சிக்கன் எடுத்தால் ஒரு முறை இப்படி செஞ்சி பாருங்கள்..!

Advertisement

Easy Chicken Gravy Recipes in Tamil | ஈசி சிக்கன் கிரேவி செய்முறை

பொதுவாக சிக்கன் என்றாலே அசைவ பிரியர்களுக்கு மிகவும் பிடித்த உணவாகும். சிக்கனில் எந்த ரெசிபி செய்தாலும் அதன் சுவை வேற லெவலில் இருக்கும். அதன் வகையில் இன்று நாம் பார்க்க இருப்பது என்னவென்றால் ஒரு விதியசமான முறையில் சிக்கன் கிரேவி செய்முறை விளக்கத்தை பற்றி தான் இப்பொழுது நாம் பார்க்க போகிறோம் சரி வாங்க அந்த சிக்கன் கிரேவி எப்படி செய்யலாம், என்னென்ன பொருட்கள் தேவைப்படும் போன்ற விவரங்களை இப்பொழுது பார்க்கலாம்.

உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே 👇 https://bit.ly/3Bfc0Gl

தேவையான பொருட்கள்:

  1. சிக்கன் – ¾ கிலோ
  2. எண்ணெய் – தேவையான அளவு
  3. சோம்பு – 1 டீஸ்பூன்
  4. பெரிய வெங்காயம் – 200 கிராம் (பொடிதாக நறுக்கியது)
  5. பச்சை மிளகாய் – இரண்டு
  6. கருவேப்பிலை – இரண்டு கொத்து
  7. இஞ்சி பூண்டு விழுது – ஒரு ஸ்பூன்
  8. மஞ்சள் தூள் – ¼ ஸ்பூன்
  9. உப்பு – தேவையான அளவு
  10. தக்காளி – 100 கிராம் (பொடிதாக நறுக்கியது)
  11. மிளகாய் தூள் – இரண்டு டேபிள் ஸ்பூன்
  12. மல்லி தூள் – மூன்று டேபிள் ஸ்பூன்
  13. மிளகு தூள் – ஒரு ஸ்பூன்
  14. கரம் மசாலா – ஒரு ஸ்பூன்
  15. பூண்டு – 10 பற்கள் (பொடிதாக நறுக்கியது)
  16. காஷ்மீரி மிளகாய் தூள் – 2 ஸ்பூன்

இதையும் கிளிக் செய்து படியுங்கள் 👇
கோவக்காய் கிரேவி இப்படி செஞ்சு பாருங்க..! செம டேஸ்டா இருக்கும்..

செய்முறை – Easy Chicken Gravy Recipes in Tamil:Chicken Gravy

அடுப்பில் ஒரு வாணலி வைத்து அதில் இரண்டு டேபிள் ஸ்பூன் எண்ணெய் ஊற்றவும். எண்ணெய் நன்கு சூடானது ஒரு ஸ்பூன் சோம்பு சேர்க்கவும்.

சோம்பு நன்கு பொரிந்து வந்ததும் பொடிதாக நறுக்கி வைத்த பெரிய வெங்காயம், நீளமாக கட் செய்த இரண்டு பச்சை மிளகாய் மற்றும் கருவேப்பிலை ஆகியவற்றை சேர்த்து பொன்னிறமாக வதக்கவும்.

வெங்காயம் பொன்னிறமாக வதங்கிய பிறகு இஞ்சி பூண்டு விழுது ஒரு ஸ்பூன், மஞ்சள் தூள் ½ ஸ்பூன் மற்றும் உப்பு தேவையான அளவு சேர்த்து நன்றாக வதக்கிக்கொள்ளவும்.

இஞ்சி பூண்டு விழுதினை பச்சை வாசனை நீங்கிய பிறகு சிக்கனை சேர்த்து 1 நிமிடம் வதக்க வேண்டும்

பிறகு பொடிதாக நறுக்கி வைத்த தக்காளியை இதனுடன் சேர்த்து 1 நிமிடம் வதக்க வேண்டும்.

பின் இதனுடன் இரண்டு டேபிள் ஸ்பூன் மிளகாய் தூள், மூன்று டேபிள் ஸ்பூன் மல்லி தூள், ஒரு டேபிள் ஸ்பூன் மிளகு தூள் இந்த மசாலா பொருட்கள் அனைத்தும் சேர்த்து நன்றாக கிளறிவிடவும்.

பிறகு ஒரு கப் தண்ணீர் மற்றும் தேவையான அளவு உப்பு சேர்த்து குறைவான தீயில் 15 நிமிடங்கள் சிக்கனை நன்றாக வேகவைக்கவும்.

சிக்கன் 15 நிமிடம் வெந்த பிறகு ஒரு டிஸ்போன் கரம் மசாலா மற்றும் பொடிதாக நறுக்கிய கொத்தமல்லி இலை ஆகியவற்றை சேர்த்து நன்றாக கிளறிவிடவும்.

இதையும் கிளிக் செய்து படியுங்கள் 👇
சுவையிலும் சரி, சத்திலும் சரி இந்த சட்னியை அடிச்சுக்க முடியாது..

இன்னொரு அடுப்பில் ஒரு சிறிய வாணலியை வைத்து அதில் ஒரு டேபிள் ஸ்பூன் எண்ணெய் ஊற்றவும், எண்ணெய் சூடானதும் பொடிதாக நறுக்கி வைத்த பூண்டை செய்து ஒரு நிமிடம் வதக்கவும் பின் அதனுடன் காஷ்மீரி மிளகாய் தூள் இரண்டு ஸ்பூன் சேர்த்து வதக்கி சிக்கன் கிரேவியை ஊற்றி கிளறிவிடவும். பின் இரண்டு நிமிடம் சிக்கன் கிரேவியை வேகவைத்து இறக்கினால் சிக்கன் கிரேவி தயார்.

இந்த சிக்கன் கிரேவியை சாதம், சப்பாத்தி, இட்லி, தோசை போன்றவற்றிக்கு சைடிஷாக தொட்டுக்கொண்டு சாப்பிடலாம் மிகவும் நன்றாக இருக்கும்.

இதுபோன்ற சுவையுள்ள சமையல் குறிப்புகளை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> Samayal Kurippugal
Advertisement