மிகவும் சுலபமான முறையில் வீட்டிலேயே சிக்கன் 65 மசாலா செய்வது எப்படி..?

Advertisement

Chicken 65 Masala Homemade in Tamil

அசைவம் என்றால் அனைவருக்குமே பிடிக்கும். அதுவும் சிக்கன் 65 என்றால் சொல்லவே வேண்டாம் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவருமே விரும்பி சாப்பிடுவார்கள். நாம் சிக்கன் 65 செய்ய வேண்டும் என்றால் உடனே கடைக்கு சென்று சிக்கன் 65 மசாலா வாங்கி வந்து செய்வோம். ஆனால் இனி அப்படி செய்ய வேண்டிய அவசியம் இல்லை. வீட்டிலேயே மிகவும் சுலபமான முறையில் சிக்கன் 65 மசாலா செய்யலாம். அது எப்படி என்று உங்களுக்கு தெரியுமா..? தெரியாதவர்கள் இந்த பதிவை முழுமையாக படித்து அதை தெரிந்து கொள்ளுங்கள்.

உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே👇 https://bit.ly/3Bfc0Gl 

சிக்கன் 65 மசாலா செய்வது எப்படி..? 

Chicken 65 Masala Homemade in Tamil

  1. மிளகு – 4 ஸ்பூன்
  2. சோம்பு – 4 ஸ்பூன்
  3. நட்சத்திர பூ –
  4. கடல் பாசி – 10 கிராம்
  5. இலவங்கம் – 10 கிராம்
  6. மராத்தி மொக்கு – 10 கிராம்
  7. தனியா – 2 ஸ்பூன்
  8. சீரகம் – 1/2 ஸ்பூன்
  9. வரமிளகாய் – 40
  10. உப்பு – தேவையான அளவு
சிக்கன் 65 செய்வது எப்படி

சிக்கன் 65 மசாலா செய்முறை:

முதலில் ஒரு கடாயை அடுப்பில் வைத்து கொள்ளவும். பின் நாம் எடுத்து வைத்துள்ள இலவங்கம், மராத்தி மொக்கு, நட்சத்திர பூ போன்ற பொருட்களை தனி தனியாக கடாயில் போட்டு வறுத்து எடுத்து கொள்ள வேண்டும். பொன்னிறமாக வறுத்து எடுத்து கொள்ள வேண்டும்.

அடுப்பை குறைத்து வைத்து கருகி விடாமல் வறுக்க வேண்டும். அடுத்து மிளகை முதலில் கடாயில் போட்டு வறுக்க வேண்டும். பின் மிளகுடன் சோம்பு, தனியா, சீரகம், வரமிளகாய், கடல் பாசி  எல்லாவற்றையும் போட்டு கருகாமல் வறுத்து எடுத்து கொள்ள வேண்டும்.

பின் நாம் முதலில் வறுத்த இலவங்கம், மராத்தி மொக்கு, நட்சத்திர பூ இவற்றுடன் தேவையான அளவு உப்பு சேர்த்து ஒருமுறை வறுக்க வேண்டும்.

பின் இதன் வாசம் வந்ததும் அடுப்பில் இருந்து இறக்கி ஆறவிட வேண்டும். ஆறியதும் அதை மிக்சி ஜாரில் போட்டு தூளாக அரைத்து கொள்ள வேண்டும். பின் அரைத்த மசாலாவை சலித்து எடுத்து கொள்ள வேண்டும்.

அவ்வளவு தான் நண்பர்களே வீட்டிலேயே சுலபமான முறையில் சிக்கன் 65 மசாலா தயார். இனி கடையில் வாங்காதீர்கள். வீட்டிலேயே செய்து அசத்துங்கள்..!

வீட்டிலேயே கரம் மசாலா பொடி தயாரிப்பது எப்படி..?

 

இதுபோன்ற சுவையுள்ள சமையல் குறிப்புகளை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> சமையல் குறிப்புகள்
Advertisement