அவுல் வைத்து வடை செய்ய தெரியுமா? | Aval Vadai Seivathu Eppadi

அவல் வடை செய்வது எப்படி | Aval Vadai Recipe in Tamil

விதவிதமான மாலை நேரத்தில் சாப்பிட நினைத்தாலும் வடைக்கு ஈடாகாது எந்த ஒரு ஸ்னாக்சும். மாலை நேரத்தில் அதுவும் இந்த பனிக்காலத்தில் சூடாக எதாவது சாப்பிட தோன்றும் நாம் சாப்பிடுவது அனைத்தும் உளுந்துவடை, போண்டா, பஜ்ஜி தான், ஆனால் வடையில் நிறைய வெரைட்டி உள்ளது.

முக்கியமாக சொல்ல வேண்டும் என்றால் அவுல் வடை கேள்வி பட்டிருக்கீர்களா. அவள் வைத்து பாயசம் சாப்பிட்டிருக்கேன் இது என்ன புதுசாக இருக்கும் என்று யோசிப்பது எனக்கு தெரிகிறது. சரி வாங்க அது எப்படி செய்வது என்று தெரிந்துகொள்வோம்..!

Aval Vadai Recipe in Tamil:

உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே: https://bit.ly/3Bfc0Gl

தேவையான பொருட்கள்:

 1. அவுல் – 1/4 
 2. கடலை மாவு – 2 டேபிள் ஸ்பூன்
 3. அரசி மாவு – 2 டேபிள் ஸ்பூன்
 4. வெங்காயம் – 1
 5. சீரகம் – 1 டீஸ்பூன்
 6. பச்சை மிளகாய் – 2
 7. இஞ்சி – 1 துண்டு
 8. கருவேப்பிலை – 1 கொத்து
 9. மல்லி இலை – 1 கைப்பிடி
 10. மிளகாய் தூள் – 1/2 டீஸ்பூன்
 11. உப்பு – தேவையான அளவு
 12. எண்ணெய் – பொரிப்பதற்கு தேவையான அளவு

செய்முறை:

குறிப்பு: 

Aval Vadai Recipe

 • முதலில் அவுளை 15 நிமிடம் ஊறவைக்கவும்.
 • வெங்காயத்தை வடைக்கு நறுக்குவது போல் நறுக்கவும்.
 • பச்சை மிளகாய், இஞ்சி, கொத்தமல்லி அனைத்தையும் சிறிதாக நறுக்கி தனியாக வைக்கவும்.

ஸ்டேப்: 1

முதலில் ஒரு பாத்திரத்தை எடுத்து அதில் ஊறவைத்த அவுளை தண்ணீர் இல்லாமல் பிழிந்து எடுத்துக்கொள்ளவும்.

தண்ணீர் இருந்தால் எண்ணெய் அதிகமாக தேவைப்படும்,

ஸ்டேப்: 2

Aval Vadai Recipe

இப்போது அந்த அவுலுடன் கடலை மாவு 2 டேபிள் ஸ்பூன், அரசி மாவு – 2 டேபிள் ஸ்பூன், வெங்காயம் – 1, சீரகம் – 1 டீஸ்பூன், பச்சை மிளகாய் – 2, இஞ்சி – 1 துண்டு கருவேப்பிலை – 1 கொத்து, மல்லி இலை – 1 கைப்பிடி, மிளகாய் தூள் – 1/2 டீஸ்பூன்
உப்பு – தேவையான அளவு சேர்த்து கொஞ்சம் தண்ணீர் தெளித்து பிசைந்துகொள்ளவும்.

சாப்பிடலாம் 👉👉 சத்தான காய்கறிகளை வைத்து சுட சுட வடை இப்படி செய்து பாருங்கள்..!

ஸ்டேப்: 3

Aval Vadai Recipe

அடுப்பை பற்றவைத்து அதில் எண்ணெயை ஊற்றி சூடாக்கவும். எண்ணெய் சூடானதும். கையில் வடையை தட்டி எண்ணெய்யில் போட்டு பொரித்து எடுத்துக்கொள்ளவும்.

Aval Vadai Recipe

அவ்வளவு தான் அவுல் வடை ரெடி.. !

சாப்பிடலாம் வாங்க 👉👉 வீட்டிலேயே தயிர் வடை செய்வது எப்படி?

இதுபோன்ற சுவையுள்ள சமையல் குறிப்புகளை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> சமையல் குறிப்புகள்