வீட்டில் காலிபிளவரை இப்படி செய்து அசத்துங்கள் அப்படி ஒரு டேஸ்ட்

cauliflower gravy recipes in tamil

காலிபிளவர் கிரேவி செய்வது எப்படி.? | Cauliflower Recipes in Tamil

ஹாய் நண்பர்களே.! இன்றைய பதிவில் காலிபிளவர் கிரேவி செய்வது எப்படி என்று தெரிந்துகொள்வோம். நமது வீட்டில் காலிபிளவரை வறுவல், 65 போன்று செய்து கொடித்திருப்பார்கள். ஆனால் அதேயே செய்து கொடுத்தால் நமக்கு போர் அடித்துவிடும். அதுமட்டுமில்லாமல் அந்த உணவையே நமக்கு  பிடிக்காமல் போகிவிடும். தினமும் வித்தியாசமாகவும், ருசியாகவும் செய்து கொடுத்தால் நமக்கு எந்த உணவையும் பிடிக்காது என்று சொல்ல மாட்டோம். அந்த வகையில் இன்று காலிபிளவர் கிரேவி எப்படி செய்வது வாங்க தெரிந்துகொள்வோம்.

இதையும் உங்கள் வீட்டில் செய்து அசத்துங்கள்⇒ நாவிற்கு சுவையூட்டும் காலிஃபிளவர் வடை செய்வது எப்படி..?

தேவையான பொருட்கள்:

  • காலிபிளவர்
  • வெங்காயம் -03
  • பச்சைமிளகாய் -3
  • இஞ்சி -ஒரு துண்டு
  • தக்காளி -3
  • தயிர் -1/2 கப்
  • கொத்தமல்லி சிறிதளவு
  • மஞ்சள் தூள் -1/2 ஸ்பூன்
  • மிளகாய் தூள் -1ஸ்பூன்
  • கரம் மசாலா தூள் -1/2 ஸ்பூன்
  • உப்பு -தேவையான அளவு
  • தண்ணீர் -1/2 லிட்டர்

செய்முறை: 1

காலிபிளவர் கிரேவி செய்வது எப்படி

முதலில்  காலிபிளவரை சிறிய துண்டுகளாக நறுக்கி வேக வைத்து கொள்ளவும். 3 தக்காளி சிறிய துண்டுகளாக நறுக்கி கொள்ளவும். தயிரை நன்றாக மிக்ஸ் செய்து வைத்துக்கொள்ளவும். இதை மட்டும் ரெடி செய்து வைக்கவும்.

அடுத்து மிக்சியில் நறுக்கிய 3 வெங்காயம், பச்சைமிளகாய், ஒரு துண்டு இஞ்சி, பூண்டு 20 பல் சேர்த்து அரைத்து கொள்ளவும்.

செய்முறை: 2

காலிபிளவர் கிரேவி செய்வது எப்படி

அடுப்பை பத்த  வைத்து கடாயை வைக்க வேண்டும். அதில் கடலை எண்ணெய் 4 ஸ்பூன் ஊற்றவும். பின் அரைத்து வைத்த பேஸ்ட்டை சேர்க்கவும். பச்சை வாசனை போன பிறகு நறுக்கி வைத்த தக்காளியை சேர்க்கவும்.

செய்முறை: 3

அதில் மஞ்சள் தூள் 1/2 ஸ்பூன், மிளகாய் தூள் 1 ஸ்பூன், தேவையான அளவு உப்பு, கரம் மசாலா தூள் 1/2 ஸ்பூன் போன்றவை சேர்த்து மிக்ஸ் செய்யவும்.

செய்முறை: 4

காலிபிளவர் கிரேவி செய்வது எப்படி

பின் அதில் 1/2 லிட்டர் தண்ணீர் ஊற்றவும். 7 அல்லது 8 நிமிடம் கொதிக்க வேண்டும். கொதித்த பிறகு வேக வைத்த காலிபிளவரை சேர்க்கவும். அதில் சிறிதளவு சுகர் சேர்க்க வேண்டும்.

செய்முறை: 5

காலிபிளவர் கிரேவி செய்வது எப்படி

அதன் பிறகு தயிரை சேர்த்து ஒரு மிக்ஸ் செய்யவும். அதில் கொத்தமல்லி தழை சேர்த்து அடுப்பை அணைக்கவும்.

இப்போது சூப்பரான காலிபிளவர் கிரேவி ரெடி. இதை நீங்கள் சப்பாத்தி, பூரிக்கு சைடிஷாக சாப்பிலாம்.

இதுபோன்ற சுவையுள்ள சமையல் குறிப்புகளை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> samayal kurippugal in tamil