யுகாதி பச்சடி எப்படி செய்வது? | Ugadi Pachadi Seivathu Eppadi Tamil
இந்த வருடம் யுகாதி பண்டிகை ஏப்ரல் மாதம் 02-ம் தேதி கொண்டாடப்பட உள்ளது. இந்த புனித நன்னாளில் வேப்பம்பூ-வெல்லக் கலவையை பச்சடி போல செய்து உறவினர்களுக்கு கொடுத்து உகாதி வாழ்த்து தெரிவிப்பது வழக்கம். உகாதி பச்சடியில் சேர்க்கப்படும் வெல்லம், சந்தோஷத்தை குறிக்கிறது. உப்பு வாழ்க்கையின் மீதான பற்றை குறிக்கும். வேப்பம் பூ வாழ்க்கையின் கஷ்டங்களை குறிக்கும். புளி சவாலான தருணங்களை குறிக்கும். மாங்காய் துண்டுகள் புதிய சவால்கள் மற்றும் ஆச்சரியங்களை குறிக்கும். கடைசியாக மிளகு கோபம் ஏற்படுத்தும் வாழ்க்கையின் தருணங்களை குறிக்கும். சந்தோஷமாக வாழ்ந்திட வாழ்க்கையின் இந்த ஆறு கட்டத்தையும் மனிதர்கள் சமமாக பார்க்க வேண்டும் என்பதை குறிக்கவே இந்த பச்சடி. வாங்க அந்த யுகாதி பச்சடியை எப்படி செய்யலாம்னு பார்க்கலாம்.
யுகாதி பச்சடி செய்ய -தேவையான பொருள்- Ugadi Pachadi Ingredients in Tamil:
- நீர்த்த புளி கரைசல் – 3/4 கப்
- வெல்லம் – 2-3 டேபிள் ஸ்பூன்
- உப்பு
- மிளகுத்தூள் – 1 டீஸ்பூன்
- வேப்பம்பூ – 2 டீஸ்பூன்
- மாங்காய் – 1 (நறுக்கியது)
யுகாதி பச்சடி செய்வது எப்படி – செய்முறை விளக்கம்:
ஸ்டேப்: 1
முதலில் ஒரு பவுலில் நீர்த்த புளி கரைசலை எடுத்துக்கொள்ளவும். அடுத்து துருவி வைத்துள்ள வெல்லத்தை புளி கரைசலில் சேர்த்துக்கொள்ளவும்.
ஸ்டேப்: 2
வெல்லம் சேர்த்த பிறகு மிளகுத்தூள் 1 டீஸ்பூன் மற்றும் உப்பு சேர்த்துக்கொள்ளவும்.
ஸ்டேப்: 3
அடுத்ததாக நறுக்கி வைத்துள்ள மாங்காயை அதில் சேர்க்கவும். நறுக்கிய மாங்காய் சேர்த்த பிறகு வேப்பம் பூவினை சேர்க்கவும்.
ஸ்டேப்: 4
எல்லாவற்றையும் சேர்த்த பிறகு நன்றாக கரண்டியால் மிக்ஸ் செய்யவும். அவ்ளோதாங்க சுவையான பாரம்பரிய யுகாதி பச்சடி தயார்.
- யுகாதி பச்சடியில் சேர்க்கப்படும் வெல்லம் சந்தோஷத்தை குறிக்கிறது.
- உப்பு – வாழ்க்கையின் மீதான அன்பை குறிக்கும்.
- வேப்பம் பூ – வாழ்க்கையின் கஷ்டங்களை குறிக்கும்.
- புளி – சவாலான தருணங்களை குறிக்கும்.
- மாங்காய் – புதிய சவால்கள் மற்றும் ஆச்சரியங்களை குறிக்கும்.
இதுபோன்ற சுவையுள்ள சமையல் குறிப்புகளை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> | Samayal Kurippugal |