10 நிமிடத்தில் பாஸ்தா ரெடி அதுவும் சீஸ் பாஸ்தா..!

Advertisement

பாஸ்தா செய்வது எப்படி?

நண்பர்களே வணக்கம் இன்றைய சமையல் குறிப்பில் சீஸ் பாஸ்தா செய்வது எப்படி  என்பதை பார்க்கலாம்..! பொதுவாக குழந்தைகளுக்கு மாலை நேரங்களில் ஸ்னாக்ஸ் செய்து கொடுப்பது வழக்கம். அப்போது நீங்கள் பாஸ்தா செய்துகொடுப்பீர்கள். தினமும் ஒரே மாதிரியான சுவையில் செய்துகொடுத்தால் பாஸ்தா சாப்பிடுவது பிடிக்காமல் போய்விடும். அதனால் இது போல் பாஸ்தா செய்து கொடுங்கள் குழந்தைகளுக்கு பிடிக்காமல் போகாது..!

சீஸ் பாஸ்தா செய்ய தேவையான பொருட்கள்:

  1. பாஸ்தா – 250 கிராம்
  2. தக்காளி – 4
  3. வரமிளகாய் – 2 அல்லது 3
  4. பூண்டு – 5 பல்
  5. கற்பூரவள்ளி இலை – 1
  6. பால் – 1/2 கப்
  7. உப்பு – சுவைக்கேற்ப
  8. சர்க்கரை – 1-2 டீஸ்பூன்
  9. சீஸ் – 1/2 கப் (துருவியது)
  10. கொத்தமல்லி – 3-4 டேபிள் ஸ்பூன்
  11. ஆயில் – 1 டேபிள் ஸ்பூன்

பாஸ்தா செய்முறை:

ஸ்டேப்: 1

முதலில் தக்காளி பூண்டு போன்றவற்றை நன்றாக நறுக்கி வைத்துக்கொள்ளவும். மற்ற பொருட்களை உங்களுக்கு தேவையான விதத்தில் நறுக்கிக்கொள்ளவும்.

ஸ்டேப்: 2

முதலில் ஒரு பாத்திரத்தில் நீரை ஊற்றி அடுப்பில் வைத்து நன்கு கொதிக்க வைக்க வேண்டும். கொதித்த பின் அதில் உப்பு மற்றும் பாஸ்தாவைப் போட்டு வேக வைத்து இறக்கி, நீரை வடிகட்டி தனியாக வைத்துக்கொள்ளவும்.

ஸ்டேப்: 3

பின்பு மிக்சி ஜாரில் வரமிளகாய் மற்றும் தக்காளியை சேர்த்து மிருதுவாக அரைத்துக்கொள்ளவும்.

ஸ்டேப்: 4

பின்பு கடாயில் எண்ணெய் ஊற்றி சூடானதும், பூண்டு மற்றும் கற்பூரவள்ளி இலையை சேர்த்து 1 நிமிடம் வதக்கவும். அதனுடன்  அரைத்த தக்காளியை ஊற்றி, தேவையான அளவு உப்பு மற்றும் சர்க்கரை சேர்த்து நன்கு கிளறி விட்டு 8-10 நிமிடம் பச்சை வாடை போகும் வரை வதக்கவும்.

ஸ்டேப்: 5

பின்பு அதில் பால் சேர்த்து கிளறி உடனே அதன் கூடவே வடிகட்டிவைத்த பாஸ்தாவை சேர்த்து கிளறவும்.

ஸ்டேப்: 6

கடைசியாக துருவிய சீஸ் மற்றும் கொத்தமல்லியைத் தூவி இறக்கி சூடாக இருக்கும் போதே பரிபாருங்கள் டேஸ்ட் சூப்பராக இருக்கும்.

சுவையான வெஜிடபிள் பாஸ்தா சூப் செய்யலாம் வாங்க !!!

இதுபோன்ற சுவையுள்ள சமையல் குறிப்புகளை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> Samayal Kurippugal
Advertisement