குளிர்காலத்திலிருந்து குழந்தைகளை பாதுகாப்பது எப்படி?

Advertisement

Winter Care Tips for Babies in Tamil

ஒவ்வொரு தாயிற்கும் தன் குழந்தையின் உடல் ஆரோக்கியம் என்பது மிக மிக முக்கியமான ஒன்று. குளிர் காலம் வந்துவிட்டாலே தாய்மார்கள் அதிகம் பயப்படுகின்ற விஷயம் குழந்தைக்கு காய்ச்சல், சளி, இருமல் தொல்லைகள் வந்துவிடுமே என்று தான்! மற்ற பருவ நிலைகளை காட்டிலும் குளிர்காலத்தில் தான் குழந்தைகள் அதிகம் நோய்வாய்படுகின்றன. சளி, இருமல், காய்ச்சல் போன்ற பல தொந்தரவுகள் ஏற்பட்டு அவதிப்படுகின்றன. குளிர்காலமானது குழந்தைகளுக்கு  ஆபத்தான காலமாகும். எனவே உங்கள் குழந்தைகளை நீங்கள் தான் பாதுகாப்பாக பார்த்துக்கொள்ள வேண்டும். 

குளிர்காலத்தில் உங்கள் குழந்தைகளின் உடல் ஆரோக்கியத்தில் நீங்கள் அதிக கவனம் செலுத்த வேண்டும். குளிர்காலம் உங்கள் குழந்தைகளுக்கு பல தீங்குகளை விளைவிக்க கூடியது என்பதை கருத்தில் கொள்ள வேண்டும். நாம் இப்பதிவில் பார்க்க இருப்பது உங்கள் குழந்தைகளின் பாதுகாப்பு பற்றித்தான்! குளிர்காலத்தில் இருந்து உங்க குழந்தைகளை பாதுகாத்து குளிர்காலத்தினை எவ்வாறு கடந்து செல்லலாம் என்பதை பற்றிய சில தகவல்களைத்தான்! 

குளிர்கால குழந்தை பாதுகாப்பு தகவல்கள்:

winter care tips for babies in tamil

  • குழந்தை தூங்கும் அறையினை சூடாக வெது வெதுப்பாக வைத்துக்கொள்ள  வேண்டும். அறையில் இருக்கும் கதவு மற்றும் ஜன்னல்களை திறந்து வைக்க கூடாது. திறந்து வைப்பதால் குளிர் காற்றானது குழந்தை தூங்கும் அறைக்குள் நுழைந்து அறையினை குளிரூட்டும். எனவே குழந்தை தூங்கும் அறையின் கதவு மற்றும் ஜன்னல்களை மூடி வைக்க வேண்டும்.

குழந்தைகளின் மலச்சிக்கலை உடனடியாக சரிசெய்ய இதை மட்டும் செய்யுங்கள்..!

குளிர்கால வறண்ட சருமத்தில் இருந்து பாதுகாப்பு :

winter care tips for babies in tamil

  • குளிர்காலத்தில் குழந்தையின்  சருமபராமரிப்பு என்பது மிக மிக முக்கியம். குளிர்காலத்தில் குழந்தையின் தோலானது வறட்சியாக காணப்படும். அதனால் தோலானது எளிதாக பாதிக்கப்படும். எனவே தோலினை வறட்சி அடையாமல் பார்த்துக்கொள்ள வேண்டும். குழந்தைகளுக்கு என்று தனி  Baby Moisturizer-கள்  கடைகளில் கிடைக்கின்றன.அதனை பயன்படுத்துவதன் மூலம் சரும வறட்சியை சரி செய்யலாம். Moisturizer-க்கு பதிலாக தேங்காய் எண்ணெயினை லேசாக சூடுசெய்து ஆறவைத்து அதையும் தடவி வரலாம் தோல் வறட்சி நீங்கும்.

 home remedy for baby dry skin in winter in tamil

குளிர்காலத்தில் குழந்தையினை எந்த நேரத்தில் குளிக்க வைக்க வேண்டும்:

  • குளிர்காலத்தில் குழந்தைகளை காலை நேரங்களில் குளிக்க வைப்பதை முற்றிலும் தவிர்க்க வேண்டும். ஏனென்றால் காலையில்தான் குளிரானது அதிகமாக இருக்கும். எனவே மதிய நேரங்களில்தான் குளிக்க வைக்க வேண்டும். குளிக்க வைத்த பின்னர் ஈரம் இல்லாமல் சுத்தமாக துவட்டிவிட வேண்டும்.

குழந்தை வளர்ப்பு மற்றும் பராமரிப்பு குறிப்புகள் (Baby care tips tamil)..!

குழந்தைக்கு மசாஜ்:

winter care tips for babies in tamil

  • தேங்காய் எண்ணெய் அல்லது ஆலிவ் ஆயிலை லேசாக சூடுபடுத்தி ஆயிலை வெது வெதுப்பான சூட்டில் மசாஜ் செய்து பின்னர் குளிக்க வைக்கலாம். தேங்காய் எண்ணெய் எடுப்பது சிறந்ததது.

குளிர்கால ஆடைகள் :

home remedy for baby dry skin in winter in tamil

  • குளிர காலத்தில் குழந்தைகளின் உடம்பு, காது, கால், கை உறுப்புகள் மூடும் வகையில் குளிராடைகள் பயன்படுத்த வேண்டும். சாக்ஸ், கிளவ்ஸ், ஸ்வெட்டர் போன்றவற்றை கட்டாயம் பயன்டுத்த வேண்டும். அது குழந்தையினை குளிர் தாக்காமல் வெதுவெதுப்பாக பாதுகாக்கும். குழந்தைகளுக்கும் அணியும் ஆடைகள் நன்கு காய்ந்து இருக்க வேண்டும்.

குழந்தையின் படுக்கை விரிப்பு:

home remedy for baby dry skin in winter in tamil.jpeg

  • குழந்தையின் படுக்கை விரிப்பை வெது  வெதுப்பாக வைத்துக்கொள்ள வேண்டும். குழந்தையானது படுக்க விரிப்பில் சிறுநீர் கழித்து நனைத்து விடாமல் அடிக்கடி கவனித்து மாற்றிவிட வேண்டும். படுக்கை விரிப்பு ஈரமாகாமல் பார்த்துக்கொள்வது அவசியம்.

முன்கூட்டியே மருந்துகளை வாங்கி வைக்க வேண்டும்:

  • குளிர்காலத்தில் குழந்தைகளுக்கு காய்ச்சல், இருமல், சளி போன்றவைகளுக்கு மருந்துகளை வீட்டில் முன்கூட்டியே  வாங்கி வைத்திருக்க வேண்டும். குழந்தைகளுக்கு எந்த மருந்துகளை கொடுத்தாலும் அம்மருந்தின்(Expiry date) காலாவதியாகும் நாளை பார்த்து தான் கொடுக்க வேண்டும்.

குழந்தைகளுக்கு தாய்ப்பால் கட்டாயம் அவசியம்:

 winter care tips for babies in tamil

  • குளிர்காலத்தில் குழந்தைகளுக்கு அடிக்கடி தாய்ப்பால் கொடுக்க  வேண்டும். ஏனென்றால்  தாய்ப்பாலில் அதிக நோய் எதிர்ப்பு சக்தி இருப்பதால் நோய்கள் ஏற்படாமல் தடுக்கும்.

வீட்டின் சுத்தம் அவசியம்:

  • வீடுகளை சுத்தமாக வைத்து இருக்க வேண்டும். குளிர்காலத்தில் வீடுகளை தண்ணீர் ஊற்றி கழுவது துடைப்பது போன்ற செயல்களை தவிர்க்க வேண்டும்.

மேற்கூறிய குழந்தை பாதுகாப்பு தகவல்களை நீங்களும் பயன்படுத்தி உங்கள் குழந்தைகளை குளிர்காலத்தில் இருந்து பாதுகாப்பாக ஆரோக்கியாக பார்த்துக்கொள்ளுங்கள்! நன்றி🙏🙏🙏.

உங்கள் குழந்தைகளுக்கு ஏற்படும் வயிறு சம்மந்தப்பட்ட அனைத்து பிரச்சனைகளுக்கும் இந்த ஒரு தீர்வு போதும்..!

இதுபோன்று குழந்தை நலன் பற்றிய மேலும் தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> குழந்தை நலன்
Advertisement