ஆந்திர ஸ்பெஷல் மிளகாய் பஜ்ஜி செய்வது எப்படி? | Andhra Style Chilli Bajji in Tamil

Advertisement

Andhra Style Chilli Bajji in Tamil

மழைக்காலம் வந்து விட்டால் மாலை நேரங்களில் காரமாக சாப்பிட தோன்றும் அப்போது நாம் தினமும் சாப்பாடு சாப்பிடுவது சிலருக்கு பிடிக்காது. ஆனால் மொறுமொறுவென்று சாப்பிடத்தான் ஆசையாக இருக்கும்.

அப்போது வீட்டில் சாப்பிட கேட்டால் உடனே செய்வது வடை, பக்கோடா, போண்டா தான். முக்கியமானது ஒன்று சொல்ல மறந்துவிட்டோம் பஜ்ஜி செய்து கொடுப்பார்கள் ஆனால் அதனை சாப்பிட்டு அலுத்து விட்டது. இனி கவலை வேண்டாம் ஆந்திர ஸ்பெஷல் மிளகாய் பஜ்ஜி செய்வது எப்படி என்று பார்ப்போம் வாங்க..!

Mirchi Bajji Recipe Andhra Style in Tamil:

  1. மிளகாய் – 10 
  2. வெங்காயம் – 1
  3. மிளகாய் தூள் – 1 டீஸ்பூன்
  4. தனியா தூள் – 1 டீஸ்பூன்
  5. பெருங்காயம் – 15 கிராம்
  6. உப்பு – தேவையான அளவு
  7. வெல்லம் – 15 கிராம்
  8. புளி தண்ணீர் – 2 டேபிள் ஸ்பூன்
  9. கடலை மாவு – 200 கிராம்
  10. அரிசி மாவு – 50 கிராம்

உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே: 👉 https://bit.ly/3Bfc0Gl

செய்முறை: 

ஸ்டேப்: 1

stuffed mirchi bajji recipe

முதலில் மிளகாயை எடுத்து அதில் நடுப்பக்கம் மட்டும் கீறி விடவும் அது ஒரு பக்கம் மட்டுமே இருக்க வேண்டும். அதில் உள் இருக்கும் விதைகளை வெளியில் எடுத்துவிடவும்.

ஸ்டேப்: 2

இப்போது கிண்ணத்தை எடுத்துக்கொள்ளவும் அதில் வெங்காயம் நறுக்கியதை சேர்க்கவும்.

ஸ்டேப்: 3

வெங்காயத்துடன், மிளகாய் தூள் – 1 டீஸ்பூன், தனியா தூள் – 1 டீஸ்பூன், பெருங்காயம் – 15 கிராம், தேவையான அளவு உப்பு சேர்த்து ஒரு முறை கலந்து விடவும்.

இதையும் சாப்பிடுங்கள்👉👉 சுவை மிகுந்த மாலை நேர சிற்றுண்டி – வெங்காய பஜ்ஜி செய்முறை !!!

ஸ்டேப்: 4

இப்போது தனியாக புளி தண்ணீர் எடுத்து வைத்திருப்போம் அதனை 2 டேபிள் ஸ்பூன் சேர்த்து அதனை கலந்து தனியாக வைக்கவும்.

ஸ்டேப்: 5

இப்போது அதனை தனியாக வைத்திவிட்டு பஜ்ஜி போடுவதற்கு மாவு செய்வோம் வாங்க..! கடலை மாவு – 200 கிராம், அரிசி மாவு – 50 கிராம், கொஞ்சம் பெருங்காயம், இந்த பஜ்ஜி மாவிற்கு தேவையான அளவு உப்பு சேர்க்கவும். சிறிதளவு மிளகாய் தூள், 1 சிட்டிகை அளவு சோடா உப்பு சேர்த்து கலந்துவிடவும். பஜ்ஜி மாவு போல் கொஞ்சம் தண்ணீராக இருக்க வேண்டும்.

ஸ்டேப்: 6

stuffed mirchi bajji recipe

இப்போது முதலில் செய்த மிளகாயை எடுத்துக்கொள்ளவும். அதில் நாம் செய்து வைத்த மசாலாவை மிளகாயின் உள்ளே வைக்கவும்.

ஸ்டேப்: 7

கடாயில் எண்ணெய் ஊற்றி கொதிக்கவிடவும் ஓரளவு கொதிவந்தவுடன் அதில் நாம் செய்து வைத்துள்ள மாவையும், மிளகாயையும் எடுத்துக்கொள்ளவும்.

 andhra style chilli bajji in tamil

இப்போது ஒவ்வொரு மிளகாயை எடுத்து பஜ்ஜி மாவில் நனைத்து கொதிக்கும் எண்ணெயில் போட்டு பொரிக்கவும்.

அவ்வளவு தான் உங்களுக்கு பிடித்த சட்னியை தொட்டு சாப்பிட்டு பாருங்கள் சுவை தாறுமாறா இருக்கும்.

இதையும் செய்து சாப்பிடுங்கள் 👉👉 மொறு மொறுன்னு மிளகாய் பஜ்ஜி இப்படி செஞ்சு பாருங்க..!

 

இதுபோன்ற சுவையுள்ள சமையல் குறிப்புகளை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> சமையல் குறிப்புகள்
Advertisement