Aval Payasam Recipe in tamil
பொதுவாக அனைவருடைய வீட்டிலும் பண்டிகை நாட்கள், உறவினர் வருகை மற்றும் சில முக்கிய தினங்கள் என இது போன்ற நாட்களில் பாயாசம் வைப்பார்கள். அதில் எப்போது பார்த்தாலும் ஒரே மாதிரியான பாயாசத்தை தான் வைத்து கொடுப்பார்கள். நீங்களும் இதுநாள் வரையும் பால் பாயாசம், ஜவ்வரசி பாயாசம், இளநீர் பாயாசம், பச்சரிசி பாயாசம், பருப்பு பாயாசம் மற்றும் சேமியா பாயாசம் என இந்த பாயாசத்தை மட்டும் சாப்பிட்டு சாப்பிட்டு அலுத்துபோகிருப்பீர்கள். அதனால் தான் சமைக்கும் தாய்மார்களுக்கும் மற்றும் பாயாசம் பிரியர்களுக்கும் மிகவும் பிடித்த மாதிரியான அவல் பாயாசம் செய்வது எப்படி என்று தெரிந்துக்கொள்ள போகிறோம். சரி வாருங்கள் அந்த பாயாசத்தை 10 நிமிடத்தில் செய்து ருசித்து பார்க்கலாம்.
உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே 👇 https://bit.ly/3Bfc0Gl
How to Make Aval Payasam:
முதலில் அவல் பாயாசம் செய்வதற்கு என்னென்ன பொருட்கள் நமக்கு தேவை என்று தெரிந்துக்கொள்வோம்.
Aval Payasam Ingredients:
- அவல்- 1 கப்
- வெல்லம்- 1/2 கப்
- பால்- 3 கப்
- முந்திரி- 20
- உலர் திராட்சை- 15
- ஏலக்காய் பவுடர்- 1/2 தேக்கரண்டி
- Condensed Milk- 1/4 கப்
- நெய்- 1 தேக்கரண்டி
முறையான கல்யாண வீட்டு பால் பாயாசம் |
அவல் பாயாசம் செய்முறை:
நெய் வறுக்கும் முறை:
முதலில் அடுப்பை பற்ற வைத்து அதில் ஒரு கடாயை வைத்து 1 தேக்கரண்டி நெய் ஊற்றி அதில் 10 முந்திரி மற்றும் 15 திராட்சை சேர்த்து பொன் நிறமாக வறுத்து தனியாக வைத்து கொள்ளுங்கள்.
அவல் வறுக்கும் முறை:
முந்திரி வறுத்த அதே கடாயில் எடுத்து வைத்துள்ள 1 கப் அவலினை சேர்த்து இதையும் பொன் நிறமாக வறுத்து ஒரு கிண்ணத்தில் வைத்து விடுங்கள்.
முந்திரியை அரைத்தல்:
அதன் பிறகு 10 முந்திரியை 10 நிமிடம் தண்ணீரில் ஊற வைத்து விடுங்கள். 10 நிமிடம் கழித்து பிறகு ஊற வைத்துள்ள முந்திரியை ஒரு மிக்ஸி ஜாரில் சேர்த்து நன்றாக அரைத்து கொள்ளுங்கள்.
பால் காய்ச்சும் முறை:
அடுத்ததாக 3 கப் தண்ணீரில் சேர்க்காத பாலை எடுத்துக்கொண்டு அதனை ஒரு பாத்திரத்தில் ஊற்றி காய்ச்சி கொள்ளுங்கள்.
பால் சிறிது நேரம் காய்ந்த பிறகு அதனுடன் அரைத்து வைத்துள்ள முந்திரி மற்றும் 1/4 கப் Condensed Milk சேர்த்து 5 நிமிடம் வேக விடுங்கள்.
பாலில் அவல் சேர்க்கும் முறை:
5 நிமிடம் கழித்த பிறகு அடுப்பில் இருக்கும் பாலுடன் வறுத்து வைத்துள்ள அவிலினை சேர்த்து நன்றாக 7 நிமிடம் வேக விடுங்கள்.
வெல்லம் பாகு காய்ச்சும் முறை:
இப்போது அடுப்பில் ஒரு பாத்திரத்தை வைத்து அதில் 1/2 கப் வெல்லம் சேர்த்து அதனுடன் தண்ணீர் 1/2 கப் சேர்த்து வெல்லத்தை நன்றாக கரைய விட்டு அதனை வடிகட்டி வைத்து கொள்ளுங்கள். இதில் வெல்ல பாகு தண்ணீராக தான் இருக்க வேண்டும்.
கடைசியாக வெல்லம் சேர்த்தல்:
7 நிமிடம் கழித்த பிறகு அடுப்பில் இருக்கும் அவல் வெந்த பிறகு அதனுடன் தயார் செய்து வைத்துள்ள வெல்லம் பாகினை சேர்த்து நன்றாக கலந்து 2 நிமிடம் கொதிக்க விடுங்கள்.
அவல் பாயாசம் கொதித்த பிறகு அடுப்பை அணைத்து விட்டு. அதனை கீழே இறக்கி வைத்து முந்திரி, திராட்சை மற்றும் 1/2 தேக்கரண்டி ஏலக்காய் பவுடர் சேர்த்து நன்றாக கலந்து அனைவருக்கும் கொடுங்கள்.
அவ்வளவு தான். இப்போது அவல் பாயாசம் செய்வது என்று உங்களுக்கு தெரிந்தது அல்லாவா. உடனே நீங்கள் வீட்டில் உள்ளவர்களுக்கு செய்து கொடுத்து அசத்துங்கள்.
ருசியான குளு குளு இளநீர் பாயாசம் செய்வது எப்படி..? |
இதுபோன்ற சுவையுள்ள சமையல் குறிப்புகளை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> | samayal kurippugal in tamil |