தாய்ப்பால் சுரக்க பாட்டி வைத்தியம் (Home Remedies to increase breast milk)
தாய்ப்பால் சுரப்பை அதிகரிக்க (Increase Breastmilk Naturally)
தாய்ப்பால் அதிகரிக்க (thaipal surakka) என்ன சாப்பிடலாம்/ தாய்பால் அதிகம் சுரக்க கூடிய உணவு வகைகள்: பிறந்த குழந்தைகள் தாய்ப்பால் அருந்துவது அவர்கள் ஆரோக்கியமாக வளரவும், போதிய சத்துக்களை குழந்தைகளுக்கு தரும் என்பது அசைக்க முடியாத உண்மை. அதனாலே பிறந்த குழந்தைகளுக்குத் தாய்ப்பால் மட்டுமே ஏற்ற மற்றும் சிறந்த உணவாக உள்ளது. சுகப் பிரசவமோ அல்லது அறுவைசிகிச்சை பிரசவமோ, பிறந்த குழந்தைக்குத் தாய்ப்பால் கொடுப்பது தாய்மார்களின் மிக முக்கியமான கடமையாகும். எனவே தான் பிறந்த முதல் 6 மாதங்களுக்குத் தாய்ப்பாலைத் தவிர வேறு எந்த உணவையும் தரக் கூடாது என்று மருத்துவர்களும் பெரியவர்களும் வலியுறுத்துவதுண்டு.
இவ்வாறு இருக்கும் போது, அனைத்து தாய்மார்களும் தங்கள் குழந்தைகளுக்குத் தாய்ப்பால் தர முடியுமா என்று கேட்டால் அது சற்று சிந்திக்க வேண்டிய கேள்வியாகவே இருக்கும். இருப்பினும் அத்தகைய பெண்கள் சற்று சிரமம் பார்க்காமல் தாய்ப்பால் சுரக்க பாட்டி வைத்தியம் சிலவற்றை மேற்கொள்ளும் போது அவர்களாலும் நிச்சயம் தாய்ப்பால் கொடுக்க முடியும்.
கருப்பை நீர்க்கட்டி பிரச்சனை காரணமாக குழந்தை பாக்கியம் தள்ளிப்போகுதா? வெறும் பட்டை… |
சரி வாங்க இந்த பகுதியில் தாய்ப்பால் சுரக்க (thaipal surakka) பாட்டி வைத்தியம் சிலவற்றை இப்போது நாம் தெரிந்து கொள்வோம் வாங்க..!
தாய்ப்பால் சுரக்க பாட்டி வைத்தியம் | Thaipal Surakka Tips | தாய்பால் அதிகம் சுரக்க கூடிய உணவு வகைகள்
thaipal surakka: தாய்மை அடைந்த பெண்கள் சில எளிய வீட்டு வைத்தியத்தால் தாய்ப்பால் சுரப்பை அதிகரித்து தங்கள் குழந்தைக்குப் போதிய உணவைத் தர முடியும் என்றால் அதை விடச் சிறந்த விஷயம் வேறு ஒன்றும் இருக்க முடியாது. தாய்ப்பால் சுரக்க பாட்டி வைத்தியம்.
தாய்ப்பால் சுரக்க என்ன சாப்பிட வேண்டும் | Thaipal Surakka Food in Tamil
1. தாய்ப்பால் சுரப்பை அதிகரிக்க – பெருஞ்சீரகம்:
தாய்ப்பால் அதிகம் சுரக்க: பெருஞ்சீரகம் தாய்ப்பாலை அதிகரிக்கப் பெரிதும் உதவுகிறது. இது ஈஸ்ட்ரோஜன் அளவை சீர்படுத்த உதவுகிறது.
பெருஞ்சீரகம் கொண்டு நீங்கள் தேநீர் கூடத் தயாரித்துக் குடிக்கலாம். தண்ணீரில் பெருஞ்சீரகத்தைப் போட்டு நன்கு கொதிக்க விட்ட பின் அதில் தேனை விட்டுப் பருகி வந்தால் தாய்ப்பால் சுரப்பு அதிகரிக்கும்.
2. தாய்ப்பால் சுரப்பை அதிகரிக்க – வெந்தயம்:
வெந்தயம் தாய்ப்பாலின் அளவை அதிகரிக்க உதவும். இது உடல் சூட்டைத் தனிப்பதோடு ஈஸ்ட்ரோஜன் அளவையும் அதிகப் படுத்தும்.
ஒரு தேக்கரண்டி வெந்தயத்தை எடுத்து நீரில் நன்கு கொதிக்க விட்டு, அதில் ஒரு தேக்கரண்டி தேன் சேர்த்துப் பருகி வந்தால் ஓரிரு நாட்களில் நீங்கள் தாய்ப்பாலின் அளவு அதிகரிப்பதை உணரலாம்.
3. தாய்ப்பால் சுரப்பை அதிகரிக்க – இலவங்கப்பட்டை:
தாய்ப்பால் அதிகம் சுரக்க: போதிய தாய்ப்பால் இல்லாமல் இருக்கும் பெண்கள் இதை அதிகம் எடுத்துக் கொள்வதால் தாய்ப்பால் சுரப்பு அதிகரிக்கும்.
சிறிது இலவங்கப்பட்டையை எடுத்துக் கொண்டு சுடு தண்ணீரில் போட்டு தேன் கலந்து பருகி வர, தாய்ப்பால் சுரப்பு அதிகரிக்கும்.
4. தாய்ப்பால் சுரப்பை அதிகரிக்க – கருப்பட்டி:
பனைமரங்களிலிருந்து கிடைக்கப் பெறும் கருப்பட்டிகள் அற்புத மருத்துவ குணங்கள் கொண்டவை. குறிப்பாகச் சுக்கு மற்றும் மிளகு கலந்த கருப்பட்டியை தினம் சிறிதளவு உடைத்து உண்பதால் தாய்ப்பால் நன்றாகச் சுரக்கத் தொடங்கும்.
கூடுதலாகக் கருப்பட்டியில் இரும்புச் சத்து நிறைந்துள்ளதால் இரத்த சோகை வியாதி தாய்மார்களைத் திரும்பிக் கூடப் பார்க்காது.
5. தாய்ப்பால் சுரப்பை அதிகரிக்க – சீரகம்:
தாய்ப்பால் அதிகம் சுரக்க: சீரகத்தில் பல மருத்துவ குணங்கள் உள்ளன. இதை நீங்கள் தினமும் பருகி வரத் தாய்ப்பாலின் அளவு நிச்சயம் அதிகரிக்கும்.
மேலும் சீரகத்தில் இரும்புச் சத்து அதிகம் உள்ளது. அதனால் இரத்த சோகை போன்ற நோய்கள் வராமல் தடுக்க உதவும்.
சீரகத்தைச் சுடு நீரில் போட்டுத் தேவைப்பட்டால் தேன் கலந்து தினமும் இரவில் பருகி வரத் தாய்ப்பால் அதிகரிக்கும்
6. தாய்ப்பால் சுரப்பை அதிகரிக்க – பூண்டு:
பூண்டு உணவில் நாம் அதிகம் சேர்த்ததுக் கொள்ளும் மருத்துவ குணமுள்ள பொருளாகும். இது தாய்ப்பாலின் அளவை அதிகரிக்கப் பெரிதும் உதவுகிறது.
தினமும் நீங்கள் செய்யும் சமையலில் பூண்டைச் சற்று அதிக அளவில் பயன்படுத்தி வந்தாலே தாய்ப்பால் சுரக்கும் அளவு அதிகரிக்கும்.
குழந்தைக்கு சர்க்கரை நோய் உள்ளதா என்பதை எப்படி தெரிந்து கொள்வது??? |
7. தாய்ப்பால் சுரப்பை அதிகரிக்க – பப்பாளி:
தாய்ப்பால் அதிகம் சுரக்க: பப்பாளிப் பழங்கள் தாய்ப்பால் சுரப்பிற்குப் பெரிதும் உதவுகின்றன. இதைப் பெண்கள் தினம் மிதமான அளவில் உட்கொள்வதால் பால் நன்றாகச் சுரக்கத் தொடங்கும்.
8. தாய்ப்பால் சுரப்பை அதிகரிக்க – முருங்கை:
முருங்கைக் கீரை, காய் மற்றும் பூ என்று அனைத்திலுமே இரும்புச் சத்து நிறைந்துள்ளன.
தினம் இதில் ஏதாவது ஒன்றைப் பொரியலாகச் செய்து தாய்மார்கள் உட்கொள்வதால் தாய்ப்பால் சுரப்பு சிறப்பான வகையில் நிச்சயம் அதிகரிக்கும்.
9. தாய்ப்பால் சுரப்பை அதிகரிக்க – வெற்றிலை:
தாய்ப்பால் அதிகம் சுரக்க: வெற்றிலையில் பல மகத்துவங்கள் அடங்கி உள்ளன. பிள்ளைப் பேறு பெண்கள் பலர் போதிய தாய்ப்பால் சுரப்பின்றி தவித்து வருகின்றனர்.
அவர்கள் அனைவருக்கும் இந்த வெற்றிலை ஒரு வரபிராசாதம் என்றால் மிகையில்லை. வெற்றிலையை நெருப்பில் காட்டி, பின் மார்பில் வைத்துக் கட்ட தாய்ப்பால் நன்றாகச் சுரக்கத் தொடங்கும்.
இன்றளவும் இந்த வீட்டு வைத்தியம் கிரமங்களில் பெரிய அளவில் பின் பற்றப்பட்டு வருகிறது என்பது உண்மை.
10. தாய்ப்பால் சுரப்பை அதிகரிக்க – பாதாம் பருப்பு :
இரவில் நான்கு ஐந்து பாதாம் பருப்புகளைத் தண்ணீரில் ஊற வைத்து,அடுத்த நாள் பருப்புகளை உட்கொள்ள நல்ல பலன் கிட்டும்.
இதைத் தொடர்ச்சியாக எடுத்துக்கொள்ளத் தாய்ப்பால் சுரப்பு அதிகரிப்பதோடு பெண்களின் உடல் வலிமையும் பெறும்.
11. தாய்ப்பால் சுரப்பை அதிகரிக்க – கீரை, காய், கனி :
தாய்ப்பால் அதிகம் சுரக்க: தாய்மார்கள் தினம் தங்கள் உணவில் கீரைகளைச் சேர்த்துக் கொள்வதும் அவசியம்.கீரைகளில் பல்வேறு சத்துக்கள் கொட்டிக் கிடக்கின்றன. இதனால் தாய்ப்பால் சுரப்பதன் அளவு மேம்படும்.
மேலும் கேரட், பீன்ஸ், உருளைக் கிழங்கு போன்ற காய்கறிகளையும், மாதுளை, சாத்துக்குடி, ஆப்பிள் உள்ளிட்ட பல்வேறு பழ வகைகளையும் தினம் தொடர்ச்சியாக உட்கொள்ள வேண்டும்.
12. தாய்ப்பால் சுரப்பை அதிகரிக்க – முட்டை, இறைச்சி:
Thaipal Surakka: சந்தையில் கிடைக்கும் தரமான நாட்டுக்கோழி முட்டைகளை வாங்கி, வேக வைத்து அடிக்கடி உணவில் சேர்த்துக் கொள்ளலாம்.
ஆடு, கோழி, மீன் முதலிய இறைச்சிகளையும் தேவையான அளவு எடுத்துக் கொள்வது நல்லது. இது குழந்தைப் பேறு பெற்ற பெண்களின் ஆரோக்கியத்தை மேம்படுத்தி தாய்ப்பால் சுரப்பு பிரச்சனையை நிவர்த்தி செய்யும்.
13. பால் சுரக்க – கொழுப்புச் சத்து நிறைந்த உணவுகள் :
தாய்ப்பால் அதிகம் சுரக்க: பசும் பால், நெய், வெண்ணெய், தயிர் முதலியவற்றை உணவில் போதிய அளவு சேர்த்துக் கொள்வது மிகவும் நல்லது.
இது குழந்தைப் பேறு பெற்ற அம்மாக்களின் தாய்ப்பால் சுரப்பு குறையாமல் இருப்பதற்கான போதிய சாத்தியக் கூறுகளை ஏற்படுத்தும்.
குழந்தை பிறந்த பிறகு தாய்மார்கள் சாப்பிட வேண்டிய உணவுகள்..! |
இதுபோன்று குழந்தை நலன் பற்றிய மேலும் தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> | குழந்தை நலன் |