நவராத்திரி ஸ்பெஷல் பீட்ருட் பாயாசம். நீங்களும் செய்து ருசித்து பாருங்கள்.

beetroot payasam recipe in tamil

பீட்ருட் பாயாசம்

வணக்கம் நண்பர்களே இன்று நம் சமையல் பதிவில் நவராத்திரி ஸ்பெஷல் பீட்ருட் பாயாசம்   மிகவும் சுவையாக செய்வது எப்படி என்றுதான் தெரிந்து கொள்ளப்போகிறோம். இதுவரை எத்தனையோ பாயாசங்களை செய்து சாப்பிட்டுஇருப்பீர்கள் ஆனால்  இந்த பீட்ருட் பாயாசத்தை மட்டும் செய்து சாப்பிட்டால் நீங்கள் திரும்ப திரும்ப செய்து சாப்பிடுவீர்கள். எனவே வரப்போகும் இந்த நவராத்திரிக்கு இந்த பாயாசத்தை செய்து துர்க்கைகு படைத்துவிட்டு, நீங்கள் சாப்பிடுவதால் உடலுக்கு பல ஆரோக்கியத்தை தருகிறது. பீட்ருட் சாப்பிடாத குழந்தைகளுக்கு இந்த பாயாசத்தை செய்து கொடுங்கள். மேலும் இந்த பீட்ருட் பாயாசத்தை எப்படி செய்வது என்று தெரிந்துகொள்ளலாம் வாங்க.

சுவையான ஜவ்வரிசி கேசரி செய்வது எப்படி…?

 

பீட்ருட் பாயாசத்திற்கு தேவையான பொருட்கள்:

  • நெய்- 1 1/2 டேபிள் ஸ்பூன் 
  • பால்- 21/2 கப் 
  •  துருவிய பீட்ருட்- 1 கப் 
  • ஏலக்காய் பொடி- 1/4 டீஸ்பூன் பாயாசம் 
  • உப்பு 
  • சர்க்கரை தேவையான அளவு 

பீட்ருட் பாயாசம் செய்முறை:

ஸ்டேப்:1

முதலில் அடுப்பை ஆன் செய்துகொண்டு, ஒரு பாத்திரத்தில் மிதமான சூட்டில் வைத்து அந்த பாத்திரத்தில் பாலை நன்றக கொத்திக்க வைக்கவும். பால் கொத்தித்ததும் அதை ஆறவைக்க வேண்டும்.

ஸ்டேப்:2

அதன் பிறகு ஒரு கடாயை அடுப்பில் வைத்து நெய் ஊற்றவேண்டும். நெய் சூடான பிறகு முந்திரியை சேர்க்க வேண்டும்.  முந்திரியை கருக விடாமல் பென்னிறமாக வரும் வரை வறுத்து தனியாக ஒரு தட்டில் எடுத்து வைத்துக்கொள்ள வேண்டும்.

ஸ்டேப்:3

அடுத்ததாக அதே கடாயில் துறவி வைத்த பீட்ருட்டை சேர்த்து பச்சை வாசனை போகும் வரை நன்றாக வதக்கி கொள்ள வேண்டும். பச்சை வாசனை போன பிறகு சர்க்கரை சேர்த்து, சர்க்கரை உருகியதும், அதில் ஆறவைத்த பாலை ஊற்றி நன்றாக கிளறிவிட வேண்டும். மிதமான சூட்டில் வைத்து 10 நிமிடம் கிளற வேண்டும்.

ஸ்டேப்:4

கடைசியாக பாயாசத்தில் வறுத்த முந்திரியையும், ஏலக்காய் பொடியையும் சேர்த்து நன்றாக கிளறிவிட வேண்டும். அடுத்ததாக இதனுடைய சுவையை இன்னும் அதிகரிக்க சிறிதளவு உப்பு சேர்த்து கிளறி விட வேண்டும். இப்பொழுது சுவையான பீட்ருட் பாயாசம் ரெடி வாருங்கள் சுவைக்கலாம்.

 

இதுபோன்ற சுவையுள்ள சமையல் குறிப்புகளை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> Samayal Kurippugal