத்திலும் தேங்காய் நீரை கொடுக்கலாம்.
தயிர்:
தயிரானது வயிற்றுக்கு குளிர்ச்சியை தருகிறது. இதில் உள்ள நல்ல பாக்ட்ரியாக்களானது வயிற்றுப்போக்கு பிரச்சனையிலிருந்து விடுபடுவதற்கு உதவுகிறது. ஒரு பவுலில் தயிரை எடுத்து கொள்ள வேண்டும். பிறகு 1 தேக்கரண்டி சீரகம் எடுத்து பொடியாக அரைத்து கொள்ள வேண்டும். இதனை தயிரில் சேர்த்து கலந்து கொள்ள வேண்டும். இதனை குழந்தைக்கு வயிற்றுபோக்கு போகும் போது இதனை கொடுக்க வேண்டும். இதனை குடிப்பதால் வயிற்றுப்போக்கை நிறுத்துவதற்கு உதவுகிறது.
குழந்தை பிறந்தது முதல் 1 வயது வரை குழந்தையின் வளர்ச்சி
எலுமிச்சை சாறு:
எலுமிச்சை சாறில் பாக்ட்ரியா எதிர்ப்பு மற்றும் அலர்ஜி எதிர்ப்பு பண்புகளை கொண்டுள்ளது. குழந்தைக்கு வயிற்றுப்போக்கு ஏற்படும் நேரத்தில் எலுமிச்சை சாற்றை ஒரு நாளைக்கு 5 முறை கொடுக்க வேண்டும்.
பருப்பு:
சிவப்பு பருப்பு ஆனது செரிமான மண்டலத்திற்கு சிறந்ததாக இருக்கின்றது. குழந்தையின் வயிற்றுப்போக்கு பிரச்சனையை குணப்படுத்துவதற்கு உதவுகிறது. சிவப்பு பருப்பை தண்ணீரில் வேக வைக்க வேண்டும். நன்றாக கொதித்து பருப்பில் உள்ள சத்தானது தண்ணீரில் இறங்கியிருக்கும். இந்த தண்ணீரை வயிற்றுப்போக்கு ஏற்படும் குழந்தைகளுக்கு வேக வைத்த பருப்பு தண்ணீரை வடிக்கட்டி கொடுக்க வேண்டும். இப்படி கொடுப்பதால் வயிற்றுப்போக்கு சரியாகும்.
இதுபோன்று குழந்தை நலன் பற்றிய மேலும் தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> | குழந்தை நலன் |
எங்கள் Telegram Channel-ஐ பின்தொடர 👉👉 |
Link |