வீடே மணக்கின்ற அளவிற்கு சிக்கன் குழம்பு ருசியா இருக்கனுமா.! அப்போ இதை 1 தேக்கரண்டி போடுங்க போதும்..

Advertisement

சிக்கன் மசாலா பொடி செய்வது எப்படி.?

சிக்கன் என்றாலே அனைவர்க்கும் பிடித்தமான ஒன்று. இதை குழம்பு, வறுவல், பிரியாணி, 65 என்று எப்படி கொடுத்தாலும் விரும்பி சாப்பிடுவார்கள். சிக்கன் குழம்பை குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி சாப்பிடுவதை எப்பொழுதும் கொடுக்கும் ருசியில் கொடுக்காமல் கொஞ்சம் வித்தியாசமாக கொடுத்தால் நல்லா இருக்கும் அல்லவா.! சிக்கன் குழம்பு ருசியாக இருப்பதற்கு என்ன செய்வது என்று யோசிக்கிறீர்களா.! நீங்கள் கடையில் விற்கும் சிக்கன் மசாலா தூளை பயன்படுத்துவீர்கள். ஆனால் இதை பயன்படுத்தும் போது சுவை கொஞ்சம் குறைவாக தான்  இருக்கும். அதுமட்டுமில்லாமல் கெமிக்கல் கலந்திருப்பார்கள். அதனால் நம் வீட்டிலியே சிக்கன் மசாலா தயாரித்து இதனால் குழம்பு வைக்கும் போது பயன்படுத்தினால் ருசி அருமையாக இருக்கும்.

உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே👇 https://bit.ly/3Bfc0Gl 

சிக்கன் மசாலா தயாரிக்க தேவையான பொருட்கள்:

  1. தனியா –100
  2. காய்ந்த மிளகாய் – 25 கிராம்
  3. மிளகு – 2 தேக்கரண்டி
  4. சோம்பு –2 தேக்கரண்டி
  5. சீரகம் – –2 தேக்கரண்டி
  6. பட்டை – சிறிதளவு
  7. அன்னாசி பூ –1
  8. ஜாவித்ரி- சிறிதளவு
  9. கிராம்பு- 5
  10. உப்பு – தேவையான அளவு
  11. கருவேப்பிலை -சிறிதளவு

வீட்டிலேயே கரம் மசாலா பொடி தயாரிப்பது எப்படி..?

சிக்கன் மசாலா பொடி செய்முறை:

chicken masala powder in tamil

அடுப்பை பற்ற வைத்து கடாய் வைத்து அதில் சோம்பு, சீரகம் சேர்த்து வாசனை வரும் வரை வதக்கி தனியாக எடுத்து கொள்ளவும்.

பிறகு மிளகு, பட்டை, கிராம்பு, அன்னாசி பூ, ஜாவித்ரி சேர்த்து வதக்கி தனியாக எடுத்து கொள்ளவும்.

அடுத்து தனியா சேர்த்து பொன்னிறமாக வரும் வரை வதக்கி தனியாக எடுத்து கொள்ளவும். அதன் பிறகு காய்ந்த மிளகாய் மற்றும் கருவேப்பிலை சேர்த்து வதக்கி கொள்ளவும்.

வதக்கிய பொருட்கள் அனைத்தையும் ஒரு தட்டில் கொட்டி பரப்பி விட்டு வெயிலில் காய வைக்கவும். அதன் பிறகு மிக்சியில் சேர்த்து அரைத்து கொள்ளவும். அரைத்த சிக்க மசாலாவை காற்று  புகாத பாட்டிலில் சேர்த்து ஸ்டோர் செய்யவும். இதை 1 மாதம் வரைக்கும் பயன்படுத்தலாம்.

மிகவும் சுலபமான முறையில் வீட்டிலேயே சிக்கன் 65 மசாலா செய்வது எப்படி..?

இதுபோன்ற சுவையுள்ள சமையல் குறிப்புகளை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> சமையல் குறிப்புகள்

 

Advertisement