3 உருளைக்கிழங்கு மட்டும் இருந்தால் போதும் மிகவும் சுவையான டிஸ் செஞ்சி சாப்பிடலாம்..!

Easy Potato Recipes in Tamil

இன்றைய சமையல் குறிப்பு பதிவில் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி சாப்பிட கூடிய ஒரு சூப்பரான டிஸ் செய்வது எப்படி என்பதை பற்றி தான் பார்க்க போகின்றோம். வீட்டில் இருப்பவர்களுக்கு எப்பொழுதும் ஒரே மாதிரியாக செய்து கொடுக்கிறீர்களா..? அப்போ இந்த பதிவு உங்களுக்கு தான். உங்கள் வீட்டில் 3 உருளைக்கிழங்கு மட்டும் இருந்தால் போதும். அனைவரும் விரும்பி சாப்பிட கூடிய டிஷ் செய்து அசத்தலாம். வாங்க நண்பர்களே அது எப்படி செய்வது என்று தெரிந்து கொள்வோம்.

உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே👇https://bit.ly/3Bfc0Gl

Delicious Potato Dish in Tamil:

 Delicious Potato Dish in Tamil

 1. உருளைக்கிழங்கு – 3
 2. வெங்காயம் – 2
 3. குடை மிளகாய் – 1
 4. மிளகு தூள் – 1 ஸ்பூன்
 5. பால் – 1.1/2  கப்
 6. சர்க்கரை – 1 ஸ்பூன்
 7. பிரட் தூள் – தேவையான அளவு
 8. முட்டை – 5
 9. கடலை மாவு – 1 கப்
 10. உப்பு – தேவையான அளவு
 11. எண்ணெய் – தேவையான அளவு
உருளைக்கிழங்கை வைத்து மிகவும் சுவையான Break Fast இப்படி செஞ்சி சாப்பிட்டு பாருங்க..!

உருளைக்கிழங்கை வேக வைக்கவும்:

உருளைக்கிழங்கை வேக வைக்கவும்

முதலில் ஒரு பாத்திரத்தை அடுப்பில் வைத்து அதில் தேவையான அளவு தண்ணீர் ஊற்றி அதில் உருளைக்கிழங்கை 2 பாதியாக வெட்டி வேக வைக்க வேண்டும்.

உருளைக்கிழங்கு வெந்ததும் அதை எடுத்து ஆறவிட்டு, பின் அதன் தோலை நீக்கி விட்டு மசித்து கொள்ள வேண்டும்.

கடாயை அடுப்பில் வைக்கவும்:

கடாயை அடுப்பில் வைக்கவும்

பின் ஒரு கடாயை அடுப்பில் வைத்து அதில் தேவையான அளவு எண்ணெய் ஊற்றி கொள்ள வேண்டும். பின் அதில் வெங்காயத்தை பொடிப்பொடியாக நறுக்கி சேர்த்து கொள்ள வேண்டும். வெங்காயம் நன்றாக வதங்கியதும் அதில் குடை மிளகாயையும் பொடிப்பொடியாக நறுக்கி சேர்த்து நன்றாக வதக்க வேண்டும்.

இரண்டும் நன்றாக வதங்கியதும் அதை நாம் மசித்து வைத்துள்ள உருளைக்கிழங்கில் சேர்த்து கொள்ள வேண்டும். பின் அதில் மிளகு தூள் மற்றும் உப்பு தேவையான அளவு சேர்த்து நன்றாக கலந்து கொள்ள வேண்டும்.

சுவையான மொறு மொறு சோயா கட்லெட் செய்ய தெரியுமா..?

முட்டை எடுத்து கொள்ளவும்:

முட்டை எடுத்து கொள்ளவும்

பின் ஒரு பாத்திரத்தில் 2 முட்டையை உடைத்து ஊற்ற வேண்டும். பின் அதில் சிறிதளவு உப்பு சேர்த்து கலந்து விட வேண்டும். பிறகு 2 கப் பால் சேர்த்து கொள்ளவும். அடுத்து அதில் கடலை மாவு 1 கப் மற்றும் சர்க்கரை 1 ஸ்பூன் சேர்த்து தோசை மாவு பதத்திற்கு கலந்து கொள்ள வேண்டும்.

பின் தோசை கல்லை அடுப்பில் வைத்து எண்ணெய் தடவி கொள்ள வேண்டும். அடுத்து நாம் கரைத்து வைத்துள்ள மாவை தோசை போல ஊற்றி கொள்ள வேண்டும். எல்லா மாவையும் அதேபோல ஊற்றி எடுத்து கொள்ள வேண்டும்.

மசாலாவை வைக்கவும்: 

மசாலாவை வைக்கவும்

பின் இந்த தோசையில் நாம் தயார் செய்து வைத்துள்ள உருளைக்கிழங்கு மசாலாவை இதில் வைத்து மேல் படத்தில் உள்ளது போல செய்து கொள்ள வேண்டும்.

பின் ஒரு பாத்திரத்தில் 3 முட்டையை உடைத்து ஊற்ற வேண்டும். பின் அதில் 2 ஸ்பூன் அளவிற்கு கடலை மாவை போட்டு அதனுடன் உப்பு சிறிதளவு சேர்த்து கலந்து கொள்ள வேண்டும்.

உருளைகிழங்கு பட்டாணி மசாலா ஒரு முறை இப்படி செய்து பாருங்கள்

 

பிரட் தூள் எடுத்து கொள்ள வேண்டும்

பின் ஒரு கிண்ணத்தில் பிரட் தூள் எடுத்து கொள்ள வேண்டும். அடுத்து நாம் தயார் செய்து வைத்துள்ள தோசையை இதில் நனைத்து பின் பிரட் தூளை தூவி எடுத்து கொள்ள வேண்டும். அனைத்தையும் இதுபோல செய்து கொள்ள வேண்டும்.

பின் கடாயை அடுப்பில் வைத்து தேவையான அளவு எண்ணெய் ஊற்றி நாம் செய்து வைத்துள்ளதை அதில் போட்டு பொன்னிறமாக பொறித்து எடுத்து கொள்ள வேண்டும்.

அவ்வளவு தான் இதை உங்கள் வீட்டில் இருப்பவர்களுக்கு பரிமாறலாம். அனைவரும் விரும்பி சாப்பிடுவார்கள். நீளும் இதேபோல செய்து சாப்பிட்டு பாருங்கள்.

என்னது உருளைக்கிழங்கை வைத்து இப்படி கூட பண்ணலாமா..?

 

இதுபோன்ற சுவையுள்ள சமையல் குறிப்புகளை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> Samayal Kurippugal