உங்கள் வீட்டில் 1 கப் பால் இருக்கா..? அப்போ இந்த ரெசிபியை ஒரு முறை ட்ரை பண்ணி பாருங்க..!

Advertisement

Caramel Pudding Recipe in Tamil

உங்கள் வீட்டில் உள்ளவர்களுக்கு ஏதாவது ஒரு புதுமையான மற்றும் மிகவும் ருசியான ஸ்வீட் ரெசிபி செய்து தர வேண்டும் என்று நினைக்கின்றீர்களா..? அப்படி என்றால் இந்த பதிவு உங்களுக்காக தான். ஆம் நண்பர்களே இன்றைய பதிவில் மிகவும் எளிமையான மற்றும் மிகவும் ருசியான ஒரு ஸ்வீட் ரெசிபியை பற்றி தான் பார்க்க இருக்கின்றோம். அது என்ன ரெசிபி என்றால் Caramel Pudding தான். அதனால் இந்த பதிவை முழுதாக படித்து இந்த Caramel Pudding எப்படி செய்வது என்பதை அறிந்து கொண்டு உங்களின் வீட்டில் உள்ளவர்களுக்கு செய்து கொடுத்து அசத்துங்கள். சரி வாங்க நண்பர்களே பதிவினுள் செல்லலாம்.

உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே 👇 https://bit.ly/3Bfc0Gl

Caramel Pudding Ingredients in Tamil:

Caramel Pudding Ingredients in Tamil

முதலில் இதற்கு தேவையான பொருட்களை பற்றி விரிவாக பார்க்கலாம்.

  1. பால் – 1 கப்
  2. முட்டை – 2
  3. சர்க்கரை – 3 டேபிள் ஸ்பூன் 
  4. வெண்ணிலா எசன்ஸ் – 1 டீஸ்பூன்
  5. தண்ணீர் – 1 டம்ளர் 

செய்முறை:  

ஸ்டேப் – 1

முதலில் அடுப்பில் ஒரு பாத்திரத்தை வைத்து அதில் நாம் எடுத்து வைத்துள்ள 1 1/2 டேபிள் ஸ்பூன் சர்க்கரையை சேர்த்து அதனுடன் 1 டம்ளர் தண்ணீரையும் சேர்த்து நன்கு கலந்து கொள்ளுங்கள்.

இப்பொழுது சர்க்கரை நன்கு கரைந்தவுடன் அதனை மற்றொரு பாத்திரத்தில் ஊற்றி வைத்து கொள்ளுங்கள்.

ஸ்டேப் – 2

அடுத்து ஒரு சிறிய பாத்திரத்தில் நாம் எடுத்து வைத்துள்ள 2 முட்டையையும் உடைத்து ஊற்றி  கலந்து கொள்ளுங்கள்.

இதையும் படித்துப்பாருங்கள்=> தேங்காய் பால் புட்டிங் செய்வது எப்படி..!

ஸ்டேப் – 3

அடுத்து புட்டிங் கலவை செய்வதற்கு அடுப்பில் ஒரு பாத்திரத்தை வைத்து அதில் நாம் எடுத்து வைத்துள்ள 1 கப் பால், 1 1/2 டேபிள் ஸ்பூன் சர்க்கரை, 1 டீஸ்பூன் வெண்ணிலா எசன்ஸ் மற்றும் நாம் முன்னரே தயார் செய்து வைத்துள்ள முட்டையையும் சேர்த்து நன்கு கொதிக்க விடுங்கள். பின்னர் இதனை நாம் முன்பு சர்க்கரை ஊற்றிய பாத்திரத்திலேயே ஊற்றி வைத்து கொள்ளுங்கள்.

ஸ்டேப் – 4

Caramel Pudding Recipe in Tamil

பிறகு அடுப்பில் ஒரு பாத்திரத்தை வைத்து அதில் சிறிதளவு தண்ணீர் ஊற்றி அதில் நாம் தயார் செய்து வைத்துள்ள புட்டிங் கலவை வைத்து மூடியை போட்டு மூடி 10 நிமிடங்கள் கழித்து எடுத்தீர்கள் என்றால் நமது Caramel Pudding தயாராகிவிடும்.

இதனை அனைவருக்கும் பரிமாறலாம். இந்த Caramel Pudding ரெசிபியை நீங்களும் தயார் செய்து உங்கள் வீட்டில் உள்ளவர்களுக்கு ஒரு முறை செய்து கொடுத்தீர்கள் என்றால்  அவர்கள் மீண்டும் செய்து தருமாறு கேட்டு கொண்டே இருப்பார்கள்.

இதையும் படித்துப்பாருங்கள்=>   1 கப் பால் மட்டும் போதும் சுவையான ஸ்வீட் செய்யலாம் வாங்க

இதுபோன்ற சுவையுள்ள சமையல் குறிப்புகளை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> Samayal Kurippugal

 

Advertisement